herzindagi
drinking warm water benefits for women

Drinking Warm Water : வெறும் வயிற்றில் வெந்நீர் குடிப்பது நல்லதா?

நம்ப முடிகிறதா? பெண்களின் 10 உடல் நல பிரச்சனைகளை சரி செய்ய ஒரு கிளாஸ் வெந்நீர் போதும். வெந்நீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகளை நிபுணரிடமிருந்து தெரிந்து கொள்வோம்&hellip; <div>&nbsp;</div>
Expert
Updated:- 2023-03-17, 11:38 IST

வெந்நீர் பல வழிகளில் உடலுக்கு நன்மை பயக்கிறது. இது உங்கள் ஆரோக்கியத்தில் பல அதிசய மாற்றங்களை ஏற்படுத்தும். ஒரு நாளைக்கு 8 முதல் 10 கிளாஸ் வரை தண்ணீர் குடிக்க பரிந்துரை செய்யப்படுகிறது. பெரும்பாலான பெண்கள் ஒரு கப் காபி அல்லது டீயுடன் தங்களுடைய நாளை தொடங்குகிறார்கள். இந்த பழக்கத்தால் வாயு, வயிற்று வலி, முகப்பரு, மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.

உடல் நலத்தில் கூடுதல் அக்கறை செலுத்தும் பெண்கள் இதற்கு மாறாக சில ஆரோக்கிய பானங்கள் அல்லது வெந்நீர் குடிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இப்பதிவில் பகிரப்பட்டுள்ள வெந்நீரின் நன்மைகளை படித்தறிந்த பின் நீங்களும் அதை உங்கள் வழக்கத்தில் சேர்த்துக் கொள்வது உறுதி. ஏனெனில் இது பெண்களுக்கு ஏற்படக்கூடிய 10 உடல்நல பிரச்சனைகளை சரி செய்யும். இதைப் பற்றிய தகவல்களை நிபுணரிடமிருந்து தெரிந்து கொள்வோம்.

இந்த பதிவும் உதவலாம்: ஆரோக்கியத்திற்கு எந்த சமையல் எண்ணெய் சிறந்தது தெரியுமா?

நிபுணர் கருத்து

hot water benefits for women

மருத்துவர் அப்ரார் முல்தானி அவர்களின் கருத்துப்படி வெந்நீர் நம் உடலில் சேரும் கொழுப்பை எரிக்கிறது. இதன் விளைவாக உடல் எடையை குறைக்கலாம். வெந்நீர் மாதவிடாய் நாட்களில் ஏற்படும் தசைபிடிப்பு மற்றும் வலியையும் குணப்படுத்துகிறது. மேலும் மாதவிடாய் நாட்களில் ஏற்படும் தலைவலியையும் போக்க உதவுகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக தினசரி செயல்பாடுகளை செய்ய உடலுக்கு தண்ணீர் தேவைப்படுகிறது. இந்நிலையில் ஒரு கிளாஸ் வெந்நீர் உடன் உங்கள் நாளைத் தொடங்குவது உடலுக்கு பல அற்புதங்களை செய்யும்.

வெந்நீர் குடிப்பதால் கிடைக்கும் 10 ஆரோக்கிய நன்மைகளை இப்போது பார்க்கலாம்

warm water benefits

  • வெந்நீர் வலி நிவாரணியாக செயல்பட்டு உடல் வலியைப் போக்குகிறது
  • இது செரிமான மண்டலத்தை சிறப்பாக செயல்பட அனுமதிக்கிறது.
  • வெந்நீர் இரத்தத்தைச் சுத்திகரித்து, சருமம் தொடர்பான பிரச்சனைகளை தடுக்கிறது
  • மூட்டு வலியை குறைப்பதிலும் வெந்நீர் நன்மை பயக்கிறது.
  • வெந்நீர் இயற்கையாகவே இரத்தத்தை மெல்லியதாக்கும் என்பதால் அதிக கொலஸ்ட்ரால் உள்ளவர்களுக்கு வெந்நீர் நல்ல விளைவுகளை ஏற்படுத்தும்.
  • வெந்நீர் உடலில் இரத்த கட்டிகள் உருவாக்குவதைத் தடுக்கிறது. இதன் மூலம் பக்கவாதம் மற்றும் இதய நோய்களின் அபாயத்தையும் குறைக்கலாம்.
  • இது பாக்டீரியா தொற்றை தடுக்கிறது. ஆஸ்துமா, இருமலில் போன்ற பிரச்சனைகளுக்கும் வெந்நீர் குடிப்பது நன்மை தரும்.
  • வெந்நீர் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து சைனஸ் போன்ற ஒவ்வாமை நோய்களில் இருந்து உடலை பாதுகாக்கிறது.
  • வெந்நீர் சுருக்கங்களை குறைத்து உங்களை இளமையாக வைத்துக் கொள்ள உதவும்.
  • இது முடி உதிர்தல் மற்றும் இளநரையை தடுக்கிறது. வெந்நீர் உங்கள் கூந்தல் ஆரோக்கியத்திற்கும் நல்லது.

இந்த பதிவும் உதவலாம்: பெண்களின் நீர்க்கட்டி பிரச்சனைக்கு பல அதிசயங்களை செய்யும் தண்ணீர் விட்டான் கிழங்கு


இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

image source:freepik

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]