உடலில் ஏதேனும் பிரச்சனையா? என்பதை தெரிந்து கொள்ள மருத்துவர்கள் பரிந்துரைக்கும் முதல் விஷயம் இரத்த சோதனை. மிகவும் சின்ன விஷயம்தான் என்றாலும் ஒரே ஒரு இரத்த சோதனை எடுத்தால் போதும். உடலில் இருக்கும் அனைத்து வியாதிகளை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். இரத்த பரிசோதனையின் முடிவுகளை பொறுத்தே மருத்துவர்கள் சிகிச்சையை தொடங்குகின்றனர்.
நீங்கள் முற்றிலும் ஆரோக்கியமாக இருந்தாலுமம் கூட ஒவ்வொரு வருடமும் இரத்த பரிசோதனை செய்து கொள்வது மிக மிக அவசியம். குறிப்பாக பெண்கள் உடல் ஆரோக்கியத்தின் மீது அதிக கவனம் செலுத்துவதில்லை. குடும்பம், குழந்தைகள் என எப்போதுமே பரபரப்பாக இருப்பவர்கள் ஒவ்வொரு வருடம் இந்த வகையான இரத்த பரிசோதனைகளை செய்து கொள்வது மிகவும் நல்லது.
இதுக்குறித்து ஊட்டச்சத்து தீர்ஷி பிரகே நம்முடன் விளக்குகிறார். பெண்கள் தவறாமல் ஒவ்வொரு வருடமும் எடுக்க வேண்டிய இரத்த சோதனைகள் பற்றியும் அவர் கூறுகிறார்.
வைட்டமின்- B12 + ஃபோலேட்
இந்த சோதனை இரத்தத்தில் வைட்டமின் B12 மற்றும் ஃபோலேட் அளவை அளவிடுகிறது. உடல் ஆரோக்கியமாக செயல்பட வைட்டமின் B12 (கோபாலமின்) மற்றும் ஃபோலேட் (ஃபோலிக் அமிலம்) தேவைப்படுகிறது. இரண்டு ஊட்டச்சத்துக்களும் இரத்த சிவப்பணுக்களை உருவாக்குவதிலும் டிஎன்ஏ மற்றும் ஆர்என்ஏவை உருவாக்குவதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன.
இந்த பதிவும் உதவலாம்:1 மாதத்தில் தொப்பையை குறைக்க வேண்டுமா? அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்
வைட்டமின்-D
இந்த சோதனை எலும்புகள், கருவுறுதல், நோய் எதிர்ப்பு ஆரோக்கியம் மற்றும் பலவற்றை மதிப்பிட உதவுகிறது. வைட்டமின் D சோதனையானது இரத்தத்தில் குறைந்த அளவு வைட்டமின் D உள்ளதா? என்பதைச் சரிபார்க்க பயன்படுகிறது. இதனால் உடல்நலப் பிரச்சனைகl ஏற்படுவதற்கு முன்பே அதற்கு சிகிச்சையளிக்க முடியும்.
தைராய்டு
பெண்களுக்கு தைராய்டு பிரச்சனை ஏற்படுவது பொதுவான ஒன்று. இதை உறுதி செய்யவும், உடலில் ஹைப்பர் தைராய்டிசம் அல்லது ஹைப்போ தைராய்டிசம் பிரச்சனைகளை கண்டறியவும் தைராய்டு பரிசோதனைகளை எடுப்பது நல்லது. தைராய்டு என்பது உங்கள் கழுத்தின் முன்புறத்தில் ஒரு சிறிய, பட்டாம்பூச்சி வடிவ சுரப்பி ஆகும், இது தைராக்ஸின் (T4) மற்றும் ட்ரையோடோதைரோனைன் (T3) ஆகிய இரண்டு தைராய்டு ஹார்மோன்களை உருவாக்குகிறது.
இரத்த சோகை
உடலில் இரும்புச்சத்து மிகக் குறைவாக உள்ளதா என்பதைச் சரிபார்க்க இந்த சோதனைகள் உதவுகின்றன. இது இரத்த சோகையின் அறிகுறியாக இருக்கலாம். இரத்த சோகையின் பல்வேறு வகைகளைக் கண்டறியவும். உடலில் இரும்பு சத்து அளவு அதிகமாக உள்ளதா? என்பதைச் சரிபார்க்கவும் இந்த வகையான சோதனையை எடுக்கவும்.
லிப்பிட் பேனல்
கொலஸ்ட்ரால் மற்றும் ட்ரைகிளிசரைடு அளவை சோதிக்கிறது. கூடுதலாக, ஒமேகா 3 மற்றும் ஒமேகா 6 மதிப்புகளைப் பெறலாம்.
HBAIC
உங்கள் உடலில் இரத்த குளுக்கோஸ் அளவை சோதிக்கிறது. HbA1c சோதனையின் முடிவில் கடந்த 3 மாதங்களில் ஒரு நபரின் இரத்த சர்க்கரையை தீர்மானிக்க முடியும். உணவுக்கு முன் அல்லது பின் இரத்த சர்க்கரை அளவை அளவிடும் சோதனைகளை விட இது மிகவும் நம்பகமானதாக கருதப்படுகிறது.
இந்த பதிவும் உதவலாம்:பெண்கள் பொது கழிப்பிடத்தை பயன்படுத்துவதற்கு முன்பு கவனிக்க வேண்டிய விஷயங்கள்
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation