herzindagi
image

ரசித்து ருசிக்க சூப்பரான மட்டன் கோலா உருண்டை ரெசிபி!

அரை கிலோ மட்டன் கொத்துக் கறி இருந்தால் போதும் வார விடுமுறையில் கோலா உருண்டை தயாரித்து குடும்பத்தினரை ஜமாய்த்து விடலாம். ரசம் சாதத்துடன் சாப்பிடுவதற்கு அவ்வளவு ருசியாக இருக்கும்.
Editorial
Updated:- 2024-11-05, 19:31 IST

தமிழகத்தில் நடைபெறும் பெரும்பாலான அசைவ விருந்துகளில் நாம் ருசிக்க கூடிய உணவு கோலா உருண்டை. வெளியே மொறுமொறுப்பாகவும் உள்ளே மிருதுவாகவும் ருசிப்பதற்கு அட்டகாசமாக இருக்கும். வார விடுமுறையில் எப்போதும் பிரியாணி ருசிக்க வேண்டிய அவசியமில்லை. அரை கிலோ மட்டன் கொத்துக் கறி (கீமா) இருந்தால் ஒரு மணி நேரத்திற்குள் கோலா உருண்டைகளை தயாரித்து ஒரு பிடி பிடிக்கலாம். ரசம் சாதத்திற்கு கோலா உருண்டைகளை சைட் டிஷ் ஆக வைத்து சாப்பிட்டால் எத்தனை சாப்பிடுகிறோம் என்றே தெரியாது. சில சில தவறுகளால் எதிர்பார்த்த பதத்தில் கோலா உருண்டை செய்ய தவறி இருந்தால் இந்த ரெசிபியை பின்பற்றி செய்யுங்கள்.

kola urundai recipe

மட்டன் கோலா உருண்டை செய்ய தேவையானவை

  • மட்டன் கொத்துக்கறி
  • முட்டை
  • பொட்டுக்கடலை பவுடர்
  • வெங்காயம்
  • குண்டு மிளகாய்
  • முழு தனியா
  • முழு கரம் மசாலா
  • சோம்பு
  • மிளகு
  • இஞ்சி-பூண்டு பேஸ்ட்
  • மஞ்சள் தூள்
  • மிளகாய் தூள்
  • தனியா தூள்
  • உப்பு
  • கடலெண்ணெய்
  • கறிவேப்பிலை
  • கொத்தமல்லி
  • நல்லெண்ணெய்

மட்டன் கோலா உருண்டை செய்முறை

  • கடாயில் இரண்டு ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி அது சூடானதும் ஒரு ஸ்பூன் சோம்பு, ஒரு ஸ்பூன் மிளகு, எட்டு குண்டு மிளகாய், முழு கரம் மசாலா, ஒரு ஸ்பூன் முழு தனியா, தேவையான அளவு கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.
  • இரண்டு நிமிடங்கள் வதக்கியவுடன் ஒரு பெரிய வெங்காயத்தை பொடிதாக நறுக்கி போட்டு வதக்கவும். கோலா உருண்டைக்கு வெங்காயத்தை முற்றிலும் வதக்கி விடக் கூடாது. 50 விழுக்காடு வதக்கினால் போதும்.
  • இதன் பிறகு இஞ்சி பூண்டு பேஸ்ட் ஒரு ஸ்பூன் சேர்த்து பச்சை வாடை போன பிறகு மசாலா பொருட்கள் போடுங்கள்.
  • கால் டீஸ்பூன் மஞ்சள் தூள், தலா ஒரு ஸ்பூன் தனியா தூள், மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து கலந்துவிடவும்.
  • அடுத்ததாக அரை கிலோ மட்டன் கொத்துக் கறியை போடுங்கள். கொழுப்பு குறைவாக கொத்துக் கறி வாங்கி சுத்தப்படுத்தி சேர்க்கவும்.
  • சுமார் இருபது நிமிடங்களுக்கு மட்டன் வேகட்டும். தண்ணீர் ஊற்றி வேகவிட்டால் கோலா உருண்டை செய்ய முடியாது.
  • இறுதியாக கொத்தமல்லி போட்டு அடுப்பில் இருந்து இறக்கி விடுங்கள். சூடு குறைந்தவுடன் கால் கிலோவாக மிக்ஸியில் போட்டு அரைத்து எடுக்கவும்.
  • இதில் 5 ஸ்பூன் பொட்டுக்கடலை பவுடர் போடுங்கள். மொறுமொறுப்புக்கு இது உதவும்.
  • இதோடு ஒரு முட்டையை உடைத்து ஊற்றி பிசைந்தால் கோலா உருண்டைக்கான மாவு கெட்டியான பக்குவத்தில் இருக்கும்.
  • இரண்டு கோலி குண்டு சைஸில் கோலா உருண்டை உருட்டி வைக்கவும்.
  • கடாயில் கடலெண்ணெய் ஊற்றி நன்கு சூடானதும் கோலா உருண்டைகளை ஒவ்வொன்றாக போட்டு 4-5 நிமிடங்களில் வறுத்து எடுக்கவும்.

மேலும் படிங்க கேரள ஸ்பெஷல் சட்டி பத்திரி ரெசிபி! ஆரோக்கியமான பிரேக் பாஸ்ட்

இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]