herzindagi
image

Thyroid Nutrients Food: தைராய்டு பிரச்சனையை கட்டுக்குள் வைத்திருக்கு உதவும் முக்கிய சத்துக்கள் நிறைந்த உணவுகள்

தைராய்டு சுரப்பியை நிர்வகிப்பதில் ஆரோக்கியமான உணவு முக்கிய பங்கு வகிக்கிறது. தைராய்டு ஹார்மோன் உடலின் பல செயல்பாடுகளுக்கு அவசியம். தைராய்டை கட்டுப்படுத்த உதவும் உணவுகள்
Editorial
Updated:- 2024-10-04, 13:11 IST


நாம் அனைவரும் ஆரோக்கியமாக வாழ்க்கையை வாழ விரும்புகிறோம். ஆரோக்கியமாக இருக்க உடலில் பல வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஹார்மோன்கள் சரியான அளவில் இருப்பது முக்கியம். உடலில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் இல்லாமலோ அல்லது ஹார்மோன் ஏற்ற இறக்கங்களோ இருந்தால் நமது ஆரோக்கியத்தை பாதிக்கிறது. தைராய்டு சுரப்பியில் இருந்து தைராய்டு ஹார்மோன் குறைவாகவோ அல்லது அதிகமாகவோ வெளியிடப்படும் போது, அதன் அறிகுறிகள் தெளிவாகத் தெரியும். இன்றைய காலக்கட்டத்தில் தவறான உணவுப் பழக்கவழக்கங்களாலும், முறையற்ற வாழ்க்கை முறையாலும் தைராய்டு பிரச்சனை அதிகரித்து வருகிறது. குறிப்பாக பெண்களுக்கு இந்தப் பிரச்சனை அதிகமாக இருக்கிறது. தைராய்டு சுரப்பியைக் கட்டுப்படுத்த உணவில் பல சத்துக்களை சேர்த்துக் கொள்வது அவசியம். அப்படிப்பட்ட சில சத்துக்களை பற்றி பார்க்கலாம். இவற்றை உணவில் சேர்த்துக் கொள்வது தைராய்டைக் கட்டுப்படுத்த உதவும்.

 

தைராய்டை நிர்வகிக்க சேர்த்துக்கொள்ள வேண்டிய சத்துக்கள்

  • தைராய்டு ஹார்மோன்களை நிர்வகிக்க மிக முக்கியமான சத்துக்களில் ஒன்று இரும்புச்சத்து. உடலில் இரும்புச்சத்து குறைவாக இருந்தால் தைராய்டு சுரப்பி செயல்படும் திறன் குறையும். இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

 

iron food

  • கால்சியம் தைராய்டு சுரப்பிக்கு அவசியமான ஒரு கனிமமாகும். இதன் குறைவினால் தைராய்டு பிரச்சனையும் ஏற்படலாம். அதே நேரத்தில் தைராய்டு பிரச்சனைகள் இருக்கும் நபர்கள் அவற்றை நிர்வகிக்க, சரியான கால்சியம் அளவைக் கொண்டிருப்பதும் முக்கியம்.
  • வைட்டமின் சி உடலுக்கு மிக முக்கியமான சத்து. இது நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது. வைட்டமின் சி போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் தைராய்டு சுரப்பி சரியாக செயல்பட உதவுகின்றன.

vitamin c

  • மக்னீசியம் தைராய்டு சுரப்பியை சரியான அளவு தைராய்டு ஹார்மோனை உற்பத்தி செய்ய உதவுகிறது. இது மனநிலையை மேம்படுத்தவும் மன அழுத்தத்தைக் குறைக்கவும் உதவுகிறது.
  • செலினியம் T4 ஐ செயல்படுத்த உதவுகிறது. தைராய்டு அளவைக் கட்டுப்படுத்த இது மிகவும் முக்கியமானது.
  • துத்தநாகக் குறைபாட்டால் தைராய்டு சுரப்பி சரியாகச் செயல்படாமல் போகும். எனவேஉணவில் துத்தநாகம் நிறைந்த உணவுகளைச் சேர்க்கவும்.

உடலில் தைராய்டு ஹார்மோன்களின் சமநிலையை பராமரிக்க இந்த ஊட்டச்சத்துக்கள் அவசியம். இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

 

Image Credit: Freepik

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]