herzindagi
saving tips to children

Children Saving Habit: குழந்தைகளிடம் சேமிப்புப் பழக்கத்தை மேம்படுத்த வேண்டுமா? இதை ஃபாலோ பண்ணுங்க!

<p style="text-align: justify;"><span style="text-align: justify;">குழந்தைகளிடம் சேமிக்கும் பழக்கத்தை அதிகப்படுத்த வேண்டும் என்றால், முதலில் பெற்றோர்கள் தினமும் சேமிக்கும் பழக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.</span>
Editorial
Updated:- 2024-04-28, 20:43 IST

சேமிப்பு என்பது ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் கடைப்பிடிக்க வேண்டிய அத்தியாவசிய பணிகளில் ஒன்றாகிவிட்டது. வாழ்க்கையில் பணம் இல்லையென்றால் எதுவுமே நடக்காது. இதனால் தான் சம்பாதிக்கும் ஒரு பகுதியை கட்டாயம் சேமிக்க வேண்டும் என்பார்கள். அதிலும் இன்றைய காலக்கட்டத்தில் சின்ன சின்ன பொருட்களை வாங்க வேண்டும் என்றாலும் அதிகமான தொகை செலவாகும். அதிலும் குழந்தைகள் உள்ள வீடுகள் என்றால் சொல்லவதே தேவையில்லை. நினைத்த நேரம் மற்றும் நினைத்த பொருட்களை வாங்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். 

பெற்றோர்களும் நாம் பட்ட கஷ்டத்தைக் குழந்தைகள் படக்கூடாது என்பதற்காக, அவர்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொடுப்பார்கள். சிறு வயதில் அவர்களைச் சந்தோஷப்படுத்த சில விஷயங்களைச் செய்தாலும், இது எதிர்காலத்தில் குழந்தைகளுக்குக் கஷ்டத்தைக் கொடுக்க வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. இதனால் தான் எவ்வளவு சம்பாதித்தாலும், செலவு செய்தாலும் அதில் ஒரு பகுதியைக் கட்டாயம் சேமித்து வைக்க வேண்டும். இதோடு குழந்தைகளுக்கும்  அதைக் கற்றுக்கொடுக்க வேண்டும். இதோ குழந்தைகளிடம் சேமிப்புப் பழக்கத்தை அதிகப்படுத்த பெற்றோர்கள் செய்ய வேண்டிய சில வழிமுறைகள் என்னென்ன? என்பது குறித்து இங்கே அறிந்துக் கொள்ளலாம் வாருங்கள்..

child savings

 மேலும் படிக்க: குழந்தைகளுக்குத் தாத்தா- பாட்டிகள் இவ்வளவு முக்கியமானவர்களா?

குழந்தைகளின் சேமிப்புப் பழக்கத்தை அதிகரிக்கும் வழிமுறைகள்:

  • குழந்தைகளிடம் சேமிக்கும் பழக்கத்தை அதிகப்படுத்த வேண்டும் என்றால், முதலில் பெற்றோர்கள் தினமும் சேமிக்கும் பழக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். சிறிய உண்டியலை வைத்து தினமும் சில்லறை காசுகளையாவது அதில் போட வேண்டும். நீங்கள் செய்யும் பழக்கத்தைத் தான் குழந்தைகளும் பின்பற்றுவார்கள் என்பதால் இதை முதலில் நடைமுறைப்படுத்துங்கள்.
  • இதையடுத்து குழந்தைகள் எப்போது கேட்டாலும் பணத்தைக் கொடுக்கக்கூடாது. அதற்கு மாறாக வாரத்திற்கு ஒரு சிறிய தொகையைக் கொடுத்து விட வேண்டும். இதில் உங்களுக்கு என்ன தேவையோ? அதை வாங்கிக் கொள்ளவும், மீதமுள்ள தொகையை சேமித்து வைக்கவும் என கூறுங்கள். இவ்வாறு செய்யும் போது உங்களது குழந்தைகள் பணத்தைத் தேவையில்லாமல் செலவு செய்யமாட்டார்கள்.
  • பெற்றோர்களிடம் வாங்கும் சிறிய தொகையைக் கூட குழந்தைகள் எதற்குச் செலவு செய்கிறார்கள் என்பதைக் கண்காணிக்க வேண்டும். தேவையில்லாமல் செலவு செய்தால் அதை வேண்டாம் என்று ஆரம்பத்திலேயே மறுக்க வேண்டும்.
  • வீடுகளில் உள்ள ஒவ்வொரு குழந்தைகளிடமும் பணத்தைச் சேமிப்பதற்கும் , முதலீடு செய்வதற்கும் என்னென்ன வழிமுறைகள்? உள்ளது என்பது குறித்து அவர்களுக்குக் கற்றுக் கொடுக்கவும். அவர்களை வங்கி அல்லது அஞ்சல் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று சேமிப்புக் கணக்குகளைத் தொடங்கவும்.

money making

  • மாதம் ஒருமுறை வீடுகளில் பட்ஜெட் போடும் குழந்தைகளையும் அதில் ஈடுபடுத்த வேண்டும். அப்போது தான் எதற்காக செலவு செய்கிறார்கள்? எது தேவை? எது தேவையில்லாதது? என்பதை எளிதாக அறிந்துக் கொள்ள முடியும். இது போன்ற விஷயங்களை நீங்கள் கற்றுக் கொடுக்க முயற்சிக்கவும். இது குழந்தைகளிடம் சேமிப்புப் பழக்கத்தை ஊக்குவிப்பதற்கு உதவியாக இருக்கும்.

மேலும் படிக்க: மொபைல் பயன்பாடு இல்லாமல் குழந்தைகளை மாற்ற வேண்டுமா? பெற்றோர்கள் செய்ய வேண்டியது இது தான்!

 

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]