Mochai Payaru Benefits : நம்ம ஊரு மொச்சை பயறு, ஆரோக்கியமாக வாழ இது போதுமே!

மொச்சை சீசன் களைகட்ட தொடங்கி விட்டது, அடுத்த சில மாதங்களுக்கு இந்த அற்புதமான காய்கறியை கொண்டு பலவித உணவுகளை சமைத்து சாப்பிட்டு, அதன் நன்மைகளை பெறுவோம்…

mochai payaru health benefit for digestion

நாட்டுக் காய்கறிகள் என்றாலே ரொம்ப ஸ்பெஷல். அதிலும் இந்த பருவ காலத்தில் கிடைக்கக்கூடிய மொச்சை பயறை தவறாமல் எல்லோரும் சாப்பிட்டு பயன்பெறுங்கள். காய்ந்த மொச்சையை விட ஃபிரஷாக கிடைக்கக்கூடிய இந்த மொச்சை தமிழர்களின் ஃபேவரைட். அதிலும் மொச்சை, கத்திரிக்காய், வாழைக்காய் போன்ற நாட்டு காய்கறிகளை சேர்த்து கருவாட்டுக் குழம்பு வைத்து சாப்பிட்டால், எச்சில் ஊற ஒரு தட்டு சோறையும் நொடியில் காலி செய்து விடலாம்.

அடுத்த ஒரு சில மாதங்களுக்கு நல்ல ஃபிரஷான மொச்சை பயறை மார்க்கெட்டில் காணலாம். இந்த அற்புதமான நாட்டுக் காய்கறியின் அற்புத நன்மையை இன்றைய பதிவில் படித்தறியலாம். மொச்சை பயறில் பொட்டாசியம், மெக்னீசியம், வைட்டமின் B6 போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. மொச்சை பயறை சாப்பிடுவதன் மூலம் பல உடல் நல பிரச்சனைகளை தடுக்கலாம். நாட்டு காய்கறிகளை சாப்பிடுவோம் திடமாக வாழ்வோம். மொச்சை பயறின் ஆரோக்கிய நன்மைகள் பின்வருமாறு…

ஸ்லிம்மாக மாற மொச்சை பயறு

mochai payaru for weight loss

மொச்சை பயறு உடல் எடையை குறைப்பதற்கு ஏற்றது. இதை தொடர்ந்து உணவில் சேர்த்து வர உடல் பருமனை குறைக்கலாம். இதில் நிறைந்துள்ள நார்ச்சத்து உடல் எடை அதிகரிப்பதை தடுக்கவும், உடல் பருமனையும் குறைக்க உதவுகிறது. மொச்சை பயறு உங்களை நீண்ட நேரத்திற்கு நிறைவாக வைத்திருக்கும்.

செரிமானத்திற்கு நல்லது

நார்ச்சத்துக்கள் நிறைந்த மொச்சை பயறு செரிமானத்திற்கு மட்டுமின்றி சரும ஆரோக்கியத்திற்கும் அதிக நன்மைகளை தருகிறது. மொச்சை பயறை வாரத்திற்கு 1-2 முறை உணவில் சேர்த்து வர வயிறு சுத்தமாகும். இதன் மூலம் மலச்சிக்கல் பிரச்சனையிலிருந்தும் விடுபடலாம்.

இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவும்

மொச்சை பயிறில் நிறைந்துள்ள பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் நார்ச்சத்துக்கள் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகின்றன. இதில் நிறைந்துள்ள ஆரோக்கியமான கொழுப்புகளும், நார்ச்சத்துக்களும் இரத்த அழுத்தம் மற்றும் உடல் எடையை பராமரிக்க உதவுகின்றன.

புரதம் நிறைந்தது

mochai kottai

மொச்சை புரதச் சத்துக்களின் சிறந்த ஆதாரமாகும். புரதம் நிறைந்த உணவுகள் உடலுக்கு தேவையான ஆற்றலை கொடுப்பதோடு மட்டுமின்றி, கொலஸ்ட்ரால் அளவுகள் அதிகரிப்பதையும் தடுக்கின்றன. மொச்சை பயறை உணவில் சேர்த்து வர சர்க்கரை நோயையையும் தவிர்க்கலாம்.

இந்த பருவ காலத்தில் கிடைக்கக்கூடிய மொச்சை பயறை சரியான அளவுகளில், முறையாக சமைத்து சாப்பிட்டு வர ஆரோக்கியம் செழித்திடும்!

இந்த பதிவும் உதவலாம்: இது தெரிந்தால், இனி தினமும் ஊற வைத்த பிஸ்தா சாப்பிடுவீங்க!

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

image source:google

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP