herzindagi
image

காரசாரமாகவும் ருசியாகவும் மசால் பொடி செய்யணுமா? இந்த பொருட்களையெல்லாம் மறக்காமல் சேர்த்திடுங்க!

சாம்பார், கார குழம்பு போன்ற அனைத்திற்கும் மசால் பொடி சேர்த்துக் கொள்வோம். இதற்கு கடைகளில் வாங்கி உபயோகிப்பதை விட வீட்டிலேயே தயார் செய்து சாப்பிடும் போது ருசி வேற லெவலில் இருக்கும்.
Editorial
Updated:- 2025-09-17, 15:09 IST

இன்றைக்கு கடைகளில் சாம்பார் பொடி, மசால் பொடி, காரக்குழம்பு பொடி, கரம் மசாலா என விதவிதமாக மசாலாப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் முன்பெல்லாம் அப்படி கிடையாது. வீட்டில் எளிமையான முறையில் தயாரிக்கும் மசாலாப் பொடிகளை மட்டும் தான் உபயோகித்து வந்துள்ளனர். இவை உணவிற்கு சுவையோடு உடலுக்கும் ஆற்றலை அளிக்கும் வகையில் அமைந்திருக்கும். இதுபோன்று நீங்களும் எளிமையான முறையில் மசாலா பொடி செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்கள் என்றால், இந்த எளிய சமையல் குறிப்புகள் உங்களுக்கு உதவியாக இருக்கும்.

மேலும் படிக்க:  ஆரோக்கியமான முருங்கை இலை துவையல் ரெசிபி டிப்ஸ் இதோ 


மசால் பொடி தயார் செய்யும் முறை:

  • மஞ்சள் கிழங்கு - 50 கிராம்
  • மிளகாய் வத்தல் - 200 கிராம்
  • காஷ்மீரி மிளகாய் - 100 கிராம்.
  • வர கொத்தமல்லி ( தனியா) - 50 கிராம்
  • துவரம் பருப்பு - 50 கிராம்
  • கடலைப்பருப்பு - 50 கிராம்
  • மிளகு - 25 கிராம்
  • வெந்தயம் - 20 கிராம்
  • சோம்பு - 30 கிராம்
  • அரிசி- 50 கிராம்
  • கடுகு - 10 கிராம்
  • சீரகம் - 30 கிராம்
  • பட்டை, பிரிஞ்சி இலை, பூ- 100 கிராம்

மேலும் படிக்க: முதல் முறையாக சமைக்கப் போறீங்களா?  பயனுள்ள இந்த சமையல் குறிப்புகளை தெரிஞ்சிட்டு செய்யுங்கள்

  • வீட்டிலேயே குழம்பிற்குத் தேவையான மசால் பொடி செய்வதற்கு முதலில் மிளகாய் வத்தல் மற்றும் வர கொத்தமல்லி அதாவது தனியாவை வெயிலில் நன்கு காய வைக்க வேண்டும்.
  • பின்னர் ஒரு கடாயை மிதமான சூட்டில் வைத்து மிளகாய் வத்தல் மற்றும் காஷ்மீரி வத்தலை நன்கு வறுத்துக் கொள்ளவும்.
  • இதனையடுத்து வெந்தயம், சோம்பு, அரிசி, கடுகு, சீரகம், மிளகு, துவரம் பருப்பு, உளுந்தப்பருப்பு போன்ற அனைத்தையும் தனித்தனியாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • இந்த அனைத்துப் பொருட்களும் ஆறிய பின்னதாக மிக்ஸி ஜாரில் அரைத்துக் கொள்ளலாம். அல்லது ரைஸ் மில்லிற்கு எடுத்துச் சென்றும் அரைத்துக் கொண்டால் போதும். சுவையான மற்றும் காரசாரமான மசால் பொடி ரெடி. இவற்றை ஒரு டப்பாவில் அடைத்து வைத்து சில மாதங்கள் வரை பயன்படுத்திக் கொள்ள முடியும்.

மேலும் படிக்க: சமையலை ரொம்ப ஈஸியாக்கணுமா? இந்த குக்கிங் டிப்ஸ்களைப் பாலோ பண்ணுங்க

ஒருவேளை உங்களது வீடுகளில் அதிக நபர்கள் இருக்கும் பட்சத்தில் 1 கிலோ வரமல்லிக்கு 1 கிலோ அல்லது முக்கால் கிலோ அளவிற்கு மிளகாய் வத்தல் சேர்த்துக் கொள்ளலாம். பார்ப்பதற்கு கலர்புல்லாகவும் காரசாரமாகவும் இருக்கும்.

Image Credit - Freepik

 

 

 

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]