herzindagi
republic day quotes

Republic Day wishes 2024 : பாரதத்தின் 75வது குடியரசு தினம்! அன்புக்குரியவர்களுக்கு பகிர்வதற்கான வாழ்த்து

இந்தியா 75ஆவது குடியரசு தினத்தை கொண்டாட உள்ள நிலையில் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் பகிர வேண்டிய சில வாழ்த்து செய்திகள் இங்கே 
Editorial
Updated:- 2024-01-23, 18:05 IST

வரும் ஜனவரி 26ஆம் தேதி நமது பாரத தேசம் குடியரசு தினத்தை கொண்டாடுகிறது. நாடு முழுவதும் உள்ள அனைத்து சமூகங்களைச் சேர்ந்த மக்களும் குடியரசு தினத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறார்கள். 1950 ஜனவரி 26 இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைபடுத்தப்பட்டது. இந்த பெருநாள் சுதந்திர இந்தியாவின் குடியரசு தினமாக அறிவிக்கப்பட்டது. 

இந்த நன்நாளில் ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தன்று அனைத்து கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு துறைகளில் பல கலாச்சார, பாரம்பரிய மற்றும் தேசபக்தி நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. எனவே நீங்கள் நண்பர்கள், சக பணியாளர்கள் போன்றவர்களுக்கு குடியரசு தின வாழ்த்து பகிர விரும்பினால் இந்தக் கட்டுரை உங்களுக்கு உதவிகரமாக இருக்கும்.

republic day wishes

  • ஜனநாயகம் மலர்ந்த இன்நன்னாளில் அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்
  • இந்த குடியரசு தினத்தில் நம் நாடு செழித்து பிரகாசிக்கட்டும். சக இந்தியர்கள் அனைவருக்கும் என் அன்பான வாழ்த்துக்கள்
  • இந்தியன் என்பது நம் பெருமை, வேற்றுமையில் ஒற்றுமை என்பது நம் மகிமை, நம்மை பிரித்து சிறுமைப்படுத்தும் தீய சக்திகளை வேரறுத்து இந்தியன் என்று பெருமை கொள்வோம்… குடியரசு தின நல்வாழ்த்துக்கள்
  • எத்தனை மொழி, எத்தனை மதம், எத்தனை சாதி, எத்தனை பிரிவுகள் இருந்தாலும் நாம் அனைவரும் பாரத்தாயின் பிள்ளைகள் தான். வாழ்க மக்கள் வளர்க பாரதம்… குடியரசு தின நல்வாழ்த்துக்கள்
  • செழுமையான பாரம்பரியம் மற்றும் கலாச்சாரம் கொண்ட அழகான நாட்டின் ஒரு பகுதியாக இருப்பதற்கு நன்றியுணர்வுடன் இருப்போம்… குடியரசு தின வாழ்த்துக்கள்
  • இந்த குடியரசு தினத்தன்று நம் நாட்டின் பொன்னான வரலாறு மற்றும் பாரம்பரியத்தை நினைவில் கொள்வோம். இந்த நாளில் நம் தேசத்தை பற்றி பெருமைப்படுவோம்… குடியரசு தின வாழ்த்துக்கள்
  • தாய் மீதான பாசம் போன்ற தாய் நாட்டின் மீதான பாசமும். தாயை நேசிப்போம்! தாய் நாட்டை மூச்சாய் சுவாசிப்போம்… வந்தே மாதரம்… குடியரசு தின நல்வாழ்த்துக்கள்
  • எண்ணங்களில் சுதந்திரமும்… இதயத்தில் அமைதியும்… நினைவுகளில் வரலாறும் நிறைந்திருக்கும் இத்தருணத்தில் தாய் மண்ணை உன்னை வணங்குகிறேன்
  • வேற்றுமையில் ஒற்றுமையும் பன்முக கலாச்சாரமும் நமது தேசத்தின் இருவிழிகளாக இருக்கின்றன. அவற்றை பாதுகாப்பதே நமது நோக்கம் என உறுதிமொழி ஏற்போம்… குடியரசு தின வாழ்த்துக்கள்
  • சமத்துவம் தொடர்ந்து, சம உரிமை நீடித்து, பாரதம் செழித்து, மக்கள் வாழ்வு சிறக்க… குடியரசு தின நல்வாழ்த்துக்கள்
  • அமைதியும் அன்பும் நிறைந்து வழியட்டும் நம் பாரத தேசத்தில்… அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்
  • அரசியலமைப்பு நமக்கு வழங்கி இருக்கும் சுதந்திரத்தின், அதிகாரத்தின், உரிமைகளின் உண்மையான மதிப்பை அறிந்து ஒற்றுமையுடன் கடமையாற்றுவோம்… குடியரசு தின நல்வாழ்த்துகள்
  • இந்த குடியரசு தினத்தில் தேசத்தின் பன்முகத்தன்மையைக் கொண்டாடுவோம்... அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் சகிப்புத்தன்மையுள்ள சமுதாயத்தை நோக்கி உழைப்போம்... தேசம் மீது நேசம் கொண்ட அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துகள்
  • அனைவருக்கும் சம உரிமை, சாமானியருக்கும் சம நீதி, வேறுபாடற்ற சமூகம் போன்ற கோட்பாடுகளை கொண்ட இந்திய அரசியலமைப்பு சாசனம் இயற்றப்பட்ட நன்னாளான குடியரசு தினத்தில் மக்களாட்சி மலர பாடுபட்ட மனிதர்களின் ஈடு இணையற்ற தியாகங்களை போற்றி வணங்குவோம்
  • இந்த குடியரசு தினத்தில் பெருமைமிக்க இந்தியர்களாக ஒன்று கூடி தேசத்தின் மகத்தான வளர்ச்சிக்கு பாடுபடுவோம் என உறுதிமொழி ஏற்போம்.
  • எண்ணங்களில் சுதந்திரமும் நினைவுகளில் சரித்திரமும் நிறைந்திருக்கும் இத்தருணத்தில் தாய் மண்ணை போற்றி வணங்குவோம்… குடியரசு தின வாழ்த்துகள்
  • இந்த குடியரசு தினத்தில் வலிமையான தேசத்தை கட்டியெழுப்புவதற்கு அனைவரும் உறுதி ஏற்போம். நமது பலத்தை கண்டு உலகம் நம்மை எதிர்நோக்கட்டும். குடியரசு தின வாழ்த்துக்கள்
  • செழுமையான வரலாறும் பாரம்பரியமும் கொண்ட நாட்டில் வாழ்கிறோம் என்பதில் பெருமிதம் கொள்ளுங்கள். குடியரசு தின வாழ்த்துக்கள்
  • நாம் இந்தியராக இருப்பதில் பெருமிதம் கொள்ள வேண்டும். ஏனென்றால் அத்தகைய அற்புதமான தேசத்திலிருந்து பிறந்து வளர்ந்திருக்கிறோம். குடியரசு தினத்தை சிறப்பாக கொண்டாடி மகிழ்வோம்
  • அனைவருக்கும் இனிய குடியரசு தின வாழ்த்துகள்! நமது தேசம் தொடர்ந்து முன்னேறி உலக நம்பிக்கைக்கான கலங்கரை விளக்கமாக நிற்கட்டும்.
  • சுதந்திரம் மற்றும் உரிமைகளை வழங்கிய அரசியலமைப்பை மதிப்போம். பெருமைமிக்க இந்தியர்கள் அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்!

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]