உலகில் லட்சக்கணக்கான பெண்களின் உயிரைப் பறிக்கும் நோய்களில் ஒன்றாக மாறிவிட்டது கர்ப்பப்பை வாய் புற்றுநோய். இந்தியாவைப் பொறுத்தவரை சுமார் 200 பெண்கள் கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. பெண்களின் சுகாதாரமின்மை மற்றும் மரபு ரீதியாக ஏற்படுத்தும் இந்த பாதிப்பை முறையாக கவனிக்காவிடில் பெரும் பிரச்சனையைப் பெண்கள் சந்திக்க நேரிடும் என எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள். சத்தமில்லாமல் பெண்களைத் தாக்கும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் ஏற்படுவதை எப்படி அறிந்துக் கொள்ள முடியும்? அதன் அறிகுறிகள் என்னென்ன? என்பது குறித்து இங்கே விரிவாகத் தெரிந்துக் கொள்ளுங்கள்.
மேலும் படிங்க:ஏரோபிக் உடற்பயிற்சி மேற்கொண்டால் இத்தனை நன்மைகளா?
கர்ப்பப்பை வாய் புற்றுநோயின் அறிகுறிகள்:
பெண்களில் சிலருக்கு மாதவிடாய் சமயத்தில் அதிக முதுகு வலி ஏற்படக்கூடும். இதை அலட்சியமாக விடக்கூடாது. இதுவும் கர்ப்பப்பை வாய் புற்றுநோயின் அறிகுறிகளாக உள்ளது. திருமணத்துக்குப் பின்னதாக ஹார்மோன் மாற்றங்களால் பிறப்புறுப்பில் நிறம் மாறியும் துர்நாற்றத்துடன் அதிக வெள்ளைப்படக்கூடும். பெண்களுக்கு கால்கள் மற்றும் பாதங்களில் அதிகப்படியான வலி மற்றும் வீக்கம் ஏற்படுவதும் கருப்பை வாய் புற்றுநோய்க்கான ஆரம்ப அறிகுறிகளாக உள்ளனர். பாலியல் உறவின் போது நாட்டமின்மையும், வலியும் ஏற்படுவதோடு உடலுறவுக்குப் பிறகு பிறப்புறுப்பில் அதீத இரத்தப்போக்கு ஏற்படக்கூடும். கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய பெண்களுக்கு ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனையும் ஏற்படும். பெண்கள் எவ்வித டயட் மற்றும் உடற்பயிற்சி செய்யாமலும் திடீரென உடல் எடைக் குறைவதும் கர்ப்பப்பை வாய் புற்றுநோயின் அறிகுறிகளில் ஒன்றாக உள்ளது. கருப்பை வாயின் செல்கள் அசாதாரணமாகி, கட்டுப்பாட்டை மீறி வளரும் போது பசியின்மை பிரச்சனையும் பெண்கள் சந்திக்க நேரிடும்.
யாருக்கெல்லாம் பாதிப்பு ஏற்படும்?
மேலும் படிங்க:பெண்களே.. கருமுட்டை வெளிவருவதை அறிந்துக் கொள்ள வேண்டுமா? அறிகுறிகள் இவை தான்!
மரபு ரீதியாக தான் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பாதிப்பு ஏற்படுகிறது என்று அலட்சியாக இருக்கக்கூடாது. பிறப்புறுப்பை சுகாதாரமாக வைத்திருக்காத பெண்கள் அனைவருக்கும் புற்றுநோய் பாதிப்பு ஏற்படக்கூடும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். குறிப்பாக இளம் வயதில் திருமணம் செய்துக் கொள்ளும் பெண்கள், அதிக உடலுறவில் ஈடுபடுபவர்கள் மற்றும் மீண்டும் மீண்டும் கருக்கலைப்பு செய்பவர்களுக்கு இந்த பாதிப்பு ஏற்படும். இதோடு அதிக குழந்தைகளைப் பெற்றுக்கொளும் தாய்மார்களுக்கும், எச்.ஐ.வி பாதித்தவர்களுடன் உடலுறவில் ஏற்படும் பெண்களுக்கும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் ஏற்படுமாம்..
பொதுவாக புற்றுநோய் பாதிப்புகளை ஆரம்ப நிலையில் கண்டறிய முடியாது.எனவே குறிப்பிட்ட வயதை எட்டியவுடன் பெண்கள் தாமாக முன்வந்து கர்ப்பப்பை வாய் புற்றுநோய் குறித்து பரிசோதனை செய்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக 40 வயதில் இருக்கக்கூடிய பெண்கள் ஆண்டிற்கு ஒருமுறையாவது கண்டிப்பாக புற்றுநோய் குறித்த பரிசோதனை செய்துக் கொள்வது நல்லது. ஒருவேளை உங்களுக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் உறுதி செய்யப்பட்டால், அறுவை சிகிச்சை, கதிர்வீச்சு மற்றும் கீமோதெரபி போன்ற சிகிச்சை முறைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்பதால் எவ்வித பயமும் தேவையில்லை.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation