Internal Organ Cleansing: உடலில் உள்ள உள் உறுப்புகளை சுத்தம் செய்வது எப்படி ? என்ன சாப்பிட வேண்டும்?

ஆண்டு முழுவதும் உடலில் எந்த பிரச்சனைகளும் இல்லாமல் ஆரோக்கியமாக வாழ வேண்டுமா? அதற்கு நீங்கள் முதலில் உங்கள் உடலில் உள்ள உள் உறுப்புகளை சுத்தப்படுத்த வேண்டும். உடல் இயங்க உதவியாக இருக்கும் உடலில் உள்ள ராஜ உறுப்புகளை சுத்தம் செய்ய நீங்கள் என்ன சாப்பிட வேண்டும்? அதை எப்படி சாப்பிட வேண்டும் என்பது குறித்து இந்த பதிவில் விரிவாக உள்ளது.
image

உடலை சுத்தம் செய்ய வேண்டும் என்றால் நாம் சோப்பு போட்டு குளிப்போம் அல்லது ஷாம்பு போட்டு குளிப்போம். அதே மாதிரி நீங்கள் என்றாவது யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா? உங்கள் உடலில் உள்ள உள் உறுப்புகளை எப்படி சுத்தம் செய்ய வேண்டும்? உடலில் உள்ள உள் உறுப்புகளை நாம் கட்டாயம் சுத்தம் செய்ய வேண்டும். அப்படி உடலில் உள்ள உள் உறுப்புகள் அழுக்காக, கழிவுகள் நிறைந்து இருந்தால் பல உடல்நல பிரச்சனைகள் ஏற்படும். உடலில் எந்த உறுப்புகளில் பிரச்சனை இருக்கிறதோ அதற்கு ஏற்றபடி சில இயற்கையான பொருட்களை நீங்கள் சாப்பிட்டு உங்கள் உள் உறுப்புகளை சுத்தம் செய்து கொள்ளலாம். நாம் தினமும் எத்தனையோ உணவுகளை சாப்பிடுகிறோம. உடலில் உள்ள உறுப்புகளை சுத்தம் செய்ய என்ன உணவுகளை சாப்பிட வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம்.

உடலில் உள்ள உள் உறுப்புகளை சுத்தம் செய்வது எப்படி ?

Untitled design - 2025-03-26T141418.365

1. முதலாவது நமது உடலில் வலது பக்கம் இருக்கக்கூடிய லிவர் கல்லீரல்

உடல் செயல்பாட்டிற்கு மிகவும் முக்கியமான உறுப்பான கல்லீரலை எப்படி சுத்தம் செய்ய வேண்டும் என்று யோசிக்கிறீர்களா அதற்கான எளிய வழிமுறை இதில் உள்ளது. மஞ்சள், எலுமிச்சை பழம், இஞ்சி, பூண்டு இந்த நான்கு பொருட்களை வைத்து கல்லீரலை நாம் சுத்தம் செய்யலாம்.

செய்முறை

  1. ஒரு எலுமிச்சம் பழத்தை பாதியாக நறுக்கி சாறு எடுத்துக் கொள்ளவும்.
  2. அதனுடன் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்துக் கொள்ளவும்.
  3. கால் துண்டு இஞ்சி நசுக்கி அதில் சாறு எடுத்துக் கொள்ளவும்.
  4. இந்த மூன்றையும் ஒரு கிண்ணத்தில் கலந்து 100 மில்லி தண்ணீர் கலந்து, ஒரு டீஸ்பூன் தேன் கலந்து அப்படியே குடிக்கவும்.

பூண்டு

பூண்டை நீங்கள் பல வழிகளில் எடுத்துக் கொள்ளலாம். குழம்பு, மற்றும் மதிய சமையல் வேலைகளில் விருப்பமான வகைகளில் பூண்டை நீங்கள் சமைத்து சாப்பிட்டு கொள்ளுங்கள்.

2. நுரையீரலை எப்படி சுத்தம் செய்வது?

நமது நுரையீரல் நமது மூச்சுக்காற்றை இழுத்து விடுவதற்கு செயல்படும் உறுப்பாகும். நிறைய பேருக்கு புகைபிடித்தல் பழக்கம் இருப்பதால் நுரையீரலில் புகை படிந்து பல பிரச்சனைகளை சந்திப்பார்கள். காற்றின் மாசுக்கள் காரணமாக பல பிரச்சனைகள் ஏற்படும். இதற்கு பைனாப்பிள் , எலுமிச்சை (சிட்ரஸ் பழங்கள்) அல்லது ஆரஞ்சு, இஞ்சி ஆகியவற்றை சாப்பிட வேண்டும்.


செய்முறை

  1. நல்ல பழுத்த பைனாப்பிள் பழத்தை வாங்கி நீங்கள் அப்படியே சாப்பிடலாம்.
  2. அல்லது ஜூஸ் போட்டு குடிக்கலாம்.
  3. கூடுதலாக எலுமிச்சை சாருடன் இஞ்சியை சேர்த்து ஜூஸாக குடிக்கலாம்.
  4. ஆரஞ்சு பழத்தில் ஜூஸ் தயாரித்து குடிக்கலாம்.

3. மூன்றாவது நமது தோல் பளபளக்கவும், முடி சைனிங்காகவும் நீளமாகவும் வளர

  • பீட்ரூட்
  • கேரட்
  • ஆப்பிள்
  1. ஒரு பெரிய பீட்ரூட்டை தோலை உரித்து சிறிது சிறிதாக வெட்டி வைத்துக் கொள்ளவும்.
  2. நறுக்கி வைத்த பீட்ரூட் துண்டுகளை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
  3. அதனுடன் இரண்டு கேரட்டை சிறியதாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும்.
  4. கூடுதலாக அதில் ஒரு ஆப்பிள் பழத்தை சிறிது சிறிதாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும்.
  5. இந்த மூன்றையும் ஒன்றாக அரைத்து ஜூஸ் வடிவில் தயாரித்து குடிக்கவும்.
  6. இந்த மூன்று பொருட்களையும் பச்சையாகவும் ஜூசாகவும் சாப்பிட்டால் உடல் பளபளப்பாக இருக்கும்.

4. நான்காவது கிட்னியை எப்படி சுத்தம் செய்வது?


நன்றாக தண்ணீர் குடித்தாலே கிட்னி சுத்தமாகும். என்ன சாப்பிட்டு சுத்தம் செய்யலாம் என்றால், நீர்ச்சத்து அதிகம் நிறைந்த வெள்ளரிக்காய், எலுமிச்சை, தர்பூசணி பழம்.

செய்முறை

  1. வெள்ளரிக்காய் ஜூசை கோடைகாலத்தில் தினமும் ஒரு கிளாஸ் குடிக்கலாம்.
  2. எலுமிச்சை பல சாறு எடுத்து அதில் சிறிதளவு உப்பு அல்லது சர்க்கரை சேர்த்து குடிக்கலாம்.
  3. தர்பூசணி பழத்தை முழுமையாக அப்படியே சாப்பிடலாம் அல்லது அதையும் ஜூஸ் வடிவில் குடிக்கலாம்.

5. ஐந்தாவதாக முதலில் உள்ள இரத்தத்தை சுத்தம் செய்வது எப்படி?


இரத்தத்தில் கிருமிகள் இருக்கும் போது உடலில் உள்ள உறுப்புகளில் தொற்று நோய் ஏற்பட்டு உடல்நல பிரச்சனைகள் ஏற்படும். எனவே இரத்தத்தை நாம் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். மாதுளை, ஆரஞ்சு, இஞ்சி இந்த மூன்றும் இரத்தத்தை சுத்தம் செய்ய உதவுகிறது. கூடுதலாக நமது சமையலில் பயன்படுத்தக்கூடிய கருவேப்பிலை உடலில் உள்ள இரத்தத்தை சுத்தம் செய்ய பெரிதும் உதவும்.

செய்முறை

  1. மாதுளை பழத்தை உரித்து அப்படியே சாப்பிடலாம் அல்லது சாறு வடிவில் எடுத்து ஐஸ் கட்டி கலக்காமல் ஜூஸாக குடிக்கலாம்.
  2. ஆரஞ்சு பழத்தை ஜூஸ் போட்டு குடிக்கலாம்.
  3. இந்தியை சாராக எடுத்து அதில் சிறிதளவு தேன் கலந்து சுடு தண்ணீரில் கலந்து குடிக்கலாம்.


கூடுதல் குறிப்பு வயிற்றை சுத்தம் செய்ய டிப்ஸ்

சிவப்பு நாட்டு கொய்யா பழம் அதிகம் சாப்பிட்டால் வயிற்றில் உள்ள கழிவுகள் சுத்தமாகும். தினமும் இதை சாப்பிட முடியவில்லை என்றாலும் வாரத்திற்கு இரண்டு முறையாவது இதை சாப்பிட வேண்டும். தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும். கோடைகாலத்தில் நீரேற்றமாக நீங்கள் இருக்க வேண்டும். இந்த பதிவில் உள்ள குறிப்புகளை நீங்கள் பின்பற்றினால் உடலில் உள்ள ராஜ உறுப்புகளை நீங்கள் சுத்தம் செய்து கொள்ளலாம்.

மேலும் படிக்க:உடலுறவுக்குப் பிறகு சிறுநீர் கழிப்பது கர்ப்பத்தைத் தடுக்குமா?

இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள். மேலும், இதுபோன்ற உடல்நலம், ஆரோக்கியமான வாழ்வு சார்ந்த சுவாரஸ்யமான தகவல்களை தினமும் தெரிந்து கொள்ள எப்போதும் ஹெர்ஜிந்தகி உடன் இணைந்திருங்கள். ஹெர்ஜிந்தகியின் முகநூல் பக்கத்தை இந்த லிங்கின் மூலம் பின் தொடருங்கள் HerZindagi Tamil

image source: freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP