பலரும் சிறுநீர் கழிக்கும் பொழுது வலி அல்லது எரிச்சலை உணர்கிறார்கள். இதற்கு சிறுநீரக பாதை தொற்று முதல் பால்வினை நோய் வரை பல்வேறு காரணங்கள் இருக்கலாம். பல்வேறு தொற்றுகளால் இது போன்ற நிலை ஏற்படுகிறது. ஆண், பெண் இருவருக்கும் இது போன்ற தொற்றுகள் ஏற்படலாம். இருப்பினும், பெண்களே இது போன்ற தொற்றுகளுக்கு அதிகம் ஆளாகிறார்கள்.
இது போன்ற விஷயங்களை வெளிப்படையாக பேச பலரும் விரும்புவதில்லை. இது போன்ற விஷயங்களை அலட்சியமாக எடுத்துக் கொள்ளாமல் சரியான நேரத்தில் கண்டறிந்து அதற்கான சிகிச்சைகளை பெறுவதன் மூலம் பல அபாயங்களை தவிர்க்கலாம். சிறுநீர் கழிக்கும் பொழுது வலி ஏற்படுவதற்கான காரணங்கள் குறித்த தகவல்களை உணவியல் நிபுணரான நேஹா மகாஜன் அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்த பதிவும் உதவலாம்: உடலில் இந்த அறிகுறிகள் தென்பட்டால், அதை அலட்சியமாக எடுத்துக் கொள்ள வேண்டாம்!
சிறுநீர் கழிக்கும் போது வலி ஏற்பட இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். இன்றைய காலகட்டத்தில் சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பையில் கல் உருவாகும் பிரச்சனை அதிகரித்துள்ளது. இவ்வாறு கற்கள் உருவாகும் போது சிறுநீர் வெளியேறுவதில் தடை ஏற்படும். இதனால் சிறுநீர் கழிக்கும் பொழுது வலியை உணரலாம்.
சிறுநீர் கழிக்கும் பொழுது எரிச்சல் அல்லது வலி ஏற்படுவதற்கு பால்வினை நோய்களும் ஒரு காரணமாக இருக்கலாம். இது போன்ற அறிகுறிகளை சரியான நேரத்தில் கண்டறிய வேண்டியது மிகவும் முக்கியம். ஏனெனில் இந்தத் தொற்றுகள் அதிகரிக்கும் பொழுது பல சிரமங்களை ஏற்படுத்தும். பிறப்புறுப்பில் அரிப்பு அல்லது வெள்ளைப்படுதலில் மாற்றம் போன்ற அறிகுறிகளை உணர்ந்தால் அதை அலட்சியமாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.
UTI அல்லது சிறுநீர்ப்பாதை தொற்று பெண்களை அதிகமாக பாதிக்கிறது. சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் அல்லது வலி, அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு, இரவில் அதிகமாக சிறுநீர் கழிப்பது, சிறுநீரில் இரத்தம் போன்றவை UTI இன் அறிகுறிகளாகும். சிறுநீர் பாதையில் உள்ள உறுப்புகளில் பாக்டீரியா நுழையும் பொழுது இது போன்ற தொற்றுகள் ஏற்படுகின்றன. இதை மருந்துகளின் உதவியுடன் சரி செய்ய முடியும். ஆனால் அவை மீண்டும் வராமல் பாதுகாக்க சுகாதாரத்தையும் கவனித்துக் கொள்ள வேண்டும்.
சிறுநீரகத்தில் நோய்த்தொற்று ஏற்பட்டாலும் சிறுநீர் கழிக்கும் பொழுது வலியை உணரலாம். சிறுநீரக நோய் தொற்றுக்கு சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் இல்லை எனில் இது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.
இந்த பதிவும் உதவலாம்: உயர் இரத்த அழுத்தம் ஏற்பட காரணம் என்ன? இதன் அறிகுறிகளை அறிந்து தீர்வு காண்போம்!
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]