ஒவ்வொவொரு மாதமும் 5 முதல் 7 நாட்கள் வரை நீடிக்கும் மாதவிடாய், பெண்களுக்கு அசவுகரியமான உணர்வை அளிக்கிறது. இந்த சமயங்களில் மனநிலை மாற்றங்களோடு, வலியையும் அவர்கள் அனுபவிக்கிறார்கள். மாதவிடாய் நாட்களில் ஏற்படும் வலியைக் குறைக்க, பல பெண்கள் மருந்துகளை எடுத்துக்கொள்கின்றனர். ஆனால் இவை பக்கவிளைவை ஏற்படுத்தும். மருந்துகளைத் தொடர்ந்து எடுத்துக்கொள்ளும்போது மோசமான விளைவுகளை உண்டாக்கும். மாதவிடாய் காலத்தில் உணவுகளைச் சூடாக உட்கொள்ளும்படி பரிந்துரைக்கப்படுகிறது. இதனால் மாதவிடாய் வலி குறைந்து காணப்படலாம்.
டீ குடிக்க ஆர்வமாக இருக்கிறீர்களா? இந்தியாவில், டீயினை மருத்துவ ரீதியாக எடுத்துக்கொள்வது வழக்கம் தான். மூலிகை டீ எண்ணற்ற வழிகளில் உங்களுக்கு நன்மை அளிக்கிறது. மாதவிடாய் சமயங்களில் உண்டாகும் வயிற்று பிடிப்புக்கும் இவை மிகவும் நல்லது.
மாதவிடாயின்போது இரத்தம் உறைவு உண்டாகலாம். அதாவது பெண்களுக்கு உதிரப்போக்கு கட்டியாக வெளியேறும். மாதவிடாயின்போது பிராஸ்டாகிளாண்டின் எனப்படும் சேர்மம் அதிகரிக்கிறது. இதனால், கருப்பையகம் விழத் தொடங்கி, உதிரப்போக்கு உண்டாகிறது.
இந்த பதிவும் உதவலாம்: மாதவிடாய் நாட்களில் கோபம் வருகிறதா? இவை தான் காரணம்!
நம் வீட்டு கிட்சனில் உள்ள இலவங்கம் பல வழிகளில் உதவுகிறது. இதன் சுவை சற்று காரமாக இருக்கும். இலவங்கம் சேர்த்துக்கொள்வதால் திசுப் பாதிப்புகள் குறைவதாக பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மாதவிடாயின்போது தாங்க முடியாத வலி இருந்தால், நீங்கள் இலவங்க டீ குடிக்கலாம்.
மாதவிடாய் வலி மிகவும் மோசமானது. இந்த வலியைப் போக்க பெண்கள் பல வித வீட்டு வைத்தியங்களை முயற்சி செய்கின்றனர். இப்பதிவில் ஏற்கனவே கூறியது போல, சூடான உணவுகளை உட்கொள்வது மாதவிடாய் வலியைக் குறைப்பதாகக் கருதப்படுகிறது.
இது போன்ற சமயங்களில், சிகப்பு ராஸ்பெர்ரி இலைகளைக் கொண்டு ஒரு டீ தயாரித்து குடிக்கலாம். இது பிளாக் டீ போன்ற சுவையினை கொண்டது. இந்த டீயினை தயாரிக்க, நார்மல் தேயிலைக்கு பதிலாக இதனை நீங்கள் பயன்படுத்தலாம்.
இந்த பதிவும் உதவலாம்: மாதவிடாயின்போது பெண்கள் இவற்றை எல்லாம் கட்டாயம் தவிர்க்க வேண்டும்!!!
ஓம இலைகளிலிருந்து இந்த டீயினை தயாரிக்க வேண்டும். ஓமத்தில் தாதுக்கள், பிளேவனாய்டுகள், பீனால்கள் மற்றும் இயற்கை எண்ணெய்கள் உள்ளன. வலியை குறைக்க ஓமத்தை சாப்பிடுமாறு அம்மாக்களுக்கு அறிவுறுத்தி இருப்பார்கள். இதனில் டீ எப்படி செய்வது என்பதனை இப்போது பார்ப்போம் வாருங்கள்.
இந்த பதிவும் உதவலாம்: மாதவிடாய் வலியை போக்கும் அற்புதமான உணவுகள் எவை தெரியுமா?
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
Images Credit: freepik, shutterstock
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]