Obesity Affect Sexual Life: நீங்கள் பருமனாக இருந்தால் உடலுறவு வாழ்க்கையில் ஏற்படுத்தும் தாக்கத்தைப் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்

உடல் பருமன் பல நோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது. அதிக எடை காரணமாக பாலியல் ஆரோக்கியமும் மோசமடைகிறது. இதனால் தம்பத்திய வாழ்க்கையில் சிக்கலை ஏற்படுத்தும்

Weight gain affecting intimacy

அனைவரும் மன மற்றும் உடல் ஆரோக்கியம் பற்றி பேசுவது எவ்வளவு முக்கியமோ. அதே அளவிற்கு உடலுறவு ஆரோக்கியம் பற்றி பேசுவதும் அதில் கவனம் செலுத்துவதும் முக்கியம். நல்ல உடலுறவு வாழ்க்கை இல்லாமல் இருந்தால் தம்பதியினரின் வாழ்க்கை பாதிப்படைய செய்கிறது. பொதுவாக மக்கள் மனதில் உடல் நெருக்கம் தொடர்பான பல கேள்விகள் இருக்கும். ஆனால் அவர்களால் அதைப் பற்றி வெளிப்படையாக பேச முடியாத நிலை இருக்கிறது. உடலில் சில வைட்டமின்கள் இல்லாதது, எடை, வாழ்க்கை முறை மற்றும் பல விஷயங்கள் பாலியல் வாழ்க்கையை பாதிக்கின்றன. உடல் பருமன் பாலியல் ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது. அதிக எடை காரணமாக பாலியல் ஆரோக்கியமும் மோசமடைகிறது. இதுவும் உடலில் ஹார்மோன் சமநிலையின்மையை ஏற்படுத்தும். உடல் பருமன் எப்படி உங்கள் பாலின ஆரோக்கியத்தை கெடுக்கும் என்பது குறித்து மருத்துவரிடம் பேசினோம். இந்தக் கேள்விகளுக்கான பதில்களைத் தெரிந்துகொள்ள முயற்சித்தோம். இதுகுறித்து டாக்டர் அதிதி பேடி தகவல் அளித்துள்ளார். அவர் ஒரு மகளிர் மருத்துவ நிபுணர் மற்றும் மகப்பேறு மருத்துவர்.

உடல் பருமன் உடலுறவில் ஏற்படுத்தும் தாக்கம்

sexual life inside

  • உடல் பருமனால் பல நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. அதுமட்டுமின்றி உடலுறவு ஆரோக்கியத்தில் பல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
  • உடலில் கொழுப்பின் அளவு அதிகரிக்கத் தொடங்கும் போது, ஹார்மோன் சமநிலையின்மையை ஏற்படுத்துகிறது . உடலில் கொழுப்பு அதிகரிக்கும் போது டெஸ்டோஸ்டிரோன் என்ற பாலியல் ஹார்மோன் பாதிக்கப்பட்டுகிறது. இதனால் பாலியல் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது.
  • பாலியல் ஹார்மோன் டெஸ்டோஸ்டிரோன் குறைவதால் உடலுறவுக்கான ஆசை குறைகிறது.
sexual life new inside
  • உடல் பருமன் அதிகரிப்பதால் உடலில் கொலஸ்ட்ரால் மற்றும் இன்சுலின் எதிர்ப்பு சக்தி அதிகரித்து. இதன் காரணங்களால் பிறப்புறுப்புக்கு செல்லும் இரத்த ஓட்டம் குறையும். இது உச்சக்கட்டத்தில் சிரமத்தை ஏற்படுத்தும்.
  • உடல் பருமன் நெருக்கத்தின் போது இன்பத்தையும் பாதிக்கிறது. உடல் பருமன் உடலில் உள்ள ஹார்மோன்களின் சமநிலையை சீர்குலைக்கிறது. இதன் காரணமாக,பாலியல் உறவுகளில் சிக்கல்கள் ஏற்படலாம்.
  • அதிக எடை காரணமாக உடலுறவின் போது நீங்கள் விரைவாக சோர்வடைய செய்யும். இதனால் உடலுறவில் நீண்ட நேரம் இருக்க முடியாமல் போகிறது.
  • ஆரோக்கியமாக இருக்க எடையைக் கட்டுப்படுத்துவது அவசியம். உடல் பருமன் உங்கள் உடல் மற்றும் பாலியல் ஆரோக்கியத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே சரியான உணவு மற்றும் வாழ்க்கை முறை மூலம் உடல் எடையை குறைக்க முயற்சி செய்யுங்கள்.

உடல் பருமன் பாலியல் ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது. உடல் எடையை குறைக்க, உணவு மற்றும் வாழ்க்கை முறைகளில் மாற்றங்கள் அவசியம். இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

Image Credit: Freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP