அதிக மாதவிடாய் இரத்த போக்கை கட்டுப்படுத்த ஆயுர்வேத வைத்தியங்களையும் வீட்டிலேயே முயற்சி செய்யலாம். இரத்த போக்கை கட்டுப்படுத்தும் மூன்று பானங்களைபார்க்கலாம். அவற்றை எளிதில் செய்யலாம் மற்றும் அதிக இரத்த போக்கு கட்டுப்படுத்த மற்றும் உடலை இயற்கை முறையில் குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும். இதை செய்யத பின்கூட அதிக இரத்த போக்கு இருந்தால் நீங்கள் ஒரு மருத்துவரை அணுகி ஆலோசனையை பெருவது நல்லது.
ஆயுர்வேத நிபுணரும் தி கடம்ப மரத்தின் இணை நிறுவனருமான டாக்டர் டிக்ஸா பவ்சர் மாதவிடாய் சுழற்சியை நிர்வகிக்க உதவும் மூன்று பானங்களை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
இந்த பதிவும் உதவலாம்: இதயத்தில் கெட்ட கொலஸ்ட்ரால் சேராமல் இருக்க 2 சூப்பரான மூலிகைகள்!!
அரிசி தண்ணீர் பல சலுகைகளைக் கொண்டுள்ளது. இதில் மாவுச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்றம் நிறைந்துள்ளதால் சிறுநீர் பாதை நோய்த்தொற்று (UTI), பிறப்புறுப்பு பகுதி எரியும் உணர்வு மற்றும் வெள்ளை போக்கை கட்டுப்படுத்த உதவுகிறது. உடலை குளிர்ச்சியான வைத்திருக்க உதவுகிறது மற்றும் இரத்தப்போக்கு கோளாறுகளை கட்டுக்குள் கொண்டுவர உதவுகிறது. அரசி நீரில் தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்து காணப்படுவதால் முகத்தில் இயற்கையான பொலிவைப் பெற உதவும். இது சரும துளைகளை இறுக்கும், புள்ளிகளைக் குறைக்கும் மற்றும் சருமத்தின் நிற தோற்றத்தை பொலிவாக வைத்திருக்க கவசத்தை உருவாக்கும்.
அரிசி நீரில் குளிர்ச்சி தரும் தன்மை இருப்பதால் சளி மற்றும் இருமலுடன் போராடுபவர்கள் இதனை தவிர்க்க வேண்டும். உங்கள் உள்ளங்கைகள் மற்றும் உள்ளங்காலில் எரியும் உணர்வை தந்தால் இந்த நீரை அருந்தலாம்.
பெருஞ்சீரகம் விதைகள் சிறிது இனிப்பு சுவை கொண்டது. ஆயுர்வேதத்தின் படி அவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், செரிமானத்தை மேம்படுத்தவும், இரத்தப்போக்கு கோளாறுகளை நிர்வகிக்கவும், இதய நோய் உள்ளவர்களுக்கு வசீகரமாக செயல்படவும் உதவும். மாதவிடாய் வலியிலிருந்து நிவாரணம் அளிக்கவும் இது பயன்படுத்தப்படுகிறது.
கருப்பு திராட்சை தண்ணீர் அதிகப்படியான முடி உதிர்தல் மற்றும் இரத்தப்போக்கு ஆகியவற்றை சமாளிக்க ஒரு சிறந்த வீட்டு வைத்தியமாக கருதப்படுகிறது. இது இரத்த சோகையை எதிர்த்துப் போராடவும் உதவுகிறது. மேலும் உணவில் திராட்சையைச் சேர்ப்பது இயற்கையான ஆக்ஸிஜனேற்றத்தை அதிகரிப்பதோடு உடலில் குளிர்ச்சியாக வைத்திருக்க உதவிகிறது.
குறிப்பு: மேற்கூறிய அனைத்து பானங்களையும் 5 நிமிடங்களுக்குள் வீட்டிலேயே தயாரித்து இயற்கையாகவே பல நோய்களில் இருந்து நிவாரணம் பெற உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: 7 அறிகுறிகளை வைத்து குடலின் ஆரோக்கியமற்ற தன்மையை கண்டுப்பிடிக்கலாம் தெரியுமா?
இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால், பகிரவும். மேலும் இதுபோன்ற கதைகளைப் படிக்க Harzindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]