பொட்டாசியம் குறைபாடு உடலில் இருப்பதால் உண்டாகும் மாற்றங்கள் இவை தான்!!!

உங்கள் உடலில் பொட்டாசியம் குறைபாடு இருந்தால், உடலில் சில மாற்றங்களை உணர முடியும். அவை என்னவென படித்தறிந்து பயன்பெறலாம்.

potassium big

உங்கள் உடலில் பொட்டாசியம் குறைபாடு இருந்தால், உடலில் சில மாற்றங்களை உணர முடியும். அவை என்னவென படித்தறிந்து பயன்பெறலாம்.

உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க பல வகையான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் தேவைப்படுகின்றன. இவற்றில் முக்கியமான ஒன்று பொட்டாசியம். இது மிக முக்கியமான தாதுக்களில் ஒன்றாக கருதப்படுகிறது. நம் உடலின் ஒவ்வொரு உயிரணுவிலும் பொட்டாசியம் உள்ளது. உடலின் நான்கு முக்கிய மின்னாற் பகுபொருளில் பொட்டாசியமும் கணக்கிடப்படுகிறது. இதனால் தான் பொட்டாசியம் உடலில் நீர் சமநிலையை அடைவதற்கும், இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதற்கும் உதவுகிறது.

பொட்டாசியத்தின் பங்கு இதில் மட்டுமல்ல. புரதங்கள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகளின் செரிமானத்திலும் பொட்டாசியம் முக்கிய பங்கு வகிக்கிறது. தசை வலிமையாக இருக்கவும், நரம்பு செயல்பாடுகளுக்கும் பொட்டாசியம் தேவைப்படுகிறது. ஆனால் சில நேரங்களில் ஆன்டிபயாடிக்ஸ் எடுத்துக்கொள்வது, வாந்தி அல்லது வயிற்றுப்போக்கு, மெக்னீசியம் அளவு குறைபாடு, அதிகமாக வியர்ப்பது மற்றும் ஃபோலிக் அமிலக் குறைபாடு ஆகியவையும் பொட்டாசியம் அளவு குறைய காரணமாகிவிடுகிறது. பொட்டாசியம் அளவு குறைவாக இருக்கும்போது, உடலில் சில மாற்றங்கள் ஏற்படும்.

இந்த பதிவில் நாங்கள் அதை பற்றி தான் உங்களுக்கு சொல்ல போகிறோம்.

தசை சேதம் அல்லது தசை பலவீனம் இருத்தல்

potassium

உடலில் பொட்டாசியம் அளவு குறைவாக இருந்தால், அது உங்கள் தசை ஆரோக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இது தசைகளின் செயல்பாட்டைத் தடுக்கிறது. மேலும், தசைகளையும் சேதப்படுத்துகிறது. இதன் காரணமாக தசைகளில் விறைப்பு, வலி, பலவீனம் போன்றவற்றை உணரலாம். எந்த காரணமுமின்றி உங்கள் தசைகள் பலவீனமாகவும் சோர்வாகவும் இருப்பது போல நீங்கள் உணர்ந்தால், உங்கள் பொட்டாசியம் அளவை சரிபார்க்கவும்.

களைப்பாக இருத்தல்

potassium

நீங்கள் எப்போதுமே சோர்வாக உணர்ந்தாலோ அல்லது எந்த வேலையும் செய்யாமல் இருந்தாலோ அதற்கு பொட்டாசியம் பற்றாக்குறை கூட காரணமாக இருக்கலாம். உடலில் உள்ள ஒவ்வொரு உயிரணுவும் செயல்பட சரியான அளவு பொட்டாசியம் தேவைப்படுகிறது, ஆனால் உடலில் பொட்டாசியம் அளவு குறைவாக இருக்கும்போது, அது உயிரணுக்கள் மற்றும் உறுப்புகளின் செயல்பாட்டை பாதிக்கிறது. இதனால், ஒருவர் சோர்வாகவும், பலவீனமாகவும் உணரலாம். இருப்பினும், பலவீனமாக இருப்பதற்கு பல காரணங்கள் இருக்கக்கூடும், எனவே உங்கள் மருத்துவரை அணுகுவது நல்லது.

மலச்சிக்கல் ஏற்படுதல்

potassium

நீங்கள் சில காலமாக மலச்சிக்கல் பிரச்சனையால் அவதிப்பட்டீர்கள் என்றால், அதற்கு உடலில் பொட்டாசியம் குறைபாடு கூட காரணமாக இருக்கலாம். பொட்டாசியம் என்பது செரிமான அமைப்புக்கு உதவும் முக்கியமான ஒரு தாதுவாகும். எனவே உடலில் பொட்டாசியம் அளவு குறைந்தால், வயிறு மற்றும் குடல்களின் தசைகள் சரியாக வேலை செய்யாது. இதன் காரணமாக செரிமானத்தில் சிக்கல் உண்டாகி, மலச்சிக்கல் ஏற்படலாம். மலச்சிக்கலோடு சேர்த்து, நீங்கள் வயிறு உப்புசம், வலி மற்றும் தசைப்பிடிப்பு ஆகியவற்றையும் உணரலாம்.

மன நல மாற்றம் ஏற்படுவதை உணர்தல்

potassium

சிறந்த மன ஆரோக்கியம் மற்றும் மூளையின் செயல்பாட்டிற்கு பொட்டாசியம் மிக முக்கியமானது. நரம்பியக்கடத்தியான செரோடோனின் சமிக்ஞைகளை கடத்தி செல்வதற்கு இது உதவுகிறது. பொட்டாசியம் அளவு குறைவாக இருக்கும்போது, குழப்பம், மனநிலை மாற்றங்கள் மற்றும் மனச்சோர்வு போன்ற பல்வேறு மனநிலை சார்ந்த பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். 2009-ஆம் ஆண்டு ஜெனரல் ஹாஸ்பிடல் சைக்கியாட்ரி நடத்திய ஆய்வின் முடிவில் ஹைபோகலீமியா, எனும் பொட்டாசியம் குறைபாடு, மனச்சோர்வை ஏற்படுத்தும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

எனவே இனி நீங்கள் இந்த அறிகுறிகளை அலட்சியமாக எடுத்துக்கொள்ளாதீர்கள். மேலும் பொட்டாசியம் பற்றாக்குறையை விரைவில் சரி செய்ய மருத்துவர் ஆலோசனையை பெறவும்.

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

Images Credit: freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP