பாதாம் பால் குடிப்பதால் கிடைக்கும் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள்

பாதாம் பால் ஆரோக்கியமான தேர்வுகளில் ஒன்றாகும். ஏனெனில் இது பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது, அவற்றை பற்றி படித்தறியலாம்…

almond milk benefits in tamil

பாதாம் பருப்பின் நன்மையை முழுமையாக அனுபவிக்க சிறந்த வழி பாதாம் பால் குடிப்பதே. இதில் பூஜ்ஜிய கொலஸ்ட்ரால் மட்டுமே உள்ளது மற்றும் உடலுக்கு ஆரோக்கியமானதாக இருக்கும். பாதாம் பாலை நீங்கள் வீட்டிலேயே தயார் செய்யலாம், உண்மையை சொல்ல வேண்டும் என்றால், அதற்கு அதிக நேரம் எடுக்காது. பாதாம் பாலை வீட்டிலேயே எப்படி தயாரிக்கலாம் மற்றும் அதன் நன்மைகளை பற்றி பார்க்கலாம்

வீட்டில் பாதாம் பால் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்

  • 1 கப் பாதாம்
  • 8 கப் தண்ணீர்

செயல்முறை விளக்கம்

4 கப் தண்ணீரை கொதிக்க வைத்த தண்ணீரில் பாதாம் சேர்க்கவும். பாதாம் மென்மையாகும் வரை 30-40 நிமிடங்கள் அதை அப்படியே ஊற விடவும். அவை ஊறிய பிறகு, தண்ணீரை வடிகட்டவும். அனைத்து பாதாம் பருப்புகளையும் தோலுரித்து, பின்னர் 4 கப் தண்ணீருடன் மிக்சியில் சேர்க்கவும். அரைத்த விழுதை வடிகட்டவும். ஒரு மூடி போட்ட டப்பாவில் சேகரித்து, அதை ஃப்ரிஜ்ஜில் வைக்கவும். பாதாம் பால் 3-4 நாட்கள் வரை நன்றாக இருக்கும். பாதாம் பால் எடை குறைப்பை ஊக்குவிக்கிறது, எலும்புகளை வலிமையாக்குகிறது மற்றும் பல நன்மைகளை செய்கிறது. பாதாம் பால் குடிப்பதால் ஏற்படும் நன்மைகளை தெரிந்துகொள்ள மேலும் படிக்கவும்.

almond milk for weight loss

இதய ஆரோக்கியத்திற்கு நல்லது

பாதாம் பாலில் பூஜ்யம் கொலஸ்ட்ரால் உள்ளது மற்றும் இது உங்கள் இதய ஆரோக்கியத்தை பலப்படுத்த உதவுகிறது. பாதாம் பால் குடிப்பது பல்வேறு இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது. கொலஸ்ட்ரால் இருதய நோய்களுக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாகும், ஆனால் பாதாம் பால் உங்கள் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. அதே வேளையில் அனைத்து இதய நோய் களில் இருந்தும் உங்களைக் காப்பாற்றுகிறது.

கண் பார்வையை மேம்படுத்துகிறது

இந்த நாட்களில் நாம் அனைவரும் நம்முடைய தொலைபேசிகள் மற்றும் மடிக்கணினிகளுடன் எப்போதும் இணந்து கொண்டே இருக்கிறோம். இது நம் கண்பார்வையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. பார்வையை மேம்படுத்துவதற்கு மிகவும் உதவியாக இருக்கும் வைட்டமின் A அதிகமாக உட்கொள்ள வேண்டும். பாதாம் பாலில் வைட்டமின் A ஏராளமாக உள்ளது. பாதாம் பாலை தொடர்ந்து குடிப்பதால் கண்கள் சரியாக இயங்கி உங்கள் கண்பார்வை மேம்படும்.

எலும்புகளை வலுவாக்கும்

பாதாமில் கால்சியம் அதிகம் உள்ளது மற்றும் கால்சியம் நமது எலும்புகளை வலிமையாக்குகிறது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. பாதாம் பால் குடிப்பது உடலுக்கு போதுமான அளவு கால்சியத்தை வழங்குகிறது மற்றும் இது உங்கள் எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. எலும்பு தொடர்பான நோய்களின் அபாயத்தையும் குறைக்கிறது. உங்கள் வயதான காலத்திலும் உங்கள் எலும்புகளை நன்றாக செயல்பட வைக்கிறது.

இதுவும் உதவலாம் :பெண்களின் எலும்பு மற்றும் பற்கள் வலுபெற சாப்பிட வேண்டிய உணவுகள்

almond milk for eyes

எடை குறைப்பை ஏற்படுத்துகிறது

பாதாம் பால் எடை குறைப்புக்கு ஒரு சிறந்த தீர்வை தரும் என்பது பலருக்கும் தெரியாது. மற்ற பால் விருப்ப தேர்வுகளுடன் ஒப்பிடும்போது, பாதாம் பாலில் குறைந்த கலோரிகள் உள்ளன. இது கொழுப்பு நீக்கப்பட்ட பாலுக்கு சிறந்த மாற்றாக அமைகிறது. இது உடல் எடையை குறைக்க உதவுகிறது மற்றும் உங்கள் தற்போதைய எடையை பராமரிக்க வைக்கிறது.

இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் லைக் செய்து, பகிருங்கள். மேலும் இது போன்ற தகவல்களுக்கு, ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தோடு தொடர்ந்து இணைந்திருங்கள்.

Image Credit : Freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP