தலைமுடி பராமரிப்பில் மிகுந்த அக்கறை கொண்டவர்கள் கண்டிப்பாக வாரத்தில் இரண்டு முறையாவது தலைக்கு குளிப்பார்கள். சிலருக்கு தினமும் தலைக்கு குளிக்கும் பழக்கமும் உண்டு. ஒரு சிலர் உடல் சூடு அதிகரித்தால் எண்ணெய் தேய்த்து குளிப்பார்கள். குறைந்தபட்சம் வாரத்திற்கு ஒரு முறையாவது நாம் தலைக்கு குளிப்போம். தலைக்கு குளித்த நாளில் மற்ற நாட்களை விட தூக்கம் நன்றாக வரும். காலையில் தலைக்கு குளித்து மதிய உணவு சாப்பிட்டவுடன் குட்டி தூக்கம் போட வேண்டும் எனத் தோன்றும் அல்லது கண்கள் தானாக மூடி நம்மை தூங்க அழைத்துச் செல்லும். தூங்கி எழுந்த பிறகு புத்துணர்வு கிடைக்கும், உடலில் சூடு குறைந்தது போலவவும் உணர்வோம். இதற்கான காரணங்களை இந்த பதிவில் பார்ப்போம்.
தலைக்கு குளித்தால் தூக்கம் வருவது ஏன் ?
தளர்வடையும் தசைகள்
வெதுவெதுப்பான தண்ணீரில் தலைக்கு குளித்தவுடன் நம் உடலில் உள்ள தசைகள் தளர்வடைகின்றன. தலை, கழுத்து முதல் உடல் முழுக்க பதற்றம் குறைகிறது. அந்த இனிமையான உணர்வு நம்மை சொக்க வைத்து தூக்கத்தை வரவழைக்கும்.
உடல் வெப்பநிலை சீராகும்
வெதுவெதுப்பான தண்ணீரில் குளிக்கும் போது உடல் சூடாக இருப்பது போல தெரியும். ஆனால் குளித்து முடித்து வந்தவுடனேயே குளர்ச்சியாக உணர்வோம். இது உடல் சூடு குறைவதற்கான அறிகுறியாகும். உடல் குறைந்தால் இது தூங்குவதற்கான நேரம் என்ற தகவல் மூளைக்கும். தூங்கும் ஹார்மோன் எனப்படும் மெலடோனின் வெளியாகும்.
நரம்பு மண்டலத்தில் தாக்கம்
வெதுவெதுப்பான தண்ணீர் குளியல் நரம்பு மண்டலத்தை தூண்டி விடும். உடல் ஓய்வு எடுப்பதிலும், செரிமான செயல்பாட்டிலும் நரம்பு மண்டலம் பங்களிக்கிறது. தலைக்கு குளித்தவுடன் ஏனோ அமைதியாக உணர்ந்து தூங்க வேண்டும் என்ற எண்ணம் உருவாகும்.
அதிகரித்த இரத்த ஓட்டம்
வெதுவெதுப்பான தண்ணீர் குளியல் மூளைக்கான இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். அதாவது அதிகளவு ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்து கடத்தப்படும். அதிகரித்த இரத்த ஓட்டத்தால் தூங்க வேண்டும் என நினைப்போம்.
எண்டோர்பின் வெளியீடு
வெதுவெதுப்பான தண்ணீரில் குளிப்பது உடலில் எண்டோர்பின் ஹார்மோன் உற்பத்தியை தூண்டிவிடும். எண்டோர்பின் வெளியேற்றம் காரணம் மிக செளகரியமாக உணர்வோம்.
குளிர்ந்த நீரில் குளிப்பதை விட வெதுவெதுப்பான நீரில் குளிப்பது அதிக பலன்களை கொண்டதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation