சர்க்கரை நோய்... உலகின் பெரும்பாலான உயிர் இழப்பில் இந்த சர்க்கரை நோய் பெரும் பங்கு வகிக்கிறது. நாம் சாப்பிடும் எல்லா உணவுகளிலும் குளுக்கோஸ் இருக்கும் போது சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்புகளே இல்லை என நாம் நினைத்தால் நம்மை நாமே ஏமாற்றி கொள்கிறோம் என்று அர்த்தம். 2021ஆம் ஆண்டு தகவலின்படி 20 முதல் 80 வயதுக்கு உட்பட்ட சுமார் 537 மில்லியன் பேர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட பிறகு என்ன சாப்பிடுவது, என்ன சிகிச்சை மேற்கொள்ள வேண்டும், எப்படி சரி செய்யலாம் என யோசிக்கிறோம்.
இதையெல்லாம் விட சிலருக்கு இளம் வயதிலேயே சர்க்கரை நோயினால் நாம் வாழ்வின் தரம் பாதிக்கப்படுமா என்ற கேள்வி வந்துவிடுகிறது. இப்போது சர்க்கரை நோய் இல்லை ஆனால் பத்து வருடங்களில் சர்க்கரை நோய் வந்துவிட்டால் என்ன செய்வதென்று யோசிக்கிறொம். 35 வயதிற்கு மேல் எதேச்சையாக பல் பிடுங்குவதற்கோ அல்லது காய்ச்சலுக்கு மருத்துவமனையில் சிகிச்சை சென்றால் நமக்கு சர்க்கரை நோய் இருக்கிறது என எளிதில் தெரிவித்துவிடுவார்கள்.
சிலருக்கு அறிகுறி தெரியாது, உடல் மாற்றம் இல்லாமலேயே சர்க்கரை அளவு 250க்கு மேல் இருக்கும். பல பேர் சிறுநீரக பாதிப்பு, கண் பாதிப்பு வந்த பிறகே சர்க்கரை நோயைக் கண்டறிவர். 20-30 வருடங்கள் முன்னால் சர்க்கரை நோய் இப்படித் தான் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் நவீன காலத்தில் வருடந்தோறும் ஒரு முறை மேற்கொள்ளும் பரிசோதனையால் சர்க்கரை நோயை உடனடியாக கண்டுபிடிக்கலாம்.
டைப் 2 நீரிழிவு நோயின் அறிகுறிகள், இதை முன்கூட்டியே கண்டறிவதற்கான வழிகளை தெரிந்து கொள்ளுங்கள்.
உங்கள் குடும்பத்தில் அதாவது தாத்தா, பாட்டி என யாருக்காவது சர்க்கரை நோய் இருந்தால் உங்களுக்கும் சர்க்கரை நோய் வருவதற்கு 40 விழுக்காடு வரை வாய்ப்புள்ளது.
மேலும் படிங்க நல்ல உடல் ஆரோக்கியத்திற்கு BMI வரம்பு என்ன ?
சிறுவயதிலேயே உடல் பருமனாக இருந்தால் எதிர்காலத்தில் சர்க்கரை நோயினால் பாதிக்கப்படுவதற்கான அதிக வாய்ப்புகள் உண்டு. அதே போல பெண்களுக்கு உடல் பருமன், ஒழுங்கற்ற மாதவிடாய், pcod, கர்ப்ப கால சர்க்கரை நோய் இருந்தால் எதிர்காலத்தில் கண்டிப்பாகச் சர்க்கரை நோய் வரும்.
வெறும் வயிற்றில் இரத்த பரிசோதனை மேற்கொள்ளும் போது சர்க்கரை அளவு சாதாரணமாக இருக்கிறது என நினைத்து சர்க்கரை நோய் இல்லை என சொல்லி விட முடியாது. சாப்பிட்ட இரண்டு மணி நேரம் கழித்து மீண்டும் இரத்த பரிசோதனை செய்யும் போது தான் சர்க்கரை நோய் பற்றி தெரியும்.
இவையெல்லாம் சர்க்கரை பாதிப்பை எளிதில் கண்டறிவதற்கான வழிகளாகும். ஆனால் பத்து வருடங்கள் கழித்து சர்க்கரை நோய் பாதிப்பை வருமா என்பதை கண்டறியவும் வழிகள் உள்ளன.
மேலும் படிங்க சத்தம் போட்டு கத்தாதீங்க! உடல்நலன் பாதிக்கப்படும்
12 மணி நேரம் உடலை காலியாக வைத்து விட்டு தண்ணீரில் குளுக்கோஸ் பவுடர் கலந்து குடிக்க வேண்டும். இதை குடித்த பிறகு சர்க்கரை அளவு 140க்கும் குறைவாக இருந்தால் சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பு மிக மிக குறைவு. 200க்கு மேல் இருந்தால் சர்க்கரை நோய் வந்துவிட்டது என அர்த்தம். 140-200க்குள் இருந்தால் எதிர்காலத்தில் சர்க்கரை நோய் வரும்.
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]