மாதவிடாய் நேரத்தில் எத்தனை மணி நேரத்திற்கு சானிட்டரி நாப்கின் மாற்ற வேண்டும் ?

மாதவிடாய் காலத்தில் ஒவ்வொரு பெண்ணும் இயல்பை விட சுகாதாரம் பேணுவது அவசியம். மாதவிடாய் காலத்தில் எத்தனை முறை அல்லது எத்தனை மணி நேரத்திற்குள் சானிட்டரி நாப்கின் மாற்ற வேண்டும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
image

இந்தியாவில் ஏறக்குறைய 75 விழுக்காடு பெண்கள் மாதவிடாய் காலத்தில் சானிட்டரி நாப்கின் பயன்படுவத்துவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மாதவிடாய் காலத்தில் சுகாதாரம் காக்க தவறினால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதோடு சில தொற்று பாதிப்புகளுக்கும் ஆளாகும். சில பெண்கள் மாதவிடாய் காலத்தில் துணி பயன்படுத்தவும் செய்கின்றனர். மாதவிடாய் காலத்தில் சுகாதாரம் காக்க சானிட்டரி நாப்கினை உரிய நேரங்களில் மாற்றிவிடுவது அவசியம். 28 நாட்களுக்கு ஒரு முறை பெரும்பாலான பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி ஏற்படுகிறது. மாதவிடாய் காலத்தில் இரத்தப்போக்கு 2 முதல் 7 நாட்கள் வரை நீடிக்கலாம். முதல் இரண்டு நாட்களில் இரத்தப்போக்கு அதிகமாக இருக்கும்.

sanitary napkins

மாதவிடாய் காலத்தில் எத்தனை முறை நாப்கின் மாற்றணும் ?

சுகாதார நிபுணர்களின் அறிவுரைப்படி மாதவிடாய் காலத்தில் பெண்கள் நான்கு மணி நேரத்திற்கு ஒரு முறை சானிட்டரி நாப்கின் மாற்ற வேண்டும். டாம்பூன் பயன்படுத்தும் பெண்கள் இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை மாற்ற வேண்டும். இது துல்லியமான நேரமில்லை. ஏனெனில் பயன்படுத்தும் சானிட்டரி நாப்கினின் தரமும், தனிநபர் தேவையும் முக்கியமாகும். சில பெண்களுக்கு குறைவான இரத்தப் போக்கும் சிலருக்கு அதிகப்படியான இரத்தப் போக்கும் இருக்கலாம். ஆகவே இதை தேவைக்கு ஏற்பவே பயன்படுத்த வேண்டியிருக்கும்.

நீண்ட நேரத்திற்கு ஒரே சானிட்டரி நாப்கின் பயன்படுத்தக் கூடாது. ஏனெனில் உடலில் இருந்து வெளியேறும் இரத்தம் உறுப்புகளில் உள்ள நுண்ணுயிர்களுடன் கலக்கும். குறைவான இரத்தப்போக்கு இருந்தாலும் பயன்படுத்தும் சானிட்டரி நாப்கின் மாசுபடும். இதன் காரணமாக கண்ணுக்கு தெரியாத நுண்ணுயிர்கள் ஈரப்பதத்தில் வளர்ந்து பிறப்புறுப்பு தொற்று, சிறுநீரக தொற்று மற்றும் தோல் அரிப்புக்கு வழிவகுக்கும்.

சானிட்டரி நாப்கின் அடிக்கடி மாற்றணுமா ?

மாதவிடாய் காலத்தில் குறைவான இரத்தப்போக்கு இருந்தாலும் சானிட்டரி நாப்கின் மாற்ற வேண்டிய தேவையில்லை என நினைக்க கூடாது. உங்களுடைய சுகாதாரத்திற்காக சானிட்டரி நாப்கினை சரியான இடைவேளைகளில் மாற்ற வேண்டும்.

அதிகமான இரத்தப்போக்கு இருக்கும் போது பெண்கள் இரண்டு சானிட்டரி நாப்கின்கள், துணி அல்லது டாம்பூன் சேர்த்து பயன்படுத்துகின்றனர். இரத்தப் போக்கினை கட்டுப்படுத்த இந்த முறை உதவினாலும் இது சரியான செயல் அல்ல. அதிகப்படியான இரத்தம் உறிஞ்சப்படுவதனால் நீங்கள் சானிட்டரி நாப்கினை மாற்றும் வாய்ப்பு குறைவு. இதன் காரணமாக பிறப்புறுப்பில் தொற்று உண்டாகும். டாம்பூன் பயன்படுத்தினால் டாக்ஸிக் ஷாக் ஏற்படும்.

மேலும் படிங்கஒற்றை தாயாக குழந்தையை வளர்ப்பதில் உள்ள சவால்களும், சிக்கல்களும்

மாதவிடாய் காலத்தில் 4 மணி நேரத்திற்கு ஒரு முறை சானிட்டரி நாப்கின் மாற்றவும். சானிட்டரி நாப்கினை முறையாக அப்புறப்படுத்தவும். ஏனெனில் அதில் பாக்டீரியா, இத தொற்றுகள் வளரும். சானிட்டரி நாப்கின் பயன்படுத்தும் ஒவ்வொரு முறையும் கைகளை கழுவவும்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP