herzindagi
image

ரமலான் ஸ்பெஷல் : மெய்மறக்கும் சுவையில் ஐதராபாத் மட்டன் ஹலீம்

புனித ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்கள் நோன்பு திறப்பின் போது சாப்பிடும் மட்டன் எப்படி செய்வது என இந்த பதிவில் பார்க்கலாம். ஐதராபாத் மட்டன் ஹலீமின் ருசியே தனி. இறைச்சியும், பருப்பும் கலந்து தயாரித்து அட டா ஒரு முறை சாப்பிட்டால் வாழ்நாள் முழுக்க மறக்க மாட்டீர்கள்.
Editorial
Updated:- 2025-03-07, 20:23 IST

புனித ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்கள் நோன்பு திறப்பின் போது உட்கொள்ளும் பிரதான உணவுகளில் ஹலீம் முதன்மை வகிக்கிறது. மட்டன் அல்லது சிக்கனுடன் பருப்பு போட்டு 8 மணி நேரம் மெல்ல கொதிக்கவிட்ட ஹலீமை சுட சுட சாப்பிடுவதற்கு வரிசை கட்டி காத்திருப்பார்கள். பிற ஊர்களில் கிடைக்கும் ஹலீமை விட ஐதராபாத்தில் கிடைக்கும் ஹலீமின் ருசி தனித்துவமானது. நாம் இந்த பதிவில் ஐதராபாத் ஹலீமை சுவை குறையாமல் விரைவில் தயாரிப்பது எப்படி என்பதை பார்க்கலாம்.

hyderabadi haleem

ஐதராபாத் ஹலீம் செய்ய தேவையானவை

  • மட்டன்
  • கோதுமை ரவை
  • உளுத்தம் பருப்பு
  • கடலைப் பருப்பு
  • நல்லெண்ணெய்
  • நெய்
  • ஏலக்காய்
  • பட்டை
  • கிராம்பு
  • பிரியாணி இலை
  • மஞ்சள் தூள்
  • மிளகாய் தூய்
  • வெங்காயம்
  • முந்திரி
  • உப்பு
  • இஞ்சி பூண்டு விழுது
  • மிளகு
  • கரம் மசாலா
  • பச்சை மிளகாய்
  • தயிர்
  • தனியா தூள்
  • சீரகத் தூள்
  • கொத்தமல்லி
  • புதினா

குறிப்பு : தலா அரை கப் உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, ஒரு கப் கோதுமை ரவையை நன்கு கழுவி தண்ணீரில் 2 மணி நேரம் ஊறவைக்கவும்.

ஐதராபாத் ஹலீம் செய்முறை

  • குக்கரில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி ஒரு பிரியாணி இலை, மூன்று ஏலக்காய், ஐந்து கிராம்பு, இரண்டு துண்டு பட்டை போட்டு இரண்டு வெங்காயத்தை நிலவு வடிவத்தில் வெட்டி சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கவும்.
  • முன்னதாக எலும்பு இல்லாத ஒரு கிலோ மட்டனை சுத்தப்படுத்தி கொள்ளவும். வெங்காயம் வதங்கியவுன் மட்டனை சேர்த்து முக்கால் டீஸ்பூன் மஞ்சள் தூள், இரண்டு டீஸ்பூன் மிளகாய் தூள், ஒரு டீஸ்பூன் உப்பு, ஒரு டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது போட்டு கலந்துவிடவும்.
  • கால்வாசி அளவு தண்ணீர் ஊற்றி குக்கரை மூடிவிட்டு மட்டன் நன்கு வேகும் வரை குறைந்தது 4 விசிலுக்கு காத்திருங்கள்.
  • மற்றொரு குக்கரில் ஊறவைத்த உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, கோதுமை ரவை போட்டு அரை ஸ்பூன் உப்பு சேர்த்து அரை டீஸ்பூன் மஞ்சள் தூள், அரை டீஸ்பூன் முழு மிளகும் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 5 விசிலுக்கு வேக விடுங்கள்.
  • மட்டன் வெந்ததும் அதை வேறு பாத்திரத்திற்கு மாற்றி சூடு குறைந்தவுடன் அதை பிச்சு போட்டு ஹலீம் செய்வதற்கு தயாராக்கவும்.
  • கடாயில் இரண்டு ஸ்பூன் நெய் ஊற்றி பிச்சு போட்ட மட்டன், மட்டன் வெந்த தண்ணீர் ஊற்றி ஒரு டீஸ்பூன் தனியா தூள், ஒரு டீஸ்பூன் சீரக தூள், அரை டீஸ்பூன் கரம் மசாலா தூள், ஒரு கப் தயிர் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி கலந்துவிடுங்கள்.
  • பருப்பு, கோதுமை வெந்தவுடன் அவற்றை நன்கு மசித்துவிட்டு மட்டனுடன் சேர்க்கவும்.
  • இதோடு இரண்டு நறுக்கிய பச்சை மிளகாய், ஒரு கை நிறைய கொத்தமல்லி, புதினா போட்டு 25 முதல் 30 நிமிடங்களுக்கு மிதமான சூட்டில் கொதிக்கவிடவும்.
  • ஹலீம் தயாரானவுடன் இரண்டு ஸ்பூன் நெய்யில் கால் டீஸ்பூன் மிளகாய் போட்டு சூடுபடுத்தி ஊற்றவும்.
  • மேலே வறுத்த வெங்காயம், முந்திரி பருப்பு போட்டு சுட சுட பரிமாறி ஐதராபாத் ஹலீமின் ருசியில் மெய்மறந்திடுங்கள்.

மேலும் படிங்க  பள்ளிவாசல் நோன்பு கஞ்சி வீட்டிலேயே செய்யலாம்; ரமலான் மாத ஸ்பெஷல்

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]