herzindagi
image

Bigg Boss Tamil Season 9 Contestants Salary: பிக்பாஸ் சீசன் 9 போட்டியாளர்களின் சம்பளம் இவ்வளவா? ஆச்சரியத்தில் ரசிகர்கள்!

Bigg Boss Tamil Season  9 Contestants Salary: பிக்பாஸ் சீசன் 9 போட்டியாளர்களின் சம்பளம் குறித்த விவரங்கள் தற்போது இணையத்தில் உலா வருகின்றன. இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் ஆச்சரியம் அடைந்துள்ளனர். குறிப்பாக, சிலர் லட்சக்கணக்கில் சம்பளம் பெறுகின்றனர்.
Editorial
Updated:- 2025-11-12, 12:46 IST

Bigg Boss Tamil Season  9 Contestants Salary: பிக்பாஸ் சீசன் 9-ல் பங்கு பெற்றிருக்கும் சில போட்டியாளர்களின் சம்பளம் குறித்த தகவல்கள் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. ஏறத்தாழ, இதில் சிலருக்கு லட்சக்கணக்கில் ஊதியம் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. இது தொடர்பான தகவல்கள் அதிகாரப்பூர்வமாக இல்லை என்றாலும், பலரும் இவற்றை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

மேலும் படிக்க: Bigg Boss Malayalam 7 Winner Anumol: பிக்பாஸ் மலையாளம் சீசன் 7 பட்டத்தை தட்டிச் சென்ற அனுமோல் குறித்த முழு விவரம் இதோ

 

பிக்பாஸ் தமிழ் சீசன் 9 போட்டியாளர்களின் சம்பளம்:

 

இந்த சீசன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் விஜே பார்வதி, திவாகர் போன்றோர் பெரிதும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய போட்டியாளர்களாக கருதப்படுகின்றனர். இவர்கள் ஏற்கனவே சமூக ஊடகங்கள் மூலமாக மக்கள் இடையே நன்கு அறியப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதனடிப்படையில், இவர்களது சம்பளம் குறித்து அறிந்து கொள்ள பலரும் ஆர்வம் காட்டினர்.

 

விஜே பார்வதி:

 

அந்த வகையில், விஜே பார்வதிக்கு ஒரு வாரத்திற்கு சுமார் ரூ. 1 முதல் ரூ. 1.5 லட்சம் வரை ஊதியம் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. அப்படி பார்த்தால் ஒரு நாளைக்கு சுமார் ரூ. 15 ஆயிரம் முதல் ரூ. 21 ஆயிரம் வரை சம்பளமாக கிடைக்கும் என்று கருதப்படுகிறது. யூடியூப், சின்னத்திரை, சினிமா என பல வகையில் மக்கள் இடையே பார்வதி பிரபலமாக இருப்பதால் அவருக்கு இந்த தொகை வழங்கப்படலாம் என்று பிக்பாஸ் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

 

திவாகர்:

 

வாட்டர்மெலன் ஸ்டார் (Watermelon star) என்று சமூக ஊடகங்களில் அழைக்கப்படும் திவாகர், சோஷியல் மீடியா இன்ஃப்ளூயன்சர் ஆக இருக்கிறார். இவருக்கும் ஒரு நாளைக்கு சுமார் ரூ. 15 ஆயிரம் வழங்கப்படலாம் என்று கருதுகின்றனர். இவரது சில வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரல் ஆகும். இதன் காரணமாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் திவாகருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

 

சாண்ட்ரா:

 

வைல்ட் கார்டு (Wild card) மூலமாக பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களில் சாண்ட்ராவும் ஒருவர். சின்னத்திரை மட்டுமின்றி சில திரைப்படங்களிலும் சாண்ட்ரா நடித்துள்ளார். இவருக்கு ஒரு நாளைக்கு சுமார் ரூ. 15 ஆயிரம் முதல் ரூ. 25 ஆயிரம் வரை சம்பளம் கொடுக்கப்படலாம்.

Sandra

மேலும் படிக்க: Dude ott release date: ஓடிடியில் வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் ட்யூட் திரைப்படம்; எந்த தளத்தில், எப்போது பார்க்கலாம்?

 

பிரஜின்:

 

சின்னத்திரை, சினிமா ஆகியவை மூலம் பிரபலம் ஆனவர் பிரஜின். வைல்ட் கார்டு (Wild card) எண்ட்ரியாக பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்ற இவருக்கு சுமார் ரூ. 15 ஆயிரம் முதல் ரூ. 25 ஆயிரம் ஊதியம் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

 

திவ்யா கணேஷ்:

 

மற்றொரு வைல்ட் கார்டு (Wild card) போட்டியாளராக பிக்பாஸ் வீட்டிற்கு சென்ற திவ்யா கணேஷுக்கு ஒரு நாளைக்கு சுமார் ரூ. 15 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும் என்று கருதப்படுகிறது. பாக்யலட்சுமி உள்ளிட்ட பிரபலமான சீரியல்கள் மூலம் நன்கு அறியப்பட்டவராக திவ்யா கணேஷ் திகழ்கிறார்.

Divya Ganesh

 

கனி:

 

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலமாக பிரபலம் ஆனவர் கனி. பிக்பாஸ் நிகழ்ச்சியில் அதிகம் ஊதியம் பெறும் போட்டியாளர்களில் இவரும் ஒருவர் என்று கூறப்படுகிறது. அந்த வகையில், ஒரு நாளைக்கு சுமார் ரூ. 20 ஆயிரம் முதல் ரூ. 30 ஆயிரம் வரை இவருக்கு ஊதியம் வழங்கப்படுகிறது என்று தகவல் பரவுகிறது.

 

வியானா:

 

நடிப்பு மற்றும் மாடலிங் துறையில் பணியாற்றி வரும் வியானா, பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பலரது கவனத்தை ஈர்த்துள்ளார். இவருக்கு ஒரு நாளைக்கு ரூ. 15 ஆயிரம் சம்பளம் வழங்கப்படலாம்.

 

கம்ரூதின்:

 

சின்னத்திரை சீரியல் நடிகராக வலம் வருபவர் கம்ரூதின். இந்த சீசனில் அதிகம் கனவத்தை ஈர்த்த போட்டியாளர்களில் ஒருவராக கம்ரூதின் விளங்குகிறார். இவருக்கும் ஒரு நாளைக்கு ரூ. 15 ஆயிரம் சம்பளம் அளிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

 

பிரவீன் காந்தி:

 

இந்த சீசன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தொடக்கத்திலேயே வெளியேறியவர் இயக்குநர் பிரவீன் காந்தி. இவர் பிக்பாஸ் வீட்டில் இருந்த போது ஒரு நாளைக்கு சுமார் ரூ. 35 ஆயிரம் வழங்கப்பட்டதாக தெரிகிறது. இந்த தகவல்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. ஆனால், ஏறத்தாழ இந்த அளவிற்கு பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.

 

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

 

Image Credit: Instagram

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]