herzindagi
image

ஸ்பெஷல் செட்டிநாடு காடை மிளகு வறுவல் செய்முறை; ருசியோ வேற லெவல்

இந்த வார விடுமுறையில் வாய்க்கு காரசார சுவை கொடுக்க செட்டிநாடு காடை மிளகு வறுவல் செய்முறையை பார்ப்போம். காடை பார்ப்பதற்கு சிறிதாக இருந்தாலும் சிக்கனுக்கு இணையான ருசி கிடைக்கும்.
Editorial
Updated:- 2024-12-06, 22:04 IST

வழக்கமாக சிக்கன், மட்டன் கறி மட்டுமே சாப்பிடும் நபர்களுக்கு காடையின் ருசி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. வார விடுமுறையில் செட்டிநாடு காடை மிளகு வறுவல் தயாரித்து சாப்பிட்டு பாருங்கள். டேஸ்ட் அருமையாக இருக்கும். இது ஆரோக்கியமான உணவும் கூட. மூட்டு வலி, சரும பிரச்னைகளை தீர்க்கும் மருத்துவ குணம் கொண்டது. ஒரு காடை சராசரியாக 100 - 120 கிராமில் 100 ரூபாய்க்குள் கிடைக்கும். செட்டிநாடு ஸ்டைலில் சமைத்து மிளகு போட்டு சாப்பிட்டால் ருசியே தனித்துவம் தான். வாருங்கள் இதன் செய்முறையை பார்க்கலாம். சிக்கன் 65 போல் எண்ணெயில் வறுத்து எடுக்காமல் தோசைக்கல்லில் செய்ய போகிறோம்.

quail pepper fry

செட்டிநாடு காடை மிளகு வறுவல் செய்ய தேவையானவை

  • காடை
  • இஞ்சி பூண்டு பேஸ்ட்
  • தக்காளி
  • உப்பு
  • தேங்காய் எண்ணெய்
  • பச்சை மிளகாய்
  • தனியா தூள்
  • நெய்
  • வெங்காயம்
  • தக்காளி
  • தனியா தூள்
  • காய்ந்த மிளகாய்
  • பூண்டு
  • கொத்தமல்லி
  • பட்டை
  • ஏலக்காய்
  • கிராம்பு

மேலும் படிங்க நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் "மருந்து குழம்பு" செய்முறை

செட்டிநாடு காடை மிளகு வறுவல் செய்முறை

  • தோசைக்கல்லில் 4 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடுபடுத்தவும். எண்ணெய் சூடானதும் தலா இரண்டு பட்டை, கிராம்பு, ஏலக்காய் இடித்து போட்டு வறுக்கவும்.
  • அடுத்ததாக மூன்று வெங்காயத்தை பொடிதாக நறுக்கி சேர்த்து வதக்கவும். வெங்காயம் கொஞ்சம் வதங்கியவுடன் இரண்டு தக்காளி வெட்டி போடுங்கள்.
  • பச்சை வாடை போனதும் மசாலா பொருட்களை ஒவ்வொன்றாகப் போடலாம். ஒரு ஸ்பூன் சீரகம், இரண்டு ஸ்பூன் இஞ்சி-பூண்டு பேஸ்ட், இரண்டு பச்சை மிளகாய், மூன்று காய்ந்த மிளகாய் போடுங்கள்.
  • அனைத்தையும் கலந்துவிட்டு கொஞ்சம் வறுத்தபிறகு ஒரு ஸ்பூன் மல்லி தூள், கால் டீஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் தனியா தூள் சேர்க்கவும்.
  • இப்போது தண்ணீரில் கழுவிய ஒவ்வொரு காடையையும் நான்கு பீஸாக வெட்டி போடுங்கள்.
  • அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பு போட்டு காடையை வேக விடவும். 10 நிமிடங்களுக்கு தோசைக்கல்லை மூடுங்கள்.
  • காடை நன்கு வெந்த பிறகே வறுக்க போகிறோம். தோசைக்கல்லில் மூன்று ஸ்பூன் நெய் ஊற்றி, 10 பல் பூண்டு, ஒரு ஸ்பூன் மிளகு தூள் போட்டு கலந்துவிட்டு இரண்டு நிமிடங்களுக்கு அதிகமான தீயில் வறுக்கவும்.
  • கொத்தமல்லி போட்டு அடுப்பை ஆஃப் செய்யவும். சூப்பரான செட்டிநாடு காடை மிளகு வறுவல் ரெடி. 30-40 நிமிடங்களில் தயார் செய்துவிடலாம்.

இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர்ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]