Healthy Digestive System: சீரான செரிமானத்தை காக்க இந்த 5 சிறந்த வழிகளை பாலோ பண்ணுங்கள்

நமது செரிமான பகுதி ஆரோக்கியமாக இருந்தலே உடல் சீரக இருக்கும். அத்தகைய செரிமானத்தை பராமரிக்க ஆயுர்வேதத்தின் படி என்ன சாப்பிட வேண்டும் என்று தெரிந்துகொள்ளலாம்

digestive system card image ()

செரிமான சக்தி சிறப்பாக இருந்தால் அனைத்து நோய்களையும் எளிதில் எதிர்த்துப் போராடலாம். ஆனால் நீங்கள் ஆரோக்கியமாக இருக்க ஒரு நல்ல வழக்கத்தை பின்பற்றுகிறீர்களா? நாம் எதை சாப்பிட்டாலும் அது நமது செரிமான அமைப்பில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே ஆயுர்வேத நிபுணர் நீதி ஷேத் சில குறிப்புகளை கூறியுள்ளார். செரிமான அமைப்பு சரியாக இல்லை என்றால் இந்த எளிய குறிப்புகள் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று நீதி ஷெத் கூறியுள்ளார். ஆயுர்வேதத்தின்படி உணவில் மாற்றங்களைச் செய்தால் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.

பசிக்கும் போது மட்டும் சாப்பிட வேண்டும்

indian eat inside

பல சமயங்களில் நாம் நமது வழக்கத்தை வைத்து 3 வேலை உணவு உண்கிறோம். ஆனால் நீங்கள் பசியுடன் இருக்கும்போது மட்டுமே உணவை உண்ண வேண்டும். பசியில்லாமல் உணவு உண்ணும் போது வயிறு நிரம்பி உணவு செரிக்காமல் வயிறு வீங்குகிறது. தூங்குவதற்கு 3 மணி நேரத்திற்கு முன் உணவை உண்ண முயற்சி செய்யுங்கள். சாப்பிடுவதற்கு முன் அதிக பானங்களை குடிக்க வேண்டாம். அதனால் உங்கள் செரிமான அமைப்பு சீரக இருக்கும்.

எளிய மசாலா நுகர்வு

மிளகாய் அல்லது மசாலாப் பொருட்களை அதிகமாக சாப்பிடுவதால் நம் வயிற்றில் எரியும் உணர்வு ஏற்படுகிறது இதனால் செரிமான சக்தியையும் பாதிக்கிறது. நீங்கள் எளிய மசாலாப் பொருட்களைக் கடைப்பிடிக்க வேண்டும். 2 டீஸ்பூன் கொத்தமல்லி, 2 டீஸ்பூன் சீரகம், 2 டீஸ்பூன் நைஜெல்லா விதைகள் மற்றும் 1 டீஸ்பூன் மஞ்சள் ஆகியவற்றை கலந்து தூள் செய்து வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் சுவைக்கேற்ப காய்கறிகளுடன் சேர்த்து சூப் போல் செய்து குடிக்கலாம். இந்த போடியை காற்றுப் புகாத டப்பாவில் சேமித்து வைத்து பொரியல் காய்கறிகளுடன் கலந்து சாப்பிட்டு செரிமானத்தை மேம்படுத்தலாம்.

பச்ச தண்ணீருக்கு பதிலாக சூடான நீர்

hot water inside

குளிர்ந்த நீர் அல்லது குளிர் பானங்கள் சுவையாக இருக்கலாம் ஆனால் ஆயுர்வேதத்தின் படி அவை உங்கள் செரிமானத்தை கெடுக்கும். எப்போதும் குளிர்ந்த நீருக்குப் பதிலாக வெந்நீரையும் , குளிர் பானங்களுக்குப் பதிலாக மூலிகை தேநீரையும் அருந்துமாறு நீதி ஷெத் அறிவுறுத்தினார் . மூலிகை டீயில், இஞ்சி டீ அல்லது கிரீன் டீ குடிக்கலாம். நீங்கள் செரிமான அமைப்பை மேம்படுத்த விரும்பினால் குளிர் பானங்களை உட்கொள்வதைக் குறைக்க வேண்டும். மேலும் அடிக்கடி தேநீர் குடிப்பதால் வயிற்றில் வாயு உருவாகிறது என்பதால் தவிர்க்கவும்.

உடற்பயிற்சி செய்ய வேண்டும்

ஆரோக்கியமாக இருக்க உடற்பயிற்சி செய்வது எவ்வளவு முக்கியம் என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால் நல்ல செரிமான அமைப்புக்கு உணவு சாப்பிட்ட பிறகு சிறிது நேரம் உடற்பயிற்சி செய்வதும், நடப்பதும் அவசியம். ஜிம்மிற்குச் செல்வது உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் கார்டியோ செய்யலாம் இதில் சைக்கிள் ஓட்டுதல் மற்றும் நடைப்பயிற்சி ஆகியவை அடங்கும். இரவு உறங்குவதற்கு 3 மணி நேரத்திற்கு முன் உணவுக்கு முன் அதிக பானங்களை உட்கொள்ள வேண்டாம்.

மேலும் படிக்க: இதய நோய் வராமல் தடுப்பது முதல் எண்ணற்ற சத்துக்களை கொண்ட எண்ணெய் மீன்கள்

நச்சு நீக்கம்

சிறந்த செரிமான அமைப்புக்கு ஒருவர் டிடாக்ஸ் சுத்திகரிப்பு செய்ய வேண்டும் என்று நீதி ஷெத் கூறினார். இதற்கு நீராவியில் வேகவைத்த பழச்சாறு மற்றும் ஸ்மூத்திகள் குடிக்கலாம். எலுமிச்சை சாறு ஒரு சிறந்த நச்சு பானமாக கருதப்படுகிறது. எனவே உடல் நச்சுத்தன்மைக்கு கனமான உணவுகளை உட்கொள்ள வேண்டாம் மற்றும் ஆரோக்கியமான பானங்களை குடிக்க வேண்டாம்.

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால் பகிரவும். மேலும் இதுபோன்ற கட்டுரைகளைப் படிக்க Harzindagi உடன் இணைந்திருக்கவும்.

Image Credit: Freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP