
மண்மனம் மாறாமல் பாரம்பரியத்துடன் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகை, வீட்டு வாசலில் போடப்படும் கோலமும் முக்கிய பங்குவகிக்கிறது. கோலம் அரிசி மாவில் போடுவதற்கு முக்கிய காரணமே எறும்புக்கு உணவளிக்க வேண்டும் என்பதற்காகத்தான். தமது முன்னோர்கள் கூறுவது யார் வீட்டில் பெரிய கோலம் போடுகிறார்களோ அவர்கள் வீடு செழிப்பாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பார்கள் என்று கூறுவார்கள். மாட்டுப் பொங்கல் என்பது உழவர்களுக்கு பெரும் பங்குவகிக்கும் பசுக்கள், காளைகள் மற்றும் வீட்டில் வளர்க்கப்படும் விளங்குகளை வணங்கிப் போற்றும் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது.
மேலும் படிக்க: "பொங்கலோ பொங்கல்" என பொங்கலை வரவேற்க வீட்டு வாசலில் போடப்படும் அழகிய பானை ரங்கோலி கோலம்
7 புள்ளிகளில் தொடங்கி 1 புள்ளியில் முடியும் இந்த மாட்டுப் பொங்கல் கோலம் இந்த பொங்கலுக்குத் தேர்வு செய்யலாம். இதற்காகச் சரியான வண்ணங்களைப் போட்டால் மேலும் அழகாக இருக்கும். பசு மாட்டின் முதுகு புறத்தில் அழகிய பூக்களை வரைந்து மேலும் அழகு சேர்க்கலாம். பூக்களின் உட்புறத்தில் இலைகள் வரைந்தால் கோலம் அழகாக இருக்கும். இந்த கோலத்திற்கு வெள்ளை, சாம்பல் நிறம், காவி, சிவப்பு, பச்சை, மற்றும் மஞ்சள் நிறங்களைத் தேர்வு செய்யவும்.

Image Credit: Pinterest
இந்த கோலம் 9 புள்ளிகளில் தொடங்கி ஒற்றை புள்ளிகளில் முடியும் அழகிய மாட்டுப் பொங்கல் கோலம். இந்த கோலத்திற்குப் பானையை அரைந்து பொங்கல் பொங்குவதைப் போல் வண்ணங்கள் இட்டு அழகுபடுத்தவும். பானையின் இரண்டு புரத்திலும் கரும்புகள், அடுத்து நெல்மணிகள் வரைந்து கொள்ளவும். பல இதழ்களைக் கொண்டு அமைக்கப்பட்ட தாமரை மலர் வரையவும். பானைக்குள் அழகிய காளையின் வடிவத்தை வரைந்து மாட்டுப் பொங்கலை வரவேற்கவும்.

Image Credit: Pinterest
14 புள்ளிகளில் தொடங்கி 6 புள்ளிகளில் முடியும் இந்த கோலம் வீட்டு வாசலில் போட எளிமையாகவும், அழகாகவும் இருக்கும். கோலத்தின் நான்கு புறமும் காளை மாடுகளை வரைந்து கொள்ளவும். மாடுகளுக்கு இடைப்பகுதியில் பொங்கல் பானையில் பொங்கல் பொங்குவதைப் போல் வரைந்துகொள்ளவும். மையத்தில் இருக்கும் புள்ளிகளில் பூக்கள், சூரியன், நட்சத்திரம் மற்றும் உங்களுக்குப் பிடித்த வடிவத்தை வரைந்துகொள்ளவும். பொங்கல் பானை மற்றும் காளைகளுக்கு ஏற்ற வண்ணங்களைப் போட்டு அழகுபடுத்தலாம்.

Image Credit: Pinterest
இந்த கோலத்திற்கு பசுவும், உழவரின் உருவவும் அழகாகத் தெரியப் புள்ளிகள் கொண்டு வரைவது சரியான தேர்வாக இருக்கும். இந்த கோலத்திற்கு ஏற்ற வண்ணங்கள் இடுவது சரியாக இருக்கும். இந்த கோலம் மாட்டுப் பொங்கலுக்குப் போடச் சரியான தேர்வாக இருக்கும்.

Image Credit: Pinterest
மேலும் படிக்க: “பழையன கழிதலும் புதியன புகுதலும்” போகி பண்டிகையை வண்ணமயமான லேட்டஸ்ட் ரங்கோலி கோலம் போட்டு வரவேற்கவும்
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]