வரலாறு, இலக்கியம் படிக்காமல் வளரும் தலைமுறைக்கு உண்மையான காதலின் வலிமை புரிவதில்லை. சமூக வலைதளங்களில் உலாவும் குறு வீடியோக்களை பார்த்து காதலுக்கு ஏங்குகின்றனர். முறையாக தமிழ் படித்த யாவரும் காதலில் பொறுமையும், காத்திருப்பும் அவசியம் என புரிதல் உடையவர்கள். ஏராளமான தமிழ் இலக்கியங்களில் காதல் பற்றி அழகாகவும், ஆழமாகவும் எழுதப்பட்டுள்ளது. கற்புக்கு அரசி என சொல்லப்படும் மதுரையை எரித்த கண்ணகியின் காதல் உறவை நிறைய பேர் மறந்திருக்க வாய்ப்புண்டு. ரோஸ் டே, கிஸ் டே, சாக்லேட் டே என நமக்கு தொடர்பு இல்லாத காதலர் வார கொண்டாட்டத்தை பின்பற்றி காதலில் வெல்லலாம் என நினைக்கும் நபர்களுக்கு தமிழ் இலக்கியங்களிலேயே உன்னதமான உண்மையான காதல் வரலாறுகள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இந்த பதிவில் இளங்கோவடிகள் எழுதிய சிலப்பதிகாரத்தின் கண்ணகியின் காதல் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
சில்பால் விளைந்த கதை
பூம்புகார் வர்த்தகம்
பல நூற்றாண்டுகளுக்கு முன்பாக சோழ தேசத்தில் முக்கிய நகரமாக விளங்கிய பூம்புகார் எனும் காவிரிப்பூம்பட்டினத்தில் மாசாத்துவன், மாநாய்கன் ஆகிய இருவர் கடல் சார்ந்த வர்த்தகத்தில் செல்வந்தர்களாக இருந்தனர். நீண்ட நாட்களுக்கு இருவரது நட்பு தொடர்ந்திட உறவினர்களாக பயணிக்க வேண்டும் என மாசாத்துவன், மாநாய்கன் முடிவெடுத்தனர். இதையடுத்து மாசாத்துவனின் மகன் கோவலனுக்கும் மாநாய்கன் மகள் கண்ணகிக்கும் திருமணம் முடிவானது.
கோவலன் - கண்ணகி திருமண வாழ்க்கை
ஊர் அறிய கோவலன் - கண்ணகி திருமணம் நடைபெறுகிறது. மண வாழ்க்கையில் இருவரும் மகிழ்ச்சியாக பயணிக்கின்றனர். வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவிற்கு கோவலன் - கண்ணகி இடையே அன்பு நிலவுகிறது. அப்போது கோயில்களில் நாட்டிய அரங்கேற்றம் செய்யும் சித்ராபதி என்ற பெண் தனது மகள் மாதவிக்கும் அக்கலையை கற்றுக் கொடுக்கிறார். மாதவியின் நடனத்தை ஒரு முறை அரசரும் பார்க்க வேண்டும் என அனுமதியும் பெறுகிறார்.
அழகின் வடிவம் மாதவி
நாட்டியத்தில் மட்டுமல்ல அழகிலும், அறிவிலும், திறனிலும் சிறந்த மாதவி அரசர் முன்னிலையில் ஊர் மக்களுக்கு மத்தியில் நடனத்தை அரங்கேற்றுகிறாள். மாதவியின் நாட்டியம் அனைவராலும் கவனம் பெறுகிறது. அரசரும் மாதவியின் நடனத்தை புகழ்பாடி ஆயிரத்து எட்டு பொற்காசுகள் கொடுத்தாலும் தகும் எனக் கூறுகிறார். ஒரு மாலையையும் மாதவிக்கு அணிவிக்கிறார். மாதவியின் நடனத்தை கண்டு கோவலன் மயங்குகிறான். மாதவிக்கு திருமணம் செய்ய இதுவே சரியான தருணம் என உணர்ந்த சித்ராபதி தனது வேலை ஆளிடம் மாலையை கொடுத்து அனுப்பி 1,008 பொற்காசுகள் கொண்ட ஆண் மாதவியை திருமணம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கிறாள்.
கோவலனின் துரோகம்
இதை கேட்டவுடன் கோவலன் தன்னிடம் இருக்கும் பொற்காசுகளை கொடுத்து மாதவியை மணம் முடிக்க திட்டமிடுகிறான். வேலை ஆள் கோவலனை சித்ராபதியிடம் அழைத்துச் சென்று 1,008 பொற்காசுகளை கொடுக்க தயாராகவுள்ள ஆண் என கோவலனை அடையாளம் காட்டுகிறாள். இதன் பிறகு கோவலன் - மாதவி திருமணம் நடைபெறுகிறது.
கண்ணகியின் காத்திருப்பு
கோவலனின் செயலை அறிந்து கண்ணகி மனம் உடைகிறாள். கோவலனும் - மாதவியும் இல்லற வாழ்க்கையை தொடங்குகின்றனர். தன்னிடம் இருந்த செல்வங்கள், பொற்காசுகள், பொற்காசுகள் அனைத்தையும் மாதவிக்காக கோவலன் செலவிடத் தொடங்குகிறான். வர்த்தக தொழிலை மறந்து எந்நேரமும் மாதவியின் நடனத்திலேயே மயங்கி வாழ்கிறான். கோவலன் மீது மாதவிக்கும் அளப்பரியா காதல் ஏற்படுகிறது. உறவுகள் தவறை எடுத்துக்கூறியும் கோவலன் மனம் மாற மறுக்கிறான். எனினும் கண்ணகி மனம் தளராது என்றோ ஒரு நாள் தனது கணவன் திரும்பி வருவான் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறாள்.
பாண்டிய தேச பயணம்
ஒரு நாள் திடீரென மாதவியின் நடனத்தில் திருமணத்திற்கு பிறகு ஏற்படும் பிரிவு குறித்து காட்சி இடம்பெறுகிறது. மாதவியும் அக்காட்சிக்கு ஏற்ப நடனமாடுகிறாள். இதை கண்டதும் தான் ஏமாற்றப்பட்டதாக கோவலன் தவறாக புரிந்துகொள்கிறான். அங்கிருந்து வெளியேறும் கோவலனை மாதவி தடுக்கிறாள். எனினும் கண்ணகிக்கு இழைத்த தவறை புரிந்துகொண்டு கோவலன் அங்கிருந்து நகர்கிறான். மாதவி அனுப்பிய கடித்தத்தையும் கிழித்துவிடுகிறான் கோவலன். கணவனின் வருகையை கண்டு கண்ணகிக்கு மகிழ்ச்சி உண்டாகிறது. எனினும் நீண்ட நாள் காத்திருப்பு அவளுடைய உடலை பாதித்துவிட்டது. செல்வம் இழந்த மனிதனான கோவலனிடம் தன்னிடம் இருக்கும் சிலம்பை கொடுத்து பணம் ஈட்ட கண்ணகி அறிவுறுத்துகிறாள். இதையடுத்து இருவரும் பாண்டிய தேசத்திற்கு பயணிக்கின்றனர்.
பொற்கொல்லனின் பொய்சாட்சி
மாணிக்க கல் நிறைந்த மனைவியின் கால் சிலம்பை பொற்கொல்லனின் விற்க கோவலன் முயல்கிறான். அரசியின் முத்து கல் நிறைந்த சிலம்பை திருடிய பொற்கொல்லன் சூழ்ச்சி செய்து அரசனிடம் கோவலனை மாட்டிவிடுகிறான். முறையாக விசாரிக்காத முதலாம் பாண்டிய நெடுஞ்செழியன் கோவலனின் தலையை துண்டிக்க உத்தரவிடுகிறான். கோவலனும் கொல்லப்படுகிறான். உயிரிழந்த கணவனின் உடலை காணும் கண்ணகி கோபத்தில் அரசனிடம் ஒற்றை சிலம்பத்தோடு செல்கிறாள். மாணிக்கம் கல் நிறைந்த சிலம்பத்திற்கும் அரசியின் முத்து கல் நிறைந்த சிலம்பத்திற்கும் வித்தியாசம் தெரியாதா என முறையிட்டு நியாயம் கேட்கிறாள். சிலம்பம் உடைக்கப்பட்டதும் தவறு இழைத்ததை உணர்ந்த அரசன் நெஞ்சை பிடித்தபடி உயிரிழக்கிறார். அரசியும் அவர் மீது விழுந்து மாண்டு விடுகிறார்.
மேலும் படிங்கValentine's day : “அன்பெனும் காதல் ஆயுதம்” ஆசை உறவுடன் அளவில்லா கொண்டாட்டம்
கண்ணகியின் சாபம்
கோபம் குறையாத கண்ணகி பொதுவெளியில் கணவனின் உயிரிழப்புக்கு காரணமான மதுரை மாநகருக்கு சாபம் விடுகிறார்.
“போதிலார் திருவினாள் புகழுடை வடிவென்றும்
தீதிலா வடமீனின் றிறமிவள் திறமென்றும்”
மதுரை மாநகர் தீ பற்றி எரிகிறது. தீயவர்கள் தீயில் இரையாகின்றனர். நல்லவர்கள் மட்டும் தப்பிக்கின்றனர். அப்போது அங்கு அவதரிக்கும் கடவுள் அங்கு 14 நாட்களுக்கு பிறகு கோவலனை தெய்வ வடிவில் காண்பாய் என கூறுகிறது. 14 நடைபபயணம் மேற்கொள்ளும் கண்ணகி தமிழக கேரள எல்லை திருச்செங்குன்றத்தில் கோவலனை புஷ்ப வாகனத்தில் காண்கிறாள். அவளும் புஷ்ப வாகனத்தில் ஏறி வானுலகம் செல்கிறாள். இந்த இடத்தில் கட்டப்பட்ட கோயில் மங்கலதேவி கண்ணகி கோயில் என்று அழைக்கப்படுகிறது.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation