Aerobics Benefits: ஏரோபிக் உடற்பயிற்சி மேற்கொண்டால் இத்தனை நன்மைகளா?

நீங்கள் மேற்கொள்ளும் ஏரோபிக் உடற்பயிற்சி கவலையைக் குறைக்க உதவக்கூடிய சிறந்த வழியாக உள்ளது

aerobics exercise in regular life

மக்களிடையே மாறிவரும் உணவு பழக்க வழக்கங்கள், உடல் உழைப்பு இல்லாத வேலைகள் அனதை்தும் ஒரு வகையில் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தினாலும், பல நேரங்களில் உடல் நல பிரச்சனைகளை நமக்கு ஏற்படுத்துகிறது. இளம் வயதிலேயே இதய நோய், சிறுநீரக செயலிழப்பு உட்பட பல விதமான நோய் பாதிப்புகளை சந்திக்க நேரிடுகிறது. இவற்றையெல்லாம் சரி செய்ய என்ன மாதிரியான உடற்பயிற்சிகளையெல்லாம் மேற்கொள்ள வேண்டும்? என்ற தேடல் அதிகளவில் உள்ளது. இதோ இன்றைக்கு மக்களிடம் மிகவும் பிரபலமாகியுள்ள ஏரோபிக் உடற்பயிற்சி மற்றும் அதன் நன்மைகள் குறித்து இங்கே விரிவாக தெரிந்துக் கொள்வோம்.

aerobics

ஏரோபிக் உடற்பயிற்சியும் நன்மைகளும்!

ஏரோபிக் உடற்பயிற்சிகள் பொதுவாக இரண்டு வகைகளாக வகைப்படுத்தப்படுகிறது. நீச்சல், சைக்கிளிங், நடைபயிற்சி போன்றவை குறைந்த தாக்கம் கொண்ட ஏரோபிக் பயிற்சிகள் என்றும், ஓடுதல், ஸ்கிப்பிங், போன்றவை உயர் தாக்கம் கொண்ட ஏரோபிக் உடற்பயிற்சியாகும். இவற்றை தொடர்ச்சியாக மேற்கொள்ளும் போது உடலுக்கு பல்வேறு நன்மைகளை உங்களுக்கு தரக்கூடும். நீங்கள் மேற்கொள்ளும் ஏரோபிக் உடற்பயிற்சி கவலையைக் குறைக்க உதவக்கூடிய சிறந்த வழியாக உள்ளது. நடைபயிற்சி அல்லது நீச்சல் போன்ற வழக்கமான ஏரோபிக் செயல்பாடுகளை மேற்கொள்ளும் போது உடல் பதற்றம் அடைவதைத் தடுக்கிறது. மேலும் மனநிலையை ஒழுங்குப்படுத்தவும் உதவுகிறது.

  • உடலில் உள்ள அதிகப்படியான கலோரிகளைக் குறைக்க வேண்டும் என்றால் ஜாகிங், நீச்சல் அல்லது சைக்கிள் ஓட்டுதல் போன்ற ஏரோபிக் பயிற்சியை நீங்கள் மேற்கொள்ளலாம்.
  • ஏரோபிக் உடற்பயிற்சிகளில் ஈடுபடுவது வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்கிறது. எலும்புகளுக்கும், தசைகளுக்கு வலுவைத் தரக்கூடியதாக ஏரோபிக் உடற்பயிற்சிகள் அமைகிறது.
  • ஏரோபிக் உடற்பயிற்சிகள் அனைத்தும் உடலுக்கு பல்வேறு ஆற்றலை வழங்கினாலும் ஆரம்ப கட்டத்தில் உடல் சோர்வாக இருப்பது போன்று உணர்வீர்கள். இந்த பயிற்சியின் போது உங்களது உடலுக்கு வலி ஏற்படுகிறதா? என்பதை கவனிக்கவும். ஒருவேளை அதிக வலி மற்றும் சோர்வை நீங்கள் உணரும் போது பயிற்சியின் இடையில் ஓய்வெடுப்பது நல்லது.
  • உடற்பயிற்சி செய்வதற்கு முன்னதாக உடலை எப்போதும் நீரேற்றத்துடன் வைத்திருக்க வேண்டும. எனவே உடற்பயிற்சிக்கு முன்னதாக மற்றும் முடிந்த பின்னதாக நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். மேலும் வாம் அப் செய்துக்கொள்ள வேண்டும். பயிற்சியின் போது தசைகளுக்கு வலி ஏற்பட்டால் குறிப்பிட்ட காலத்திற்கு பயிற்சிகளை மேற்கொள்ளக்கூடாது.
aerobics benefits

மேலும் படிங்க:எலும்புகளை வலுப்படுத்தும் ஆரோக்கிய பானங்கள்!

ஏரோபிக் உடற்பயிற்சியை மேற்கொள்வது உங்களது ஆரோக்கியத்திற்கு நல்ல கேம்- சேஞ்சராக அமையும் என்றாலும் இதய நோய் உள்ளிட்ட பல உடல் நல பாதிப்புகள் இருக்கும் பட்சத்தில், மருத்துவரின் பரிந்துரை மிகவும் முக்கியம். எனவே மருத்துவ ஆலோசனைப் பின்னதாக குறைந்த தாக்கம் கொண்ட ஏரோபிக் உடற்பயிற்சிகளை மேற்கொள்ள மறந்துவிடாதீர்கள்.Image Credit: Google

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP