herzindagi
image

குஸ் குஸ் ரெசிபி : 10 நிமிடத்தில் செய்யக் கூடிய எளிதான காலை உணவு

காலையில் அலுவலகத்திற்கு செல்லும் நேரத்தில் சமைப்பதற்கு நாம் சிரமப்படுவோம். அலுவலகம் சென்று சாப்பிட்டு கொள்ளலாம் என நினைப்போம். குஸ் குஸ் இருந்தால் 10 நிமிடத்தில் காலை உணவு தயாரித்துவிடலாம். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ராஜு குஸ் குஸ் சித்ரான்னம் சமைத்திருந்தார்.
Editorial
Updated:- 2025-06-20, 06:33 IST

காலையில் நேரத்திற்கு எழுந்தால் காலை உணவை சமைப்பதில் சிக்கல் இருக்காது. பணி முடித்துவிட்டு இரவில் தூங்குவதற்கு நேரம் எடுப்பதால் காலை உணவையே சில நேரங்களில் தவறவிடுகிறோம். அப்படியான நபர்களுக்கு வரப்பிரசாதம் இந்த குஸ் குஸ். 10 நிமிடங்களுக்குள் இதை சமைத்து சாப்பிட்டு அலுவலகத்திற்கு புறப்பட்டு விடலாம். குஸ் குஸ் பற்றி பலரும் கேள்விப்பட்டு இருக்க வாய்ப்பில்லை. குஸ் குஸ் வடக்கு ஆப்ரிக்காவில் மக்களின் பிராதன உணவாகும். குஸ் குஸ் கோதுமை வகையை சேர்ந்தது. ஐரோப்பிய நாடுகளில் இதன் ஊட்டச்சத்திற்காக மக்கள் உட்கொள்கின்றனர். குஸ் குஸ் தாவர வகை புரதம் அதிகளவு கொண்டுள்ளது. குஸ் குஸில் நார்ச்சத்து அதிகம், குறைந்த கிளைசெமிக் குறியீடு, அதிக நார்ச்சத்து உள்ளது. கொழுப்பை குறைக்கவும், உடலில் சர்க்கரை அளவுகளை கட்டுப்படுத்தவும் குஸ் குஸ் சாப்பிடுங்கள். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ராஜு குஸ் குஸ் வைத்து கர்நாடகா சித்ரான்னம் செய்திருந்தார். நமக்கு ஏற்றார் போல் குஸ் குஸ் எளிதில் சமைப்பது எப்படி என பார்க்கலாம்.

how to cook couscous

குஸ் குஸ் செய்ய தேவையானவை 

  • குஸ் குஸ்
  • நல்லெண்ணெய்
  • தண்ணீர்
  • கேரட் 
  • பீன்ஸ் 
  • குடை மிளகாய்
  • பச்சை மிளகாய் 
  • வெங்காயம்
  • இஞ்சி
  • பூண்டு 
  • மிளகாய் தூள் 
  • உப்பு

மேலும் படிங்க  சிலோன் லெவரியா சாப்பிட்டு இருக்கீங்களா ? பாரம்பரிய இனிப்பு பலகாரத்தை வீட்டில் ருசி பாருங்க

குஸ் குஸ் செய்முறை

  • பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்கவிடவும். அதே அளவு குஸ் குஸ் எடுத்து கொதிக்கும் போது தண்ணீரில் போட்டு அடுப்பின் சூட்டை குறைக்கவும். கொஞ்சமாக எண்ணெய் சேர்க்கவும். இதனால் குஸ் குஸ் உதிரி உதிரியாக வரும்.
  • அடுத்ததாக குஸ் குஸ் தாளித்துவிடலாம். பேனில் நான்கு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானது கடுகு, உளுந்தம் பருப்பு, கடலை பருப்பு தலா அரை ஸ்பூன் போடுங்கள். 
  • கடுகு வெடித்தவுடன் இஞ்சி-பூண்டு தலா 20 கிராம், பொடிதாக நறுக்கிய பச்சை மிளகாய், கொஞ்சம் கறிவேப்பிலை போட்டு வறுக்கவும்.
  • இதன் பிறகு நறுக்கிய வெங்காயம் (ஒன்று), பீன்ஸ், கேரட், குடை மிளகாய் போட்டு வேக விடுங்கள். இதன் பிறகு மஞ்சள் தூள் கால் டீஸ்பூன், உப்பு தேவையான அளவு, மிளகாய் தூள் ஒரு டீஸ்பூன் சேர்த்து கலந்துவிடுங்கள்.
  • இறுதியாக குஸ் குஸ் சேர்த்து எல்லாவற்றையும் நன்கு கலந்துவிடவும். இரண்டு நிமிடத்திற்கு மிதமான தீயில் கிளறிவிட்டால் குஸ் குஸ் ரெடி.

வெளிநாடுகளில் முட்டை குஸ் குஸ், சிக்கன் குஸ் குஸ் பிரபலம். நீங்களும் விரும்பினால் காய்கறி போடும் போது அசைவம் சேர்த்து (சிக்கனுக்கு) அரை தண்ணீர் டம்ளர் ஊற்றி வேகவிட்டு சிக்கன் குஸ் குஸ் செய்யவும். முட்டை குஸ் குஸ் செய்ய தண்ணீர் ஊற்றாதீர்கள்.

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]