herzindagi
sunscreen uses

Sunscreen Benefits : குளிர்காலத்திலும் சன்ஸ்கிரீன் பயன்படுத்துங்க! ஏன் தெரியுமா ?

கோடை வெயிலில் சருமப் பாதுகாப்பை உறுதி செய்யும் சன்ஸ்கிரீனை குளிர்காலத்திலும் பயன்படுத்துவது முக்கியம் என தோல் நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்
Editorial
Updated:- 2024-01-16, 18:16 IST

சூரியன் வெளியிடும் புற ஊதா கதிர்களில் இருந்து சன்ஸ்கிரீன் பெரிதும் உதவிகரமாக இருக்கிறது. துத்தநாக (Zinc) ஆக்சைடு, டைட்டானியம் டை ஆக்சைடு, ஆக்ஸிபென்சோன், ஆக்டினாக்ஸேட், ஆக்டிசலேட் மற்றும் அவோபென்சோன் போன்ற பொருட்களைக் கொண்ட சன்ஸ்கிரீன்கள் தோல் பராமரிப்பு, ஈரப்பதமாக்குதல் ஆகியவற்றை உள்ளடக்கியது.

குளிர்காலத்தில் சன்ஸ்கிரீன் பயன்படுத்தாவிட்டால் தோல் புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கும். இந்தப் பருவத்தில் சூரியனின் புற ஊதா கதிர்கள் அபாயகரமானதாகவே இருக்கும். குறிப்பாக ஓசோன் படலம் மிக மெல்லியதாக இருப்பதால் அதிக தீங்கு விளைவிக்கும் கதிர்கள் உங்கள் சருமத்தை அடையும். 

இதற்கு சன்ஸ்கிரீன் பயன்பாடு ஒரு பாதுகாப்பு தடையாக செயல்படுகிறது, வயதான தோற்றம் மற்றும் தோல் புற்றுநோயின் வளர்ச்சி ஆகிய இரண்டின் அபாயத்தையும் சன்ஸ்கிரீன் குறைக்கிறது.

Sunscreen

புற ஊதா கதிர்கள்

இரண்டு வகையான UV கதிர்கள் உள்ளன. அவை UVA மற்றும் UVB கதிர்கள். இந்த கதிர்கள் மிகவும் ஆழமான மட்டத்தில் தோலை ஊடுருவிச் செல்லும். இந்த கதிர்கள் கரும்புள்ளிகள் மற்றும் சுருக்கங்கள் போன்ற வயதான அறிகுறிகளுக்கும் காரணமாகின்றன. புற ஊதா B கதிர்கள் சிவத்தல் புற ஊதா A கதிர்களைப் போல தோலில் ஆழமாக ஊடுருவாது. 

இந்த கதிர்கள் வசந்த காலத்தின் துவக்கத்தில் இருந்து இலையுதிர்காலத்தின் ஆரம்ப மாதங்களில் வலுவாக இருக்கும். நல்ல வெயில் அடிக்கும் நாளில் பனிச்சறுக்குக்குச் சென்றால் UVB கதிர்களால் மூக்கு மற்றும் உதடுகளில் மாற்றம் ஏற்படுவதை நீங்கள் கவனிக்கலாம். UVA மற்றும் UVB கதிர்கள் ஆண்டு முழுவதும் இருக்கும், எனவே வெளியில் வானிலை எப்படி இருந்தாலும் ஒவ்வொரு நாளும் சன்ஸ்கிரீன் பயன்படுத்துவது அவசியம்.

மேலும் படிங்க Fatty Liver Disease : கொழுப்பு கல்லீரல் ! எதை சாப்பிடக்கூடாது ? எதை சாப்பிடலாம்

தோல் பராமரிப்பு பண்புகள்

சன்ஸ்கிரீன் சருமத்திற்கு சூரிய ஒளியில் இருந்து பாதுகாப்பு அளிப்பதை தவிர பயனுள்ள பல நன்மைகளை வழங்குகின்றன. கடுமையான குளிர்கால வானிலை உங்கள் சருமத்தை மிகவும் உலர்த்தும். EltaMD போன்ற சன்ஸ்கிரீன் தயாரிப்புகள் வறட்சி மற்றும் ரோசாசியாவால் பாதிக்கப்படக்கூடிய உணர்திறன் வாய்ந்த தோல் வகைகளை பாதுகாக்க உதவுகின்றன. 

மற்ற சன்ஸ்கிரீன் தயாரிப்புகள் சருமத்திற்கு வயது எதிர்ப்பு நன்மைகளை வழங்குவதற்கும் சருமத்தின் தோற்றத்தை மேம்படுத்துவதற்கும் வைட்டமின் சி உடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. SPFஐ உள்ளடக்கிய வண்ணமயமான மாய்ஸ்சரைசர் அல்லது BB கிரீம் தயாரிப்புகளை நீங்கள் வாங்கி பயன்படுத்தலாம்

குளிர்ந்த காலநிலை சன்ஸ்கிரீனை அகற்றும்

கோடைக்காலத்தில் நீங்கள் கடற்கரை அல்லது ஏரியில் இருக்கும்போது, வியர்வை அல்லது தண்ணீர் காரணமாக சன்ஸ்கிரீன் உருகுவதை உணரலாம். குளிர்காலத்தில் பனி மற்றும் பலத்த காற்று சன்ஸ்கிரீனையும் அதன் செயல்திறனையும் அழித்துவிடும். 

எனவே காலையில் மட்டும் ஒரு அடுக்கு சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துவது போதுமானதாக இருக்காது. வியர்வை வெளியேறிய உடனேயே ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் சன்ஸ்கிரீனை மீண்டும் பயன்படுத்தப் பரிந்துரைக்கப்படுகிறது.

மேலும் படிங்க Late eating : தாமதமாக சாப்பிடவே கூடாது ! இதய நோய் பாதிப்புக்கு ஆளாவீர்கள்

தோல் புற்றுநோய் அறக்கட்டளை தகவலின்படி கடல் மட்டத்திலிருந்து ஒவ்வொரு ஆயிரம் அடி உயரும் போது புற ஊதா கதிர்வீச்சு ஐந்து விழுக்காடு அதிகரிக்கிறது. எனவே பனிச்சறுக்கு வீரர்கள், பனிப்பிரதேச சுற்றுப்பயண பிரியர்கள் சன்ஸ்கிரீனைப் பயன்படுத்தி சருமத்திற்கு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். நீங்கள் அதிக உயரத்தில் இருந்தால் புற ஊதா கதிர்களுக்கு அதிகமாக பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. 

புற ஊதா கதிர்கள் தோலில் தடம் புரண்டு வெயிலை உண்டாக்கி, தோல் புற்றுநோயை உருவாக்கும் அபாயத்தை அதிக அளவில் ஏற்படுத்தலாம். எனவே குளிர்காலத்திலும் சன்ஸ்கிரீன் பயன்பாடு தேவை.

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]