ஒற்றை தாயாக குழந்தையை வளர்ப்பதில் உள்ள சவால்களும், சிக்கல்களும்

தாயிற் சிறந்த கோவிலும் இல்லை தந்தை சொல் மிக்க மந்திரம் என்று கூறி குழந்தைகளை வளர்த்த அந்த காலத்திற்கும் தற்போது ஒற்றை நபராக இருந்தாலும் குழந்தையை வளர்க்கலாம் என்ற காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும். குறிப்பாக ஒற்றை தாயாக குழந்தையை வளர்ப்பது ஆளாக்குவதில் சவால்களும், சிக்கல்களும் உள்ளன. ஒற்றை தாயாக குழந்தையை வளர்ப்பது எளிதான காரியமல்ல.
image

விவாகரத்து, கணவன் இறப்பு, பரஸ்பர பிரிவு, எதிர்பாராத சூழ்நிலை காரணமாக உருவாகும் ஒற்றை தாய் குழந்தை வளர்ப்பு பற்றி சமூகத்தில் இன்னும் பெரிதளவு விவாதிக்கப்படவில்லை என்றே சொல்லலாம். அப்பா, அம்மா யாராக இருந்தாலும் ஒற்றை பெற்றோராக குழந்தை வளர்ப்பு என்பது மிகவும் கடினமான காரியம். சமூக ரீதியான தடைகளை தாண்டி ஒரு குழந்தைக்கு எந்த குறையையும் வைக்காமல் ஒற்றை பெற்றோராக வளர்ப்பது சவால்கள் நிறைந்தது. இந்த பதிவில் குறிப்பாக ஒற்றை தாயாக குழந்தை வளர்ப்பில் உள்ள சவால்கள், சிரமங்கள், சிக்கல்கள் பற்றி காணலாம்.

challenges of single mom

ஒற்றை தாய் எதிர்கொள்ளும் சவால்கள்

நிதிச்சுமை

என்ன தான் ஆயிரக்கணக்கில் சம்பாரிக்கும் ஒற்றை தாயாக இருந்தாலும் குழந்தை வளர்ப்பில் நிதிச்சுமை ஏற்படாமல் இருக்காது. ஒரு வேளை விவாகரத்து பெற்றிருந்தால் குழந்தையின் பராமரிப்பு செலவு, ஜீவனாம்சம் கிடைக்கும் இல்லையெனில் தாயின் சம்பளத்திலேயே வீட்டு செலவு, தனிப்பட்ட செலவு, குழந்தை வளர்ப்பு, குழந்தையின் கல்வியை சமாளிக்க வேண்டும். இதன் காரணமாக பணி நேரத்தை அதிகரித்து பணம் ஈட்டுதல், பார்ட் டைம் வேலைகளை தேட நேரிடும்.

உணர்ச்சிக்கு மதிப்பு

பணம் மட்டுமே எல்லாவற்றையும் தீர்த்துவிடாது. ஒற்றை தாயாக உணர்ச்சி ரீதியாகவும் சிரமப்படுவீர்கள். குழந்தையின் தேவையை பூர்த்தி செய்தல், லட்சியங்களை அடைய உதவுதல், சகிப்புத்தன்மையுடன் பிரச்னையை கையாளுதல் இவை அனைத்திற்கும் தங்களுடைய உணர்ச்சிகளை பொருட்படுத்தாமல் வாழ வேண்டும். துணை இன்றி ஒற்றை தாயாக நாமே எல்லாவற்றையும் எதிர்கொள்ளலாம் என நினைத்தால் தனிமைப்படுத்தப்படுவீர்கள். அதே போல மன அழுத்தம், சோர்வு உண்டாகும். சமூகத்தில் இருந்து தரப்படும் அழுத்தமும் உங்களை பாதிக்கும். குழந்தையை கல்வியில் சேர்க்க விண்ணப்ப படிவத்தில் அப்பா, அம்மா விவரத்துடன் ஒற்றை ஆளாக சமாளிக்கும் திறன் உண்டா என்ற கேள்விக்கும் பதிலளிக்க வேண்டியிருக்கும்.

நேரமும், பொறுப்பும்

ஒற்றை தாயாக குழந்தையை வளர்க்கும் போது நேர மேலாண்மை மிக அவசியம். தனது வேலையையும் முடிக்க வேண்டும், வீட்டு வேலையை கவனிப்பதுடன் குழந்தையை வளர்த்து தேவையான கல்வியை கொடுக்க வேண்டும். இதை பல வருடங்களுக்கு இடைவிடாமல் செய்ய நேரிடும். ஒற்றை தாய்மார்கள் பலருக்கும் குழந்தையுடன் போதுமான நேரம் செலவிட முடியவில்லையே என்ற குற்ற உணர்வு இருக்கும்.

ஒற்றை தாயை பார்த்து வளரும் குழந்தையும் சிரமத்தை புரிந்துகொண்டு விரைவில் குடும்ப பாரத்தை சுமக்க நினைக்கும். தந்தை இல்லை ஏக்கம் இருந்தாலும் அதை வெளியே சொல்ல முடியாமல் வளரும்.

மேலும் படிங்கபெண் குழந்தைகளிடம் பாதுகாப்பு பற்றி பெற்றோர் சொல்ல வேண்டிய விஷயங்கள்

ஸ்டீரியோடைப் உடைப்பது

ஒற்றை தாயாக குழந்தையை வளர்த்தால் அக்குழந்தையின் வாழ்க்கை முழுமையற்றதாக இருக்கும் என சமூகப் பார்வை உண்டு. இது தாயையும், குழந்தையையும் பாதிக்கும். எனினும் குழந்தையின் மீது தாய் கொண்ட அன்பு இவற்றை உடைத்தெரியும்.

இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP