இன்றைய காலத்தில் அணைத்து வயதினர் பெண்கள் பலருக்கும் சிறுநீர் கழிக்கும் போது வலி அல்லது எரிச்சல் ஏற்படுவது பொதுவான பிரச்சனை ஆக மாறிவிட்டது. இது சிறுநீரகப் பாதை தொற்று ஏற்படுவதினால் இருக்கும் அறிகுறிகளாக இருக்கலாம். இன்றைய காலகட்டத்தில் ஆண்கள் பெண்கள் என இருவருக்குமே இது போன்ற சிறுநீரக தொற்றுகள் ஏற்படுகிறது. ஆனால் இது போன்ற தொற்றுகளுக்கு அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். இது போன்ற நோய் தொற்றுகள் குறித்து பெண்கள் பலரும் வெளிப்படையாக பேச விரும்புவதில்லை. இதுபோல விஷயங்களை அலட்சியமாக எடுத்துக் கொள்ளும் போது அதிக பாதிப்பு ஏற்படுகிறது. சிறுநீரக நோய் தொற்று ஏற்பட என்ன காரணம் என்றும் அதன் அறிகுறிகள் குறித்தும் இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
உங்கள் சிறுநீர்ப்பையில் சிறுநீரக கற்கள் இருந்தால் கூட சிறுநீர் கழிக்கும் போது வலி ஏற்படலாம். இது ஒரு முக்கிய காரணமாக உள்ளது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இன்றைய காலகட்டத்தில் பெண்களிடையே சிறுநீர் பையில் கல் உருவாகும் பிரச்சனை அதிக அளவு அதிகரித்துள்ளது. இது போன்ற கற்கள் சிறுநீர் பையில் உருவாகும் போது சிறுநீர் வெளியேறுவதில் தடை ஏற்படுகிறது. இதனால் தான் சிறுநீர் கழிக்கும் பொழுது வலி உணரலாம்.
ஒரு சிலருக்கு பாலியல் ரீதியாக பரவும் நோய்த்தொற்று காரணமாக சிறுநீர் கழிக்கும் பொழுது எரிச்சல் அல்லது வலி ஏற்படுகிறது. இதுபோன்ற அறிகுறிகளை சரியான நேரத்தில் கண்டறிந்து மருத்துவரை அணுகுவது மிகவும் முக்கியம். ஏனென்றால் இந்த பாலியல் ரீதியாக பரவும் நோய்த்தொற்றுகள் அதிகரிக்கும் பொழுது பெண்கள் கருப்பைக்கு பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகம். மேலும் பிறப்புறுப்பில் எரிச்சல் அல்லது அதிக வெள்ளைப்படுதல் போன்ற அறிவுரைகளை நீங்கள் உணர்ந்தால் அதை அலட்சியமாக எடுத்துக் கொள்ளவே கூடாது என்று மருத்துவர் நிபுணர்கள் கூறுகின்றனர்.
UTI என்று கூறப்படும் இந்த சிறுநீர் பாதை தொற்று உண்மையில் பெண்களை அதிகமாக பாதிக்கிறது. இதனால் இவர்களுக்கு சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் அல்லது வலி அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்று உணர்வு ஏற்படலாம். அதேபோல இந்த சிறுநீர் பாதை நோய் தொற்று பாதிப்பால் இவர்களுக்கு இரவில் அதிகமாக சிறுநீர், ஒரு சிலருக்கு சிறுநீரில் ரத்தம் போன்றவை ஏற்படுவது இதன் முக்கிய அறிகுறிகள் ஆகும். நம் சிறுநீர் பாதையில் பாக்டீரியாக்கள் நுழையும் பொழுது இது போன்ற நோய் தொற்றுகள் ஏற்படுகிறது. இந்த அறிகுறிகளை சரியான நேரத்தில் கண்டறிந்து மருந்துகளின் உதவியுடன் குணப்படுத்தலாம். இதுபோன்ற சிறுநீரகப் பாதை தொற்று மீண்டும் வராமல் பாதுகாக்க சுகாதாரத்தை கவனித்துக் கொள்வது அவசியம்.
பெண்கள் பலருக்கும் மாதவிடாய் காலத்திற்கு பிறகு தங்கள் உடலில் உள்ள ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் குறைவாக இருந்தால் சிறுநீரகத் தொற்று ஏற்படலாம். இதனை தவிர்ப்பதற்கு மாதவிடாய் காலத்தில் பெண்கள் ஆரோக்கியத்தையும் சுகாதாரத்தையும் கவனித்துக் கொள்வது மிகவும் அவசியம்.
Image source: google
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]