herzindagi
flatbread

Chocolate Cake : கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கு சாக்லேட் கேக் !

கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு கேக் செய்ய விருப்பமா ? இதோ உங்களுக்கான சாக்லேட் கேக் ரெசிபி
Editorial
Updated:- 2023-12-17, 15:53 IST

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் விதவிதமான கேக்-ற்கு பஞ்சமே இருக்காது. கிறிஸ்துவ மதத்தைப் பின்பற்றும் ஒவ்வொரு வீட்டிலும் கேக் செய்தோ அல்லது கடையில் இருந்து கேக் வாங்கியோ கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடுவது வழக்கம். அந்த வகையில் வீட்டிலேயே எப்படி சாக்லேட் கேக் செய்வது என எளிய வழிமுறைகளைப் பகிர்ந்துள்ளோம். கேக் தயாரித்த பிறகு உங்களுக்குப் பிடித்த உலர் பலங்கள், கிரீம்கள், ஜெம்ஸ் சேர்த்து அதை ருசிக்கலாம்.

சாக்லேட் கேக் தேவையான பொருட்கள்

Chocolate Cake piece

  • 2 கப் மாவு
  • 1 1/2 டீஸ்பூன் பேக்கிங் பவுடர்
  • 1 1/2 டீஸ்பூன் பேக்கிங் சோடா
  • சர்க்கரை
  • 4 டீஸ்பூன் சாக்லேட் பவுடர்
  • உப்பு தேவையான அளவு
  • இரண்டு முட்டை
  • ஒரு கப் பால்
  • 3 டீஸ்பூன் காய்கறி எண்ணெய்
  • 2 டீஸ்பூன் வெண்ணிலா சாறு

மேலும் படிங்க Kulfi Ice Cream : உள்ளங்களை கொள்ளையடிக்கும் குல்ஃபி!

கிளாசிக்கல் சாக்லேட் கேக் தயார் செய்வது எப்படி

Gems in Chocolate Cake

  • ஒரு பெரிய பாத்திரத்தில் மாவு, சர்க்கரை, சாக்லேட் பவுடர், தேவையான அளவு உப்பு, பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர் ஆகியவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும்
  • இவற்றுடன் முட்டை, பால் மற்றும் வெண்ணிலாச்சாறு ஆகியவற்றை சேர்த்து கலவையினை கொண்டு இரண்டு மூன்று நிமிடங்களுக்கு கலக்க வேண்டும்
  • கேக் மாவை மெல்லியதாக்க சிறிதளவு வெதுவெதுப்பான தண்ணீரை சேருங்கள்
  • இதன்பிறகு 30 முதல் 40 நிமிடங்களுக்கு ஓவனில் கேக் கலவையை பேனில் வைத்து பேக்கிங் செய்யவும். அடுப்பின் வெப்பநிலையை 350 F (180 C) ஆக அமைக்கவும். 
  • ஒரு டூத் பிக்கை பயன்படுத்தி கேக் நன்றாக வெந்துள்ளதா என சோதித்துப் பார்க்கலாம்.
  • 10 நிமிடங்கள் கழித்து கேக் பேனை ஆற வைக்க வேண்டும். பிறகு நீங்கள் சாக்லேட் கேக் உண்டு ருசிக்கலாம்.

மேலும் படிங்க Mango Halwa - மாலை பொழுதை இனிமையாக்கிடும் மாம்பழ அல்வா

இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் இணைந்திருங்கள். 

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]