வெறுங்காலில் நடைப்பயிற்சி செய்வதால் கிடைக்கும் அபரிமிதமான ஆரோக்கிய நன்மைகள்

வெறுங்காலில் நடப்பது நமக்கு அசௌகரியமாக தோன்றலாம், ஆனால் ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வெறுங்காலுடன் நடப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகளைப் பார்க்கலாம்.    மேலும் படிக்க: உலர் திராட்சையை ஊற வைத்த தண்ணீர் குடிப்பாதல் கிடைக்கும் எண்ணற்ற நன்மைகள்
image

புல் மீது வெறுங்காலில் நடக்க வேண்டும் என்று பெரியவர்கள் சொல்வார்கள். இது உங்களுக்கு அசௌகரியமாகத் தோன்றலாம், ஆனால் நமது ஆரோக்கியமான வாழ்விற்குச் சிறந்த பயிற்சியாக இருக்கும். வெறுங்காலுடன் நடப்பதால் உடல், மன மற்றும் உணர்ச்சி ரீதியாக பல நன்மைகளை உடலுக்கு வழங்குகிறது.

வெறுங்காலில் நடப்பதன் நன்மைகள்

வெறுங்காலுடன் நடப்பதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி இங்கே தெரிந்துகொள்வோம்.

கால் வலிமை பெற உதவும்

வெறுங்காலில் நடப்பதால் கால்களில் உள்ள தசைகள், தசைநார்கள் மற்றும் தசைநாண்கள் வலுப்படுத்த உதவுகிறது. இது இயற்கையான கால் இயக்கங்களில் ஏற்படும் பிரச்சனைகளை சமாளிக்க உதவுகிறது.

barefoot

Image Credit: Freepik


சுழற்சியை மேம்படுத்துகிறது

வெறுங்காலில் நடப்பதால் கால்களுக்கு இரத்த ஓட்டம் தூண்டுகிறது. கால்களில் காலணிகள் இல்லாமல் நடந்தால் இயற்கையான ஒரு சுழற்சியைத் தருகிறது. இதனால் கால்களில் வீக்கம் மற்றும் அசௌகரியத்தைக் குறைக்க உதவும். மேம்படுத்தப்பட்ட இரத்த ஓட்டம் ஒட்டுமொத்த இருதய ஆரோக்கியத்திற்கும் பங்களிக்கிறது.

மன அழுத்தத்தைக் குறைக்க செய்யும்

வெறுங்காலில் நடப்பதால் சூரியனின் உணர்வு மற்றும் காலடியில் மணலின் உணர்வு ஆகியவை அமைதியான சூழலை உருவாக்குகின்றன. இதனால் மன அழுத்தம் குறைக்கும் மற்றும் தளர்வை ஊக்குவிக்கிறது.

மாதவிடாய் பிரச்சனைகளுக்குத் தீர்வாக இருக்கும்

ஹார்மோன்கள் சமநிலையில் இல்லாதபோது மன உளைச்சல் ஏற்படும். பெண்களுக்கு மாதவிடாய் நாட்களுக்கு முன் மனநிலை மாற்றங்கள், தலைவலி, வயிற்று வலி, எடை அதிகரிப்பு, முகப்பரு மற்றும் பிற பிரச்சினைகள் ஏற்படும். சீரான மாதவிடாய்க்கு வெறுங்காலுடன் நடப்பது நல்லது.

periods

Image Credit: Freepik

கண் பார்வை மேம்பாடு

கண்பார்வையின் குறிப்பிட்ட அழுத்தப் புள்ளி கால்களில் தொடர்புடையதால் வெறும்காலில் நடக்கும் போது குறிப்பிட்ட அழுத்தப் புள்ளி தூண்டுவதால் கண்பார்வை மேம்படுத்த உதவுகிறது.

உடல் வீக்கத்தை குறைக்க உதவும்

வெறும் காலில் நடப்பதால் அழற்சி எதிர்ப்பு விளைவுகளை ஏற்படும். பூமியின் எலக்ட்ரான்கள் ஆக்ஸிஜனேற்றிகளாக செயல்படு இருப்பதால், உடலில் ஃப்ரீ ரேடிக்கல்களை நடுநிலையாக்குவதால் நாள்பட்ட உடல் வீக்கத்தைக் குறைக்க உதவும்.

மேலும் படிக்க: 30 நாட்களில் 10 கிலோ எடையை அசால்டாக குறைக்கலாம்.. இந்த டயட்டை கண்டிப்பா பாலோ பண்ணிப் பாருங்கள்

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

Image Credit: Freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP