கருஞ்சீரகம் நமது பாரம்பரிய மசாலா பொருளாகும். கருஞ்சீரகம் கலோஞ்சி என்றும் கருப்பு சீரகம், நைஜெல்லா சாடிவா அல்லது கருப்பு விதை என்றும் அழைக்கப்படுகிறது. கருஞ்சீரகத்தில் பலவிதமான ஆரோக்கிய நன்மைகள் கொட்டி கிடக்கின்றன. ஏன் புற்று நோய்க்கு கூட கருஞ்சீரகம் மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. அந்த அளவிற்கு கருஞ்சீரகம் மருத்துவ குணங்கள் நிறைந்தது. கருஞ்சீரகம் என்பது ஒரு பல்துறை மூலப்பொருள் ஆகும். இது உடல் எடையை குறைப்பதில் இருந்து சரும ஆரோக்கியம் மற்றும் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை குறைக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது.
மேலும் படிக்க: காலையில் சுடு தண்ணீர் குடித்தால் நடக்கும் நன்மைகள்
இது பொதுவாக சமையல் மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் ஒரு மசாலா ஆகும் விதைகள் வடிவில் மட்டுமல்லாமல் கருப்பு சீராக எண்ணெய் சரும ஆரோக்கியத்திற்கும் ஆரோக்கியமாக கருதப்படுகிறது. இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் பயோஆக்டிவ் கலவைகள் உள்ளன, அவை தோல் மற்றும் முடி ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். மேலும் இது உயர் இரத்த அழுத்தம், வீக்கம், முதுகுவலி போன்றவற்றைக் கட்டுப்படுத்த உதவும்.
தனிமனித எடை மேலாண்மை குறிப்பாக உடல் எடையை குறைக்க வேண்டும் என்று பெரிதும் விரும்புபவர்களுக்கு கருப்பு சீரகம் அதன் பல்வேறு மருத்துவ குணங்களால் கை கொடுக்கும். ஏனென்றால் கருஞ்சீரகத்தில் உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் ஆற்றல் நிறைந்துள்ளது.
கருஞ்சீரகம் தனிமனித உடலில் உள்ள பசியை அடக்கும் பண்புகளை கொண்டிருப்பதாக ஆய்வுகள் கூறுகிறது. சில ஆய்வுகள் கருஞ்சீரகம் பசியின் உணர்வுகளை குறைக்கவும் மன நிறைவை ஊக்குவிக்கவும் உதவும் என்று குறிப்பிடுகின்றன. இது குறைந்த கலோரி உட்கொள்ளலுக்கு வழிவகுக்கும் இதனால் எடை இழப்புக்கு பெரிதும் கருஞ்சீரகம் உதவுகிறது.
கருப்பு சீரகம் பல சாத்தியமான வளர்ச்சிதை மாற்ற நன்மைகளை கொண்டிருப்பதாக ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. இது இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தவும், இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும் உதவும். மேலும், இது ஆரோக்கியமான வளர்ச்சிதை மாற்றம் மற்றும் எடை நிர்வாகத்தை குறிப்பாக உடல் எடையை குறைக்க ஆதரவாக இருக்கும். இருப்பினும், வளர்சிதை மாற்றத்தில் அதன் விளைவுகளை முழுமையாக புரிந்து கொள்ள கூடுதல் ஆராய்ச்சி தேவை.
உடலின் நாள்பட்ட வீக்கம் எடை இழப்பு முயற்சிகளில் தலையிடலாம். கருஞ்சீரகத்தில் அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்ட கலவைகள் அதிகம் உள்ளன. இது உடலில் வீக்கத்தை குறைக்கும். இதனால் எடை மேலாண்மைக்கு மிகவும் சாதகமான சூழலை கருஞ்சீரகம் உருவாக்குகிறது.
கருஞ்சீரகம் பாரம்பரியமாக செரிமான ஆரோக்கியத்தை ஆதரிக்க பயன்படுத்தப்படுகிறது. இது வயிற்று உப்புசம்,வாயு மற்றும் அஜீரணம் போன்ற செரிமான பிரச்சனைகளை போக்க உதவுகிறது. ஆரோக்கியமான செரிமான அமைப்பு ஊட்டச்சத்து உறிஞ்சுதலை மேம்படுத்துகிறது மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வை கருஞ்சீரகம் மேம்படுத்துகிறது. இந்த பண்புகளால் இடை நிர்வாகத்தை ஆதரிப்பதால் உடல் எடையை குறைக்க விரும்புவோர் கருஞ்சீரகத்தை பயன்படுத்தலாம்.
கருஞ்சீரகத்தில் ஆன்ட்டிஆக்சிடென்ட்கள் நிறைந்துள்ளன இது ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்தில் இருந்து செல்களை பாதுகாக்க உதவுகிறது. ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை ஆதரிக்கலாம் மற்றும் ஆரோக்கியமான அழற்சி பண்பை ஊக்குவிப்பதன் மூலமும் உகந்த செல்லுலார் செயல்பாட்டை ஆதரிப்பதன் மூலமும் எடை நிர்வாகத்தில் பங்கு வகிக்கலாம்.
கருஞ்சீரகம் இந்த சாத்தியமான நன்மைகளை அளிக்கும்போது தனிப்பட்ட முடிவுகள் மாறுபடலாம் மற்றும் எடை இழப்பு என்பது ஒரு பன்முக செயல்முறையாகும். சீரகத்தை சீரான உணவில் சேர்த்துக் கொள்வது வழக்கமான உடல் செயல்பாடு மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையுடன் இணைந்து வெற்றிகரமான எடை மேலாண்மைக்கு முக்கியமாகும் கருஞ்சீரகத்தை சரியாக பயன்படுத்தவும்.
மேலும் படிக்க: இலவங்கப்பட்டை தண்ணீருடன் உங்கள் நாளைத் தொடங்கினால் என்ன நடக்கும்?
Image source: freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]