herzindagi
tooth decay symptoms

Tooth decay remedies : பல் சிதைவை தடுப்பதற்கான வீட்டு வைத்தியம்

பல் சிதைவு என்பது வாயில் உள்ள அமிலங்கள் உங்கள் பற்களின் வெளிப்புற அடுக்குகளை கரைக்கும் போது ஏற்படும் பல் பிரச்சனையாகும். இது பல்லில் துளை ஏற்படுவதற்கு வழிவகுக்கும்.
Editorial
Updated:- 2024-01-21, 22:31 IST

வாயில் ஏராளமான பாக்டீரியாக்கள் உள்ளன. சில பாக்டீரியாக்கள் நமக்கு பயனுள்ளதாக இருக்கும், மற்றவை தீங்கு விளைவிக்கும். தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் பற்கள் சிதைவதற்கு காரணமாகின்றன.

பல் சொத்தைக்கு வீட்டு வைத்தியம்

பற்கள் சிதைவதைத் தவிர்ப்பதற்கான சிறந்த வழியென்றால் சரியான வாய்வழி சுகாதாரத்தை பராமரிப்பதாகும். இங்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள அனைத்து தீர்வுகளும் வாய் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவும்.

cavity

நெல்லிக்காய்

நெல்லிக்காய் என்பது ஆயுர்வேதத்தில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் ஒரு மூலிகையாகும். இது வாய் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. நெல்லிக்காய் சாற்றை வாய் கழுவ பயன்படுத்தலாம்.  பற்களுக்கு நீண்ட கால பலன்களைப் பெற நெல்லிக்காயை தினமும் சிறிதளவு உட்கொள்ளலாம். நெல்லிக்காய் பற்களைப் ஆரோக்கியமாகப் பராமரிக்க உதவுவதால் பல் சிதைவைத் தடுக்க பயனுள்ளதாக இருக்கும்.

கிரீன் டீ

கிரீன் டீ பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இதனால் வாயில் உள்ள பாக்டீரியாக்களின் எண்ணிக்கையைக் குறைக்கப்படும். கிரீன் டீயில் அதிகளவு புளூரைடு உள்ளது. புளூரைடு என்பது தாதுக்களை மீண்டும் பெற உதவுவதன் மூலம் பற்களை சிதைவிலிருந்து பாதுகாக்கும் ஒரு கனிமமாகும்.

மேலும் படிங்க Boosting Bone Health : எலும்பு ஆரோக்கியத்தை அதிகரிக்கும் பயனுள்ள பயிற்சிகள்

கிராம்பு

டி-கால்சிஃபிகேஷன் எனப்படும் பற்களிலிருந்து தாதுக்கள் இழப்பைத் தடுக்க பல் சிதைவின் மீது கிராம்பு விளைவைப் புரிந்து கொள்ள ஒரு சோதனை நடத்தப்பட்டது. இந்தச் சோதனையில் கிராம்பு எண்ணெய் தடவப்பட்ட பற்கள் அமிலங்களுக்கு உட்படுத்தப்படும்போது அது பற்களை அழிக்கக்கூடிய தாது இழப்பைக் குறைவாகக் காட்டியது கண்டறியப்பட்டது.

கிராம்பு பல வகையான பற்பசைகளின் பொதுவான அங்கமாகும். உங்கள் பற்பசையில் சிறிது கிராம்பு எண்ணெயைக் கலந்து தினமும் இரண்டு முறை இந்த பேஸ்ட்டைப் பயன்படுத்தி பல் துலக்கலாம்.

பல் சிதைவை தடுக்க சாப்பிடும் உணவில் வைட்டமின்கள் சேர்க்கவும். எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு நுண்ணூட்டச்சத்துக்கள் அவசியமாகும். சில வைட்டமின்கள் உமிழ்நீரை உற்பத்தி செய்ய உதவுகின்றன. இது உங்கள் பற்களில் பாக்டீரியா தங்குவதை தடுக்க உதவுகிறது மற்றும் சில வைட்டமின்கள் பற்களை மிகவும் வலிமையாக்குகின்றன. 

வாழைப்பழம் மற்றும் பட்டாணி ஆகியவை உமிழ்நீரை ஊக்குவிக்க உதவும் உணவுகளாகும். பல் சிதைவுக்கு உட்கொள்ள வேண்டிய வைட்டமின்களில் வைட்டமின் பி, டி, மெக்னீசியம் மற்றும் இரும்பு ஆகியவை அடங்கும்.

மேலும் படிங்க Dark Circles under eyes : கண்களுக்கு கீழுள்ள கருவளையங்களை தீர்க்கும் உதவிக்குறிப்புகள்

  • பல் சிதைவை தடுக்க தினமும் இரண்டு முறையாவது பல் துலக்குங்கள்.
  • தினமும் ஒரு முறையாவது ஃப்ளோஸ் செய்யுங்கள். இது உங்கள் ஈறுகளுக்கு அடியில் மீதமுள்ள உணவை அகற்ற உதவுகிறது மற்றும் பாக்டீரியா உருவாவதை தடுக்கிறது.
  • மவுத்வாஷ் பயன்படுத்தவும். இது பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. மவுத்வாஷ் பயன்படுத்தினால் வாயில் மீதமுள்ள பாக்டீரியாக்களை அகற்றப்படும்.
  • அதிக கார்பனேற்றம் கொண்ட ஜூஸ் மற்றும் பானங்களை குடிப்பதைத் தவிர்க்கவும். ஏனெனில் கார்பனேற்றம் அதிகப்படியான பிளேக் உருவாக்கத்தை ஏற்படுத்துகின்றன

இது போன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]