ஊட்டச்சத்து நிறைந்த உணவு செய்முறையில் நாம் அடுத்த பார்க்கப் போவது கதம்ப தோசை. கதம்ப என்றால் கலவை என்று பொருள். இது ஒரு மல்டி கிரெயின் தோசையாகும். இயல்பாக நமது வீட்டில் தோசை மாவு தயாரிக்க உளுந்து, அரிசி பயன்படுத்துவோம். இவை இரண்டுமே நம் உடலுகு பெரிதளவு ஆரோக்கியம் தருவதில்லை. அதேநேரம் மல்டி கிரெயின் தோசை குழந்தைகளுக்கு பிடிக்காது என நினைப்போம். ஆனால் நாசுக்காக தோசை மாவில் தானியம் கலந்து கொடுத்தால் அவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. எனவே ஆரோக்கியம் நிறைந்த கதம்ப தோசை எப்படி செய்வது என பார்க்கலாம். இதற்கு நம்மிடம் வீட்டில் அரைத்த தோசை மாவு இருந்தால் போதுமானது.
![instant kadamba dosa]()
கதம்ப தோசை செய்யத் தேவையானவை
- தோசை மாவு
- ராகி பவுடர்
- ஓட்ஸ்
- பார்லி
- ஆளி விதை
- உப்பு
- தண்ணீர்
- கொத்தமல்லி
- பூண்டு
- பச்சை மிளகாய்
- கறிவேப்பிலை
- கடலெண்ணெய்
- கடுகு
- உளுத்தம் பருப்பு
- பெருங்காயத் தூள்
- காய்ந்த மிளகாய்
மேலும் படிங்க மஹாராஷ்டிரா ஸ்பெஷல் வரன் பாத் செய்முறை
கதம்ப தோசை செய்முறை
- கதம்ப தோசை தயாரிக்க தோசை மாவுடன் நான்கு முதல் ஐந்து பவுடர்கள் சேர்க்க வேண்டும். ஒரு கிலோ தோசை மாவு தான் கதம்ப தோசைக்கான பேஸ்.
- தோசை மாவுடன் ஐந்து ஸ்பூன் ராகி படவுர், கடையில் வாங்கிய ஓட்ஸை மிக்ஸியில் போட்டு அரைத்து அதில் இருந்து ஐந்து ஸ்பூன், ஒரு டேபிள் ஸ்பூன் பார்லி, மூன்று ஸ்பூன் கோதுமை பவுடர், மூன்று ஸ்பூன் அளி விதை பவுடர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்க்கவும்
- இந்த ஆளி விதையை பவுடராக அரைத்து தண்ணீரில் கலந்தோ அல்லது தண்ணீரில் ஊற வைத்து வயிறு தொடர்பான பிரச்சினை உள்ளவர்களுக்குக் கொடுத்தால் அது மிகுந்த பலனை அளிக்கும்.
- நான்கு மணி நேரம் புளித்த தோசை மாவுடன் பார்லி, ஓட்ஸ், கோதுமை, ராகி போன்றவை சேர்ப்பது உடலுக்கு நிறைய சத்து கொடுக்கும். அரிசி, உளுத்தம் பருப்பில் துளியும் நார்ச்சத்து கிடையாது.
- தற்போது மாவின் சுவையை அதிகரிக்க சில விஷயங்களை சேர்க்கப் போகிறோம்.
- மிக்ஸி ஜாரில் ஒரு கட்டு கொத்தமல்லி, நான்கு பச்சை மிளகாய், ஒரு கொத்து கறிவேப்பிலை, மூன்று ஸ்பூன் இஞ்சி போட்டு கால் டம்ளர் தண்ணீர் உற்றி பேஸ்ட் போல அரைக்கவும். இதை அப்படியே கதம்ப தோசை மாவில் சேர்க்கவும்
- தோசை ஊத்தும் பதத்திற்கு கதம்ப தோசை மாவை தயார்படுத்துங்கள். இறுதியாக மூன்று ஸ்பூன் பெருங்காயத் தூள் சேர்க்கவும். மூன்று நாட்களுக்கு கூட குளிர்பதன பெட்டியில் இதை வைத்துச் சாப்பிடலாம்.
- இதன் பிறகு கதம்ப தோசையுடன் தொட்டு சாப்பிட வேர்க்கடலை சட்னி தயாரிக்கலாம்.
- உப்பு இல்லாத வறுத்த வேர்க்கடலை 100 கிராம், எட்டு காய்ந்த மிளகாய், 30 கிராம் உறித்த பூண்டு, தேவையான அளவு உப்பு, அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி அரைக்கவும்.
- பேனில் ஐந்து ஸ்பூன் கடலெண்ணெய் ஊற்றி அது சூடான பிறகு ஒரு டீஸ்பூன் கடுகு, ஒரு டீஸ்பூன் உளுத்தம் பருப்பு போட்டு தாளித்து சட்னியுடன் கலந்த பிறகு அரை டீஸ்பூன் பெருங்காயம் சேர்க்கவும்.
மேலும் படிங்க ஆந்திரா ஸ்பெஷல் பெசரட்டு செய்முறை
- தற்போது வழக்கம் போல தோசைக்கல்-ல் மாவு ஊத்தி கதம்ப தோசையை சுட்டு பரிமாறவும்.