லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஆகஸ்ட் 14, 2025 அன்று வெளியாக இருக்கும் படம் 'கூலி'. இந்த திரைப்படத்தில் வில்லனாக நாகார்ஜுனா, சிறப்பு தோற்றத்தில் ஆமிர் கான் மற்றும் உபேந்திரா, சத்தியராஜ் மற்றும் ஸ்ருதிஹாசன் என பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருக்கின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் கலாநிதி மாறன் இந்த படத்தை தயாரித்துள்ளார்.
திரைத்துறையில் தனக்கேன ஒரு தனி இடம் பிடித்து இன்றுவரை சூப்பர் ஸ்டாராக வளம் வந்து கொண்டு இருக்கும் ரஜினி, இயக்குனர் லோகேஷ் கனகராஜின் 'கூலி' படத்தில் நடிக்கத் தயாராகிவிட்டார். இந்த படத்தின் மொத்த பட்ஜெட்டாக ரூ.350 கோடி செலவில் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் ரஜினிகாந்துக்கு சம்பளம் மட்டுமே 150 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது என தகவல் வெளியாகியுள்ளது, இது இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் ஹீரோவாக ரஜினி இருக்கிறார் என கூறப்படுகிறது.
கூலி படத்தின் ஆரம்பகாலத்தில் ரஜினிக்கு சம்பளம் எதும் பேசவில்லை என்று கூறப்படுகிறது. இதற்கு முன் தயாரித்து வெளிவந்த ஜெயிலர் படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் கலாநிதி மாறன் ரஜினி, நெல்சன் மற்றும் அனிருத் ஆகியோருக்கு விலையுயர்ந்த கார்களைப் பரிசாக வழங்கியிருந்தார். இதன் நம்பிக்கை காரணமாக கூலி படத்திற்கு சம்பளம் பேசமாக நடித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் கூலி படத்தின் வெளியீட்டு முன்னே ₹500 கோடிக்கு மேல் வியாபாரம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஆகையால் படம் வெளிவந்தால் ₹1000 கோடிக்கு வசூலிக்க படலாம் என்று நம்பப்படுகிறது. இதன் காரணமாக, ரஜினி தரப்பிலிருந்து மேலும் ₹50 கோடி சம்பளத்தை உயர்த்தி, மொத்தமாக ₹200 கோடி சம்பளமாக கேட்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் படிக்க: அதிக எதிர்பார்ப்புகளுடன் வெளியாக இருக்கும் இந்த வார தமிழ் ஓடிடி படங்கள்
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation