நம்முடைய மூதாதையர்கள் மட்டுமல்ல உலகம் முழுவதும் உள்ள மக்கள் அனைவரும் தங்களுடைய உடல் நலத்தைப் பாதுகாப்புடன் வைத்துக் கொள்ள பல நூற்றாண்டுகளாக மஞ்சளைப் பயன்படுத்தி வருகின்றனர். மஞ்சளில் உள்ள குர்குமின் என்ற பொருள் அனைத்து விதமான நோய் பாதிப்பில் இருந்தும் மக்களைப் பாதுகாத்துக் கொள்ள உதவியாக உள்ளது. இதோடு நிம்மதியான தூக்கத்திற்கும், உடலில் ஏற்படக்கூடிய பல்வேறு நோய்த் தொற்றுகளைத் தடுக்க உதவியாக இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிரிக்க மஞ்சள் கலந்த பால் எப்படி உதவியாக உள்ளது? என்பது குறித்த முழு விபரங்கள் இங்கே..
அஜீரணக் கோளாறு உள்பட பல்வேறு உடல் நல பாதிப்புகளைச் சந்திக்க நேரிடும் என்பதால் இரவில் குறைவான அளவு சாப்பிட வேண்டும் என்பார்கள். அதே சமயம் நாள் முழுவதும் அயராது உழைக்கும் மக்கள் இரவில் நிம்மதியாக தூங்க வேண்டும் என்றால் மஞ்சள் கலந்த பாலைக் கட்டாயம் பருக வேண்டும். ஆம் மஞ்சளில் உள்ள குர்குமின் மற்றும் பாலில் உள்ள அமினோ அமிலம் டிரிப்டோன் போன்றவை நல்ல தூக்கத்தைப் பெறுவதற்கு உதவியாக உள்ளது. இனிமேல் தூக்கம் வரவில்லை என்று புலம்பும் நபர்கள் தினமும் தூங்கச் செல்வதற்கு முன்னதாக சூடான பாலில் மஞ்சள் கலந்து சாப்பிடுங்கள்.
மஞ்சளில் உள்ள குர்குமின் எனும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் வைரஸ், பாக்டீரியா தொற்றுகள் ஏற்படாமல் இருப்பதற்காக உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. மேலும் மஞ்சளில் உள்ள சக்தி வாய்ந்த அழற்சி எதிர்ப்புப் பண்புகளும் உடலின் நோய் தாக்கத்தைக் கட்டுப்படுத்துகிறது.
மேலும் படிக்க: காலையில் வெறும் வயிற்றில் சுரைக்காய் சாறு குடிப்பதால் இதயத்திற்கு கிடைக்கும் மகத்தான நன்மைகள்
மேலும் படிக்க: முட்டை சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் அதிகரிக்குமா? மருத்துவர் சொல்லும் உண்மை
பாலை தண்ணீர் சேர்த்து நன்கு காய்ச்சிக் கொள்ள வேண்டும். இதை ஒரு டம்ளரில் ஊற்றி கால் டீஸ்பூன் மஞ்சள் கலந்துக் கொள்ளவும். இதனுடன் சிறிதளவு மிளகுத் தூள் சேர்க்கலாம். இனிப்பில்லாமல் குடிப்பது நல்லது. ஒருவேளை இனிப்புச் சுவை தேவை என்றால் கொஞ்சம் தேன் அல்லது நாட்டு சர்க்கரை சேர்த்துப் பயன்படுத்தலாம்.
Image credit - Freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]