கால் வலி பெண்களுக்கு ஏற்படும்போது பொதுவான பிரச்சினையாகும். அடிக்கடி கால் வலி ஏற்பட்டதால் அது உங்கள் நடக்கும் அல்லது நிற்கும் திறனைப் பாதிக்கலாம். தசை காயங்கள் முதல் இரத்த நாளங்களில் ஏற்படும் பிரச்சனைகள் வரை கால் வலிக்குப் பல காரணங்கள் உள்ளன. சில சந்தர்ப்பங்களில், உங்கள் முதுகெலும்பில் உள்ள நரம்பு பிரச்சனைகளால் கூட காலில் வலி ஏற்படலாம்.
உங்கள் கால் வலி கடுமையாக இருந்தால் அதன் சிகிச்சைக்கு மருத்துவரைப் பார்ப்பது அவசியம். மருத்துவர் கால் வலியின் அறிகுறிகளைப் பற்றி உங்களிடம் கேட்டு , உரிய பரிசோதனை செய்து வலியின் உண்மையான காரணத்தை அறிந்துவிடுவார்.
கால் வலி எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது அடிப்படை நிலையைப் பொறுத்தது. சில வகையான கால் வலிகள் குறிப்பாகத் தசைப்பிடிப்பு அல்லது கடுமையான காயம் ஆகியவற்றுக்கு விரிவான சிகிச்சை தேவையில்லை. ஆனால் மிகவும் தீவிரமான காயம் அல்லது திசு பாதிப்பு காரணமாக ஏற்படும் கால் வலியைத் தீர்க்க தொடர் சிகிச்சை அல்லது அறுவை சிகிச்சை தேவைப்படலாம்.
மேலும் படிங்க Stay Fit : குளிர்காலத்தில் உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பது எப்படி ?
சிறிய காயங்களால் ஏற்படும் கால் வலி பெரும்பாலும் வீட்டு சிகிச்சைகளிலேயே சரியாகிவிடும். பின்வரும் நடைமுறைகள் சிறிய கால் வலி மற்றும் வீக்கத்தைத் தீர்க்க உதவும்:
காயம் அல்லது தசை பலவீனம் காரணமாக உங்கள் கால் வலி ஏற்பட்டால் நீங்கள் பிசியோதெபிஸ்ட்டை அணுகுவதன் மூலம் பயனடையலாம்.
அதி தீவிரமாக உடற்பயிற்சியில் ஈடுபடாதீர்கள். அதற்கு பதிலாகக் காயத்தைத் தவிர்க்க உடற்பயிற்சி செய்வதை கொஞ்சம் கொஞ்சம் அதாவது படிப்படியாக அதிகரிக்கவும். ஒரே மாதிரியான உடற்பயிற்சியை தினமும் செய்யாதீர்கள். பலவிதமான உடற்பயிற்சிகள் செய்தால் காயம் ஏற்படும் வாய்ப்பு குறையும்.
மேலும் படிங்க Sleeping Tips : தினமும் நல்லா தூங்கனுமா ? இந்த எளிய வழிகளை பின்பற்றுங்க
உங்கள் உடற்பயிற்சி காலணிகளில் போதுமான ஹீல் குஷனிங் மற்றும் ஆர்ச் சப்போர்ட் இருப்பதை உறுதி செய்யவும்
எலும்புகளை வலிமையாக்க உடற்பயிற்சி செய்யுங்கள். அத்துடன் போதுமான கால்சியம் நிறைந்த உணவுகள் மற்றும் வைட்டமின் டி ஆகியவற்றை உட்கொள்வது எலும்பு முறிவை தடுக்க உதவும்.
போதுமான திரவங்களைப் பருகுவது கால் பிடிப்புகளைத் தவிர்க்க உதவும்.
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]