herzindagi
image

வாய்ப்புண், வயிற்றுப்புண் குணமாக இந்த பாட்டி வைத்தியம் செய்து பாருங்க; ஒரே வாரத்தில் குணமாகும்

வாய்ப் புண்கள் உணவு உண்ணும்போது காரம் அல்லது உப்பு தென்பட்டால் வாயில் எரிச்சல் அல்லது வலியை உண்டாக்கும். இதனால் இனிப்பு அல்லது புளிப்பு உணவுகளை சுவைப்பதில் சிரமம் ஏற்படுகிறது.
Editorial
Updated:- 2025-07-31, 21:33 IST

வாய்ப்புண் என்பது வாயில் ஏற்படும் ஒரு வகை அழற்சி நோயாகும். இது கன்னங்கள், உதடுகள், நாக்கு போன்ற பகுதிகளில் சிறிய கொப்புளங்கள் சிவப்பு நிறத்தில் இருக்கும். இது உங்களுக்கு வலி மற்றும் இரத்தக் கசிவு போன்ற அறிகுறிகளை ஏற்படுத்துகிறது. இந்த வாய்ப் புண்கள் உணவு உண்ணும்போது காரம் அல்லது உப்பு தென்பட்டால் வாயில் எரிச்சல் அல்லது வலியை உண்டாக்கும். இதனால் இனிப்பு அல்லது புளிப்பு உணவுகளை சுவைப்பதில் சிரமம் ஏற்படுகிறது. அந்த வரிசையில் வாய்ப்புண் குணப்படுத்த உதவும் வீட்டு வைத்தியங்கள் குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

வாய்ப்புண் வர காரணங்கள்?

 

  • வயிற்றுப் புண்: இரைப்பை அல்லது குடலில் அதிக அமிலம் சுரப்பதால் வயிற்றில் புண் ஏற்படுகிறது, இது வாய்ப்புண்ணாகவும் வெளிப்படுகிறது.
  • ஊட்டச்சத்து குறைபாடு: இரும்புச்சத்து, வைட்டமின் B12 மற்றும் பாலிக் அமிலம் போன்றவற்றின் பற்றாக்குறை வாய்ப்புண்ணுக்கு காரணமாகிறது.
  • பற்களின் கூர்மை: பற்களின் கூர்மையான பகுதிகள் வாயில் காயத்தை ஏற்படுத்தி புண்ணை உருவாக்குகின்றன.
  • மருந்துகளின் பக்க விளைவுகள்: சில மருந்துகள் வாய் மற்றும் வயிற்றுப் புண்களை உருவாக்குகின்றன.
  • பழக்கவழக்கங்கள்: புகைப்பழக்கம், மது, பான், குட்கா போன்றவை வாய்ப்புண்ணை தூண்டுகின்றன.

mouth ulcer problem

வாய்ப்புண் குணப்படுத்த இயற்கை மருத்துவ முறைகள்:


தேங்காய்:


பச்சைத் தேங்காயின் கீற்றுகளை காலையில் மென்று சாப்பிடுவது வாய்ப்புண்ணை குணப்படுத்தும். அதே போல ஒரு கிளாஸ் தேங்காய்ப்பால் எடுத்து அதில் தேன் கலந்து வெறும் வயிற்றில் குடிப்பதும் நல்லது.

கசகசா:


கசகசா, முந்திரி, பாதாம், தேங்காய் மற்றும் பால் கலந்து பானம் தயாரித்து குடித்தால் வாய்ப்புண் மற்றும் வயிற்றுப் புண் குணமாகும்.

61gCkQkevML._UF1000,1000_QL80_

கொய்யா:


கொய்யா பழம் மற்றும் இலைகளை மென்று துப்புவது வாய்ப்புண்ணை குறைக்கிறது. கொய்யா இலையை கொதிக்க வைத்து அந்த நீரால் வாய் கொப்புளித்தாலும் நன்மை கிடைக்கும்.


தேன்:


தேனில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் குணங்கள் வாய்ப்புண்ணை குணப்படுத்துகின்றன. புண் உள்ள இடத்தில் தேனை தடவலாம்.

honey-1296x728-header

பால் மற்றும் தயிர்:


பால் மற்றும் தயிர் வாய்ப்புண்ணை குறைக்கின்றன. தயிருடன் வாழைப்பழம் மற்றும் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் குணமாகும்.

மேலும் படிக்க: அடிக்கடி காதில் பட்ஸ் கொண்டு சுத்தம் செய்யக்கூடாது; காது கேளாமை பிரச்சனை வரும்

வாழைப்பழம் மற்றும் வாழைப்பூ:


வாழைப்பழம் மற்றும் வாழைப்பூவை உணவில் சேர்த்து சாப்பிடுவது வாய்ப்புண்ணை குணப்படுத்த உதவும். இந்த வாழைப்பூ வைத்து பொரியல் செய்து உணவில் சேர்த்து கொள்ளலாம்.


நாவல் பழம்:


இரும்புச்சத்து மற்றும் பீட்டா கரோட்டின் நிறைந்த நாவல் பழம் வாய்ப்புண்ணுக்கு நல்லது. இது வாய்ப்புண்ணை குணப்படுத்த மட்டும் இல்லாமல் சர்க்கரை நோயாளிகளுக்கும் உதவும்.

தக்காளி மற்றும் மணத்தக்காளி கீரை:


வெறும் வயிற்றில் தக்காளி ஜூஸ் குடிப்பது வாய்ப்புண்ணை குறைக்கிறது. மணத்தக்காளி கீரையை 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிடுவது நாட்பட்ட புண்களை குணப்படுத்தும். இந்த இயற்கை முறைகளை பின்பற்றி வாய்ப்புண்ணிலிருந்து விடுபடுங்கள்.

Image source: Freepik

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]