உணவு கட்டுப்பாடு என்பது நம் அனைவருக்கும் பொருந்தக்கூடிய ஒரு சொல். குறிப்பாக, அதிக எடை கொண்டவர்கள் மற்றும் எந்த முயற்சியும் செய்யாமலேயே தங்கள் உடலை சிக்கென்று கச்சிதமாக வைத்து கொள்ள விரும்புபவர்கள் என்று பெரும்பாலும் அனைவருமே உணவு கட்டுப்பாட்டுக்கு என்று இருக்கும் உணவுகளை விரும்புகிறார்கள்.
இதனால் அவர்கள் தாங்கள் சுவையான உணவுகளை உண்டவாறே தங்கள் எடையையும் குறைக்கலாம் என்று நினைக்கிறார்கள். இன்றைய காலக்கட்டத்தில் பல வகையான டயட் உணவுகள் என்ற பெயரில் பல விதமான உணவுகள் கடைகளில் கிடைக்கிறது. இப்படிப்பட்ட அனைத்து உணவுகளையும் மக்கள் பாரபட்சமின்றி வாங்குகிறார்கள். இதை உண்பதால் தங்களுக்கு எந்தத் தீங்கும் விளையாது என்று நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில் அப்படி எதுவும் இல்லை. நீங்கள் அவற்றை தொடர்ந்து சாப்பிட்டால், உடல் எடையை குறைப்பதற்கு பதிலாக உங்கள் எடையை மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு இருக்கிறது. எனவே, இன்று இந்தக் கட்டுரையில், மத்திய அரசு மருத்துவமனையான ESIC இன் உணவியல் நிபுணர் ரிது பூரி அவர்கள் டயட் உணவு என்ற பெயரில் உங்கள் எடையைக் குறைக்காத சில உணவுகளைப் பற்றி உங்களுக்குச் சொல்கிறார்.
இதுவும் உதவலாம் :உடல் எடையை குறைக்க தவிர்க்க வேண்டிய உணவுகள்
பழச்சாறு
எடையைக் குறைக்க பழங்கள் மிகவும் நல்லது. இத்தகைய சூழ்நிலையில், பெரும்பாலான மக்கள் பழச்சாறு குடிக்க தொடங்குகிறார்கள். ஆனால் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு வரும் பழச்சாறுகளில் குறைந்த அளவு பழங்கள் தான் உள்ளன, அதே நேரத்தில் ரசாயனப் பொருள் அதிகமாக சேர்க்கப்படுகின்றன. இவற்றில் சர்க்கரையும் மிக அதிகமாக இருப்பதால், உங்கள் எடை குறைவதற்குப் பதிலாக அதிகரிக்கத் தொடங்குகிறது. மறுபுறம், நீங்கள் வீட்டிலேயே பழச்சாறு தயாரித்து குடித்தால், அதுவும் உங்கள் எடையைக் குறைக்காது. நார்ச்சத்து உங்கள் வயிறு நிறைந்ததாக உணர வைக்கும். மேலும் நீங்கள் பழச்சாறு செய்யும் போது நிறைய பழங்களைப் பயன்படுத்துகிறீர்கள், இது உங்கள் தினசரி கலோரி எண்ணிக்கையையும் கூட்டி விடுகிறது. இந்த வழியில், உடல் எடையை குறைக்கு நினைக்கும் உங்கள் எண்ணம் ஈடேறாமல், உங்கள் இலக்கை நீங்கள் அடைய முடியாது.
பிஸ்கட்டுகள்
சிலர் டீயுடன் பிஸ்கட் சாப்பிட விரும்புகிறார்கள். ஆனால் உடல் எடை கூடிவிடுமோ என்ற பயத்தால் வழக்கமாக சாப்பிடும் பிஸ்கட்டை தவிர்த்து விட்டு டயட் பிஸ்கட்டை சாப்பிட தொடங்குகிறார்கள். சாதாரண பிஸ்கட்டில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் டயட் பிஸ்கட்டில் சர்க்கரை அளவு அதிகம் இல்லை, அதனால்தான் மக்கள் அதை சாப்பிடுகிறார்கள். இதில் சர்க்கரை சேர்க்காவிட்டாலும், கொழுப்புச் சத்து மிக அதிகமாக இருக்கும். இதன் காரணமாக இவற்றைத் தொடர்ந்து சாப்பிடும்போது, உங்கள் எடை குறைவதற்குப் பதிலாக அதிகரிக்கத் தொடங்கி விடுகிறது.
இதுவும் உதவலாம் :1 மாதத்தில் தொப்பையை குறைக்க வேண்டுமா? அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்
பானங்கள்
பல்வேறு வகையான டயட் ட்ரிங்க்ஸ் என்று சொல்லக்கூடிய உணவு கட்டுப்பாடு பானங்கள் இன்று சந்தையில் கிடைக்கின்றன. பொதுவாக, உடல் எடையை பாதிக்காது என்று எண்ணி அதை குடிப்பார்கள். இந்த டயட் பானங்களில் இனிப்பை சேர்க்க அஸ்பார்டேம் எனும் வேதி பொருள் சேர்க்கப்பட்டுள்ளது என்பது பலருக்குத் தெரியாது. இது உண்மையில் சர்க்கரையை விட ஆபத்தானது. இந்த செயற்கை இனிப்புகள் உங்கள் இன்சுலினைத் தூண்டுகிறது. இது நீரிழிவு அபாயத்தை அதிகரிப்பது மட்டுமல்லாமல், உங்கள் உடலில் கொழுப்புச் சத்தையும் அதிகரிக்கிறது. அடிக்கடி டயட் டிரிங்க்ஸ் குடிப்பவர்களின் இடுப்பு சதை மட்டும் படிப்படியாக அதிகரிக்கிறது.
இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் லைக் செய்து, பகிருங்கள். மேலும் இது போன்ற தகவல்களுக்கு, ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தோடு தொடர்ந்து இணைந்திருங்கள்.
Image Credit : Freepik
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation