
Vegan எனப்படும் சைவ உணவு முறை பல்வேறு காரணங்களுக்காக உலகம் முழுவதும் பிரபலமாகிறது. சைவ உணவு முறையினால் உடல் ஆரோக்கியம் மேம்படுகிறது. சைவ உணவு முறையைப் பின்பற்ற ஆரம்பிக்கும் போதே இறைச்சி, பால், முட்டை சாப்பிடுவதை நிறுத்திவிட வேண்டும்.


சைவ உணவு முறையில் நாம் மிகவும் குறைந்த கொழுப்பு கொண்ட பழங்கள், காய்கறிகள், தானியங்கள், விதைகள் மற்றும் பருப்பு வகைகளை சாப்பிட வேண்டி இருக்கும் எனக் கூறப்படுகிறது. சைவ உணவு முறைக்கு மாறுவதன் வழியாக உடலில் இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்கும், கொழுப்பு குறையும். இதனால் இதய நோய் ஆபத்தும் இருக்காது.

சில ஆராய்ச்சிகளின்படி வைச உணவு முறைக்கு மாறுவதால் மார்பக மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய்கள் ஏற்படும் வாய்ப்பு குறைவே.

சைவ உணவு முறை எடை இழப்பிற்கும் எடை மேலாண்மைக்கும் உதவிகரமாக இருக்கும். சைவ உணவு முறையில் நாம் தாவர அடிப்படையிலான நார்ச்சத்து உணவுகளை உட்கொள்வதால் செரிமானம் போன்ற பிரச்சினைகளும் ஏற்படாது.
மேலும் படிங்க Vulvodynia Issues : வல்வோடினியா பாதிப்புகள்… மகளிர் கவனத்திற்கு !

சைவ உணவு முறை சர்க்கரை நோயாளிகளுக்குப் பெரும் உதவிகரமாக இருக்கும் என ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. ஏனெனில் தாவரங்களில் குறைவாக உள்ள கிளைசெமிக் இன்டெக்ஸ் இரத்தத்தில் சர்க்கரை அளவை சீராக்கஉதவுகிறது.
பழங்கள் மற்றும் காய்கறிகளில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் நிறைந்துள்ளன, இவை அனைத்தும் இரத்த அழுத்தத்தை சிறப்பாகக் கட்டுப்படுத்த உதவும்.
சில ஆராய்ச்சிகளின் படி தாவர அடிப்படையிலான உணவு உண்பது சீறுநீரக நோயின் ஆபத்தைக் குறைக்கும். தாவர அடிப்படையிலான புரதங்களை உட்கொள்வதன் மூலம் சிறுநீரக செயல்பாட்டைப் பாதுகாக்கலாம்.
மேலும் படிங்க Stop Weight Gain : உடல் எடையை கட்டுப்படுத்த எளிய வழிகள்!
பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ள சைவ உணவுகள், பருப்பு வகைகள் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தும். அதே நேரம் மலச்சிக்கலும் ஏற்படாது.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]