கேராளாவில் பொன்னுக்கு வீங்கி வைரஸ் தொற்று ஆயிரக்கணக்கானோரை பாதித்துள்ள நிலையில் தமிழகத்தின் எல்லையோர மாவட்டங்களில் அதன் பரவல் இருக்ககூடும் என்பதால் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும். பொன்னுக்கு வீங்கி பாராமிக்ஸோவைரஸால் ஏற்படும் பாதிப்பாகும். இது நம் உமிழ்நீர் சுரப்பிகளை கடுமையாக பாதிக்கிறது. பொன்னுக்கு வீங்கி வைரஸ் தொற்றால் பாதிக்கப்படும் போது தாடைக்கு அருகில் வீக்கம் ஏற்படும். சில சந்தர்ப்பங்களில் மூளைக்காய்ச்சல், காது கேளாமை போன்ற சிக்கல்களுக்கு வழிவகுக்கும்.
காய்ச்சல், தலைவலி, தசைவலி, சோர்வு மற்றும் பசியின்மை போன்ற அறிகுறிகள் பொன்னுக்கு வீங்கி பாதிப்பு இருந்தால் ஏற்படும். தாடையில் வீக்கத்தால் உணவு மென்னு விழுங்குவதில் சிரமம் இருக்கும். வாயைத் திறக்கும் போது வலி அல்லது புளிப்பான உணவுகளை உண்ணும் போது அசெளகரியத்தை அனுபவிக்கலாம். இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருந்தால் மருத்துவரின் உதவியை நாடுவது அவசியம்.
பொன்னுக்கு வீங்கி தொற்றால் பாதிக்கப்பட்ட நபரின் இருமல், தும்மல் மற்றும் சுவாசத் துளிகளால் இது அருகிலுள்ள நபர்களுக்கு பரவுகிறது. அவர்கள் பயன்படுத்திய பாத்திரத்தில் உணவு உட்கொள்வது அல்லது அதே டம்ளரில் தண்ணீர் குடிப்பது மூலமாகவும் இந்த வைரஸ் பரவலாம். தடுப்பூசி செலுத்திக்கொண்டு இருமல் மற்றும் தும்மலின் போது கைக்குட்டையால் மூடுவது, கிருமி நாசினியை கொண்டு கைகளை கழுவுவது மற்றும் சுகாதார நடைமுறைகளை முறையாக பின்பற்றுவது பொன்னுக்கு வீங்கி தொற்று பரவலை தடுக்கும்.
மருத்துவரின் ஆலோசனைப்படி குழந்தை பருவத்திலேயே இரண்டு அளவுகளில் தடுப்பூசி செலுத்தினால் நீண்ட கால நோய் எதிர்ப்பு சக்தியை பெறலாம். அடிக்கடி சோப்பு போட்டு கைகளை கழுவுவது இந்த நோய் பரவும் அபாயத்தை குறைக்கும்.
மேலும் படிங்க இரத்த சோகைக்கு காரணம் என்ன ? பாதிப்பை தடுக்க உட்கொள்ள வேண்டிய உணவுகள்!
பொன்னுக்கு வீங்கி உட்பட பல உடல்நல பிரச்சினைகளுக்கு கற்றாழை சிறந்த தீர்வாகும். கற்றாழை இலைகளில் இருந்து ஜெல்லைப் பிரித்தெடுத்து அதை உங்கள் முகத்தின் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மெதுவாக தடவவும். இது வீக்கம் மற்றும் வலியைப் போக்க உதவுகிறது.
இஞ்சியை பேஸ்ட் போல அரைத்து அதை உங்கள் முகம் அல்லது காதுகளின் வீங்கிய பகுதிகளில் தடவவும். ஐஸ் கட்டிகளை அந்தப் பகுதிகளில் வைத்தால் வலியை தணிக்க முடியும். காய்ச்சல் குணமாகும் வரை போதுமான ஓய்வு எடுக்கவும். அதிகம் பேசுவதைத் தவிர்த்தால் உங்கள் தாடைகள் ஓய்வெடுத்து வலி மற்றும் வீக்கம் கணிசமாக குறையும்.
மேலும் படிங்க சின்னம்மை பாதிப்பில் இருந்து தற்காப்பது எப்படி ? ஆரோக்கியமான உணவுமுறை என்ன ?
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]