நம்முடைய முன்னோர்கள் பயன்படுத்திய ஒவ்வொரு உணவுப்பொருள்களிலும் நிச்சயம் ஏதாவது ஒரு மருத்துவக்குணங்கள் அடங்கியிருக்கும். இதனால் தான் வயதானக் காலத்திலும் கூட அவர்கள் கம்பீரமாக வாழ்ந்து வந்தனர். இதில் முக்கியமான ஒன்று தான் ஓமம்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயிற்று வலி ஏற்பட்டால் ஓம வாட்டர் இருக்கா? குடிங்க சரியாகிவிடும் என்ற வார்த்தைகளை நம்மில் பலர் கேட்டிருப்போம். அந்தளவிற்கு ஓம விதைகள் மற்றும் இலைகளிலிருந்து தயாரிக்கப்பட்ட பானம் பல உடல் நலப்பிரச்சனைக்கு சிறந்த தீர்வாக அமைகிறது.
ஓமத்தின் மருத்துவக்குணங்கள்:
- ஹோட்டல் அல்லது ஏதாவது விசேச வீடுகளில் சாப்பிட்டாலே பலருக்கு உணவு செரிமானம் ஆகாது. இதனால் நாள் முழுவதும் வயிறு உப்புசமாகவே இருக்கும். இவற்றிற்கு உடனடி தீர்வு காண வேண்டும் ஓம்தரா பானம் சிறந்த தீர்வாக அமையும்.
- உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கும், முறையற்ற மாதவிடாய் பிரச்சனைகளைச் சரிசெய்யவும் ஓமம் உதவியாக உள்ளது.
- இதில் ஆன்டிஹெபர்டென்சிவ் மற்றும் ஆன்டிஸ்பாஸ்மோடிக், ஆன்டி- மைக்ரோபியல் உள்ளிட்ட பல்வேறு உள்ளதால் பல உடல் நலப்பிரச்சனைக்குத் தீர்வாக அமைகிறது.
- குழந்தைகளுக்கு சளித் தொல்லை இருந்தால் ஓம விதைகள் அல்லது இலைகளை தண்ணீரில் காய்ச்சிக்குடித்தால் சரியாகிவிடும்.
- ஓம விதைகளில் உள்ள தைமோன் எனும் இயற்கை எண்ணெய், கேண்டிடா அல்பிகன்ஸ் போன்ற பாக்டீரியாக்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
- பல் வலி, சரும பாதுகாப்பு மற்றும் வலி நிவாரணமாகவும் ஓமம் பயன்படுகிறது.
- நினைவாற்றல் மற்றும் மூளையின் செயல்திறனை மேம்படுத்த உதவுகிறது.
- முடி உதிர்தல் பிரச்சனைத் தீர்க்க வேண்டும் ஓமத்தின் சாறைத் தினமும் பயன்படுத்தினால் நல்லது என்கின்றனர் ஆயுர்வேத மருத்துவர்கள்.
- இதுப்போன்று பல்வேறு மருத்துவக்குணங்களை ஓமம் கொண்டுள்ளது. இனி நீங்களும் உங்களது வீடுகளில் தினமும் காலை போடும் தேநீரில் கொஞ்சம் ஓமம் சேர்த்துக் கொள்ளுங்கள். இது பல உடல் நலப்பிரச்சனைகளிலிருந்து உங்களைப் பாதுகாக்கும்.
ஓமத்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள்:
- ஓம விதைகளில் அதிக வைட்டமின்கள் A, B1, B6, E, கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், மக்னீசியம், இரும்பு, துத்தநாகம், தாமிரம், மாங்கனீசு, செலினியம் மற்றும் தயாமின் போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உள்ளதால் உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கிறது.
- எவ்வித மருந்துகளாக இருந்தாலும் அளவுக்கு மீறினால் பாதிப்பு ஏற்படும் அல்லவா? இதுப் போன்று ஓமம் பயன்படுத்தும் போதும். இதில் உள்ள தைமால் என்னும் பொருள் இருப்பதால் அளவுக்கு அதிகமாக பயன்படுத்தும் போது தலைச்சுற்றல், வாந்தி, குமட்டல் போன்ற தொந்தரவுகள் ஏற்படும்.
- கர்ப்பிணிப் பெண்கள் ஓமம் சாப்பிடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation