“மழை..விவசாயிகள் முதல் அனைத்து ஜீவராசிகளுக்கும் இயற்கை அள்ளிக்கொடுக்கும் வரம்”. இவ்வுலகில் மழையை ரசிக்காதவர்கள் யாரும் இருக்கவே முடியாது. சின்ன சின்ன மழைத்துளிகளைக்கூட வாரி அணைத்துக்கொள்ள ஆசைப்பட்டாலும், சில நேரங்களில் நம்மை அறியாமல் மழை நாள்களில் சோர்வாகிவிடுவோம்.மழையில் நனைவதற்கு வெளியில் செல்ல வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் போர்வை இழுத்துப்போர்த்திக் கொண்டு தான் தூங்குகிறோம். ஏன்? என என்றைக்காவது யோசித்தது உண்டா? இல்லையென்றால் இதற்கானக் காரணம் என்னவாக இருக்கும்? இங்கே அறிந்துக்கொள்ளலாம் வாருங்கள்..
பருவ காலங்களில் தொடர்ச்சியாக பெய்யும் மழை சில நபர்களுக்கு மனச்சோர்வு மற்றும் உடல் சோர்வை ஏற்படுத்தும் என்கின்றனர் மருத்துவர்கள். மழை நாள்களில் நீங்கள் எப்போதும் தூங்கிக்கொண்டிருப்பதற்கு சூரிய ஒளி பற்றாக்குறை மற்றும் அதிக ஈரப்பதம் , வைட்டமின் டி குறைபாடு போன்ற அறிவியல் காரணங்களும் உள்ளதாம்.
பொதுவாகவே நாம் சூரிய ஒளியில் இருக்கும்போது, நமக்கு பினியல் சுரப்பி குறைவான மெலடோனை வெளியிடுகிறது. இது நாம் அதிக நேரம் விழித்திருக்க உதவியாக உள்ளது. ஆனால் மழை நாள்களில் மேகமூட்டத்தின் காரணமாக சூரிய ஒளி பற்றாக்குறையால் நம்முடைய உடல் சோர்வடைகிறது.
இது ஒரு முக்கிய காரணமாக இருந்தாலும் மழைக்காலங்களில் உங்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு ஏற்படக்கூடும். இதனால் இரத்த சோகை, நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு போன்றவை ஏற்படக்கூடும். இதுவும் உங்களை மழை நாள்களில் சோர்வடைய செய்யும்.
எனவே உங்களது உடல் நலத்தைப் பாதுகாக்க மழைக்காலத்தில் இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை அதிகளவில் எடுத்துக்கொள்வது நல்லது.
குறைந்த கலோரிகள் மற்றும் அதிக இரும்புச்சத்துக்கொண்ட அரைக்கீரை, முருங்கை, பொன்னாங்கன்னி, பசலைக்கீரைகள் மற்றும் பச்சைக் காய்கறிகளை மழைக்காலங்களில் உங்களது உணவு முறையில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
துவரம்பருப்பு, பாசிப்பருப்பு, பாசிப்பயறு போன்ற பருப்பு வகைகளில் இரும்புச்சத்து உள்ளிட்ட பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உள்ளது. இது எந்த பருவக்காலத்திலும் உங்களது உடலைப் பாதுகாக்கிறது. இதோடு நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது.
பாதாம், முந்திரி, பிஸ்தா, வால்நட் போன்றவற்றில் அதிக புரோட்டீன் மற்றும் இரும்புச் சத்துக்கள் அதிகளவில் உள்ளது. மழைக்காலங்களில் நீங்கள் மற்றும் உங்களது குழந்தைகள் சாப்பிடும் போது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவியாக உள்ளது.
மீன், முட்டை, சிக்கன், போன்றவற்றில் அதிக புரோட்டீன்கள் உள்பட அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளது. எனவே இவற்றை வாரத்திற்கு ஒருமுறையாவது உங்களது உணவு முறையில் சேர்த்துக்கொள்ள முயற்சிக்கவும். இதுப்போன்ற வழிமுறைகளைப் பின்பற்றி இனிவரும் மழைக்காலங்களில் உங்களது உடல் சோர்வடையாமல் பார்த்துக் கொள்வதற்கு முயற்சி செய்யவும்.
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]