herzindagi
image

உடலை ஆற்றலுடன் வைத்திருக்கும் மாப்பிள்ளை சம்பா இட்லி; சுலபமாக செய்யும் முறை

எவ்வித உடல் நல பாதிப்பும் இன்றி வாழ வேண்டும் என்றால், அன்றாட உணவு முறையில் கட்டாயம் மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும். இதற்கு சிறு தானிய உணவுகள் தான் சிறந்ததாக அமைகிறது.
Editorial
Updated:- 2025-08-29, 16:19 IST

வெள்ளை அரிசி சாதம் எப்பொழுது சாப்பிட ஆரம்பித்தோமோ? அன்றைய நாள் முதல் பல உடல் நல பிரச்சனைகளை விலைக் கொடுத்து வாங்கி விட்டோம் என்று தான் கூற வேண்டும். முன்பெல்லாம் கம்பு, கேழ்வரகு, தினை, சோளம் போன்ற சிறு தானியங்களைக் கொண்டு செய்யப்படும் கூழ், சாப்பாடு போன்றவற்றை மக்கள் அதிகளவில் சாப்பிட்டு வந்தனர். 70 வயதானாலும் உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதற்கு பேருதவியாக இருந்தது.

ஆனால் இன்றைக்கு 30 வயதைக் கடப்பதற்குள் எத்தனை பாதிப்புகளை சந்திக்க நேரிடுகிறது. இதிலிருந்து தப்பித்து உடல் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் என்றால் சிறு தானிய உணவுகளைக் கொண்டு செய்யப்படும் உணவு வகைகளைப் பயன்படுத்திப் பாருங்கள். இன்றைக்கு மாப்பிள்ளை சம்பா அரிசியின் பயன்கள் மற்றும் இதைப் பயன்படுத்தி இட்லி எப்படி செய்வது? என்பது குறித்து அறிந்துக் கொள்ளலாம் வாருங்கள்.

மேலும் படிக்க: காரசாரமான மிளகாய் வத்தல் சிக்கன் ப்ரை ரெசிபி டிப்ஸ் இங்கே.

மாப்பிள்ளை சம்பா இட்லி:

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் காலை உணவுகளில் முக்கியமானது இட்லி. வழக்கமான இட்லிகளைச் சாப்பிட்டு சளிப்பாகி விட வேண்டும். சிறுதானியங்களைக் கொண்டு செய்யப்படும் இட்லியை ஒருமுறை சாப்பிட்டுப் பாருங்கள்.

மேலும் படிக்க: மாதவிடாய் வலி நீக்குவது முதல் பெண்களின் ஆரோக்கியம் காக்கும் கருப்பு உளுந்து கஞ்சி

தேவையான பொருட்கள்:

  • மாப்பிள்ளை சம்பா அரிசி - 6 கப்
  • பச்சரிசி - 2 கப்
  • உளுந்து - 1 கப்
  • வெந்தயம் - சிறிதளவு

 

செய்முறை :

  • வழக்கமாக செய்யும் இட்லிக்கு மாவு அரைப்பது போன்று உளுந்து மற்றும் வெந்தயத்தை 2 மணி நேரத்திற்காவது ஊற வைக்கவும்.
  • மாப்பிள்ளை அரிசியை நன்கு ஊற வைக்க வேண்டும் என்றால் அதிக நேரம் தேவை. ஒரு 5 மணி நேரமாவது மாப்பிள்ளை சம்பா அரிசி மற்றும் பச்சரிசி இரண்டையும் தண்ணீர் ஊற்றி ஊற வைக்க வேண்டும்.
  • முதலில் ஊற வைத்துள்ள வெந்தயம் மற்றும் உளுந்தை நைஸாக அரைத்துக் கொள்ளவும்.

  • பின்னர் ஊற வைத்துள்ள அரிசியை கொர கொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும். என்ன தான் 5 மணி நேரத்திற்கு மேலாக ஊற வைத்தாலும் அரைப்பதற்கு நேரம் எடுக்கும். எனவே கொஞ்சம் கொஞ்சமாக இடைவெளி விட்டு அரைப்பது நல்லது.
  • அரிசி மற்றும் உளுந்து மாவு இரண்டையும் உப்பு சேர்த்து கலந்துக் கொள்ளவும். மாவு புளித்தன்மைக்கு வந்ததும் இட்லி பாத்திரத்தில் இட்லியை ஊற்றி வேக வைத்து எடுத்தால் போதும். சுவையான மற்றும் ஆற்றல் நிறைந்த மாப்பிள்ளை சம்பா இட்லி ரெடி.

மேலும் படிக்க: உணவில் சுவையை கூட்ட சிட்ரிக் அமிலத்தை எப்படி சேர்க்கலாம் என்பதை பார்க்கலாம்


மாப்பிள்ளை சம்பா அரிசியின் நன்மைகள்:

மாப்பிள்ளை சம்பா அரிசியில் உள்ள சிவப்பு நிறத்தில் லைகோபீன் என்ற சத்துக்கள் அதிகளவில் உள்ளது. மேலும் புரதம், நார்ச்சத்து, இரும்புச்சத்து, துத்தநாக சத்துகளும் அதிகளவில் உள்ளதால் உடலுக்குத் தேவையான ஆற்றலை பெற உதவுவதோடு நாள் முழுவதும் புத்துணர்ச்சியாக இருக்க உதவுகிறது.

 

 

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]