வாதம், பித்தம், கபம் இந்த மூன்று விஷயமும் உடலில் மிக முக்கியமான ஒன்று. நம்மில் பலருக்கு திடீரென பாதம் அதிகரிப்பு பித்தம் அதிகரிப்பு போன்றவைஏற்படுகிறது. வாதம், பித்தம், கபம் உள்ளிட்டவை உடலில் அதிகரிக்கும் போது நம் உடல் மற்றும் மனம் சாதாரண நிலையில் இருக்காது. நம் உடலில் பித்தம் எவ்வாறு அதிகரிக்கிறது? அதை எப்படி கண்டுபிடிப்பது என நமக்கு பல கேள்விகள் உள்ளன. நம் முன்னோர்கள் கூறியபடி உடம்பில் திடீரென ரொம்ப அதிக சூடு உருவாகினாள் பித்தம் அதிகரித்து இருக்கிறது என்று கூறுவார்கள். அதேபோல் நாம் எண்ணங்களில் பேச்சுக்களில் அதீத நிலை மாற்றங்கள் இருந்தால் நாம் சரியாக தூங்காமல் இருந்தால் நம் உடலில் பித்தம் அதிகரிக்கிறது என்று அர்த்தம்.
உடலில் பித்தம் அதிகரித்தால் என்ன நடக்கும்?
திடீரென நிறைய கோபம் வருவது, சின்ன சின்ன விஷயங்களுக்கு ஆக்ரோசப்படுவது, திடீரென படபடப்பாகும் போது நம் உடலில் பித்தம் அதிகரிக்கிறது என்று உணரலாம். பித்தம் அதிகரிக்கும்போது உடல் அளவிலும் மனதளவிலும் நிறைய அறிகுறிகளை காட்டும். பித்தம் அதிகரிக்கும்போது முதலாவதாக நமக்கு செரிமான கோளாறுகளை உண்டு பண்ணும். பித்தம் சமநிலையில் உள்ள போது நாம் பேலன்ஸ் ஆன கண்டிஷனில் இருப்போம். நம்முடைய செரிமானம் ஆரோக்கியமாக இருந்தால் பித்தமும் சமநிலையில் உள்ளது என்று அர்த்தம்.
செரிமானம் பாதிப்படையும்போது பித்தம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது என்று கூறலாம். பித்தம் அதிகரிக்கும் போது அசிடிட்டி சம்பந்தமான பிரச்சனைகளோ, அஜீரண கோளாறுகளோ, வயிற்றில் எப்போதும் ஒரு அசௌகரியம் வந்து கொண்டே இருக்கும். உடலில் பித்தம் அதிகரிக்கும் போது தலைசுற்றல் வரும். மற்றும் உதடுகளில் வெடிப்பு தோன்றும். காலையில் பல் துலக்கும் போது குமட்டல் வரும். அடிக்கடி வாந்தி வருவது போன்ற உணர்வு தோன்றும்.
உடலில் பித்தம் அதிகமாகுவதன் அறிகுறிகள் என்ன?
-1739956567668.jpg)
வாத பித்த கபம் இந்த மூன்று விஷயமும் உடலில் மிக முக்கியமான ஒன்று நம்மில் பலருக்கு திடீரென பாதம் அதிகரிப்பு பித்தம் அதிகரிப்பு போன்றவை ஏற்படுகிறது.
உடல் சூட்டை குறைத்து, பித்தம் தணிக்க சிறந்த இயற்கை கசாயம்
தேவையான பொருட்கள்
- கருப்பு உலர் திராட்சை 10
- கொத்தமல்லி இலை 2 டீஸ்பூன்
- கறிவேப்பிலை சிறிது
- இஞ்சி 2 டீஸ்பூன்
- புதினா இலை 2 டீஸ்பூன்
- தண்ணீர் 200 மிலி
செய்முறை
அடுப்பில் 200ml தண்ணீரை கொதிக்க வைத்து கருப்பு உலர் திராட்சை 10, கொத்தமல்லி இலை 2 டேபிள்ஸ்பூன்,கறிவேப்பிலை சிறிது,இஞ்சி 2 டீஸ்பூன் இடித்து சேர்த்துகொள்ளுங்கள். புதினா இலை 2 டேபிள்ஸ்பூன் இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து நன்கு கொத்திக்க வைத்து 100 ml வந்தவுடன் அதனை வடிகட்டி வாரத்தில் 2 நாட்கள் எடுத்துகொள்ளுங்கள்.
எண்ணெய் குளியல்
தொடர்ந்து தினமும் காலையில் எழுந்தவுடன் தலைக்கு குளிக்க வேண்டும். குறிப்பாக நல்லெண்ணையை தலையில் தேய்த்து ஊற விட்டு இன்று தலைக்கு குளிக்க வேண்டும். இதனால் உடல் சூட்டை குறைக்க முடியும். மேலும் இதனை தொடர்ந்து செய்து வருவதால் பித்தத்தின் அதிகரிப்பை தடுத்து நிறுத்தி உடலில் எப்போதும் பித்தத்தின் அளவை நார்மலாக வைத்துக்கொள்ளமுடியும்.
மேலும் படிக்க:வெகு நாட்களாக குடலில் ஒட்டியிருக்கும் அழுக்குகளை ஒரே இரவில் வெளியேற்ற உதவும் ஆயுர்வேத பானங்கள்'
இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள். மேலும், இதுபோன்ற உடல்நலம், ஆரோக்கியமான வாழ்வு சார்ந்த சுவாரஸ்யமான தகவல்களை தினமும் தெரிந்து கொள்ள எப்போதும் ஹெர்ஜிந்தகி உடன் இணைந்திருங்கள். ஹெர்ஜிந்தகியின் முகநூல் பக்கத்தை இந்த லிங்கின் மூலம் பின் தொடருங்கள் HerZindagi Tamil
image source: freepik
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation