Kerala Transgender Pregnant Story in Tamil: இணையத்தை புரட்டி போட்ட மாற்று பாலின தம்பதி.. தாயான திருநம்பி!

கேரளாவில் மாற்று பாலின தம்பதி வெளியிட்ட கர்ப்பக்கால புகைப்படம் இணையத்தில் பலரையும் நெகிழ வைத்துள்ளது. காதலி திருநங்கைக்காக திருநம்பி கர்ப்பமாகியுள்ளார். 

transgender couple kerala

கேரளா மாநிலத்தை சேர்ந்த மாற்று பாலின தம்பதி சஹத் - ஜியா இருவரும் 2 தினங்களுக்கு முன்பு இன்ஸ்டாவில் வெளியிட்ட கர்ப்பகால புகைப்படம் ஒட்டுமொத்த மக்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்தியாவில் முதல்முறையாக திருநம்பி தனது காதலி திருநங்கைக்காக கர்ப்பமாகியுள்ளார். இவர்கள் இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக இணைந்து வாழ்ந்து வருகின்றனர். இதில் சஹத் பெண்ணாக இருந்து ஆணாக மாறிய திருநம்பி. ஜியா பெண்ணாக மாறிய திருநங்கை. இவர்கள் இருவருக்கும் கொரோனா காலக்கட்டத்தில் காதல் மலர்ந்து இருவரும் ஒரே வீட்டில் ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், இவர்கள் இருவருக்கும் பெற்றோர் ஆக வேண்டும் என ஆசை வந்துள்ளது. அதற்காக குழந்தையை தத்தெடுக்கும் முயற்சியிலும் இறங்கினர். ஆனால் பல்வேறு காரணங்களால் அது நடக்காமல் போக, கடைசியில் நாமே குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என முடிவு எடுத்து மருத்துவரை அணுகினர். முழு பரிசோதனைக்கு பின்பு திருநம்பியாக மாறிய சஹத்தின் கருப்பை, பாலின மாற்று அறுவை சிகிச்சையில் அகற்றப்படவில்லை என்ற உண்மை தெரிய வந்தது. அதனால் சஹத் கர்ப்பமடைய முடியும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். சற்றும் தயங்காமல் சஹத் - ஜியா இருவரும் குழந்தை பெற்றுக்கொள்ள முடிவு எடுத்தனர்.

transgender couple photoshoot

ஜியாவிடம் விந்தணு பெறப்பட்டு அவை சோதனைக் கூடத்தில் வளர்க்கப்பட்டு அந்த கரு தற்போது சஹத்தின் கருப்பைக்குள் குழந்தையாக உள்ளது. நிறைமாத கர்ப்பிணியான சஹத்துக்கு மார்ச் மாதம் அறுவை சிகிச்சை முறையில் பிரசவம் நடைப்பெறவுள்ளது. இருவரும் குழந்தையின் முகத்தை பார்க்க ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். சஹத் - ஜியாவின் கர்ப்பக்கால புகைப்படம் இணையத்தில் வெளியாகி வாழ்த்துக்களை பெற்றுள்ளது. ஜியா, தனது இன்ஸ்டா பக்கத்தில் சஹத்தின் 8ம் மாதத்தில் எடுக்கப்பட்ட கர்ப்பகால புகைப்படங்களை பகிர்ந்த சில மணிநேரத்திலே புகைப்படங்களுக்கு லைக்ஸ்கள் குவிய தொடங்கின.

இந்த பதிவும் உதவலாம்:இயற்கை முறையில் விரைவில் கர்ப்பமடைய வேண்டுமா?


வெளிநாடுகளில் இதுப்போன்ற சம்பவங்கள் பல நிகழ்ந்தாலும் இந்தியாவில் இது முதல்முறை எனவும் கூறப்படுகிறது. இந்த ஜோடிக்கு இணையவாசிகள் பலரும் தங்களது வாழ்த்துக்களை பதிவு செய்துள்ளனர். அதுமட்டுமில்லை குழந்தை பிறந்து 1 வயது ஆன பின்பு சஹத் - ஜியா ஜோடி முறைப்படி திருமணம் செய்யவும் திட்டமிட்டுள்ளனர்.

இந்த பதிவும் உதவலாம்:ஆண்பிள்ளைகளுக்கு மாதவிடாய் பற்றிய புரிதல் ஏன் தேவை?

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

Images Credit: freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP