herzindagi
red radish for bones

Red radish: புற்று நோய் வராமல் தவிர்க்க சிவப்பு முள்ளங்கி சாப்பிடுங்க..!

மாரடைப்பை தடுக்கவும், இதயம் தொடர்பான நோய்களுக்கு மருந்தாகவும் உள்ள சிவப்பு முள்ளங்கியின் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை இந்த கட்டுரையில் பார்க்கலாம். 
Editorial
Updated:- 2024-04-18, 12:46 IST

நார்ச்சத்து அதிகம் கொண்டுள்ள சிவப்பு முள்ளங்கி குளிர்கால காய்கறிகளில் ஒன்றாகும். இந்த வேர் காய்கறியான சிவப்பு முள்ளங்கி குளிர்காலத்தில் நாடு முழுவதும் பரவலாக உணவு வடிவத்தில் உட்கொள்ளப்படுகிறது. இந்த சிவப்பு முள்ளங்கியை வைத்து பராத்தா, சாலட் போன்ற பல உணவு வகைகளை சமைத்து சாப்பிடலாம். இன்னும் சிலர் முள்ளங்கியை பச்சையாக சாப்பிடுவது உண்டு. இந்த காய்கறியில் ஒரு தனித்துவமான சுவையும் நம் உடலுக்கு தேவையான பல ஆரோக்கிய நன்மைகளும் அடங்கியுள்ளது. நம் உடல் ஆரோக்கியத்திற்கு மிக அவசியமான பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து இந்த சிவப்பு முள்ளங்கியில் நிறைந்துள்ளது.

உடலுக்கு ஆற்றல் தரும்: 

இந்த சிவப்பு முள்ளங்கியில் வைட்டமின் சி அதிக அளவு இருப்பதால் இது நம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். அதேபோல சளி மற்றும் இருமல் போன்ற பொதுவான உடல்நல பிரச்சனைகளையும் இந்த சிவப்பு முள்ளங்கி தடுக்க உதவுகிறது. சிவப்பு முள்ளங்கியில் உள்ள பீட்டா - கரோட்டின் நம் உடலுக்கு தேவையான ஆரோக்கியமான மெம்பெரென்களை உற்பத்தி செய்ய உதவும்.

செரிமான பிரச்சனைகள் நீங்கும்: 

நார்ச்சத்து அதிகம் கொண்டுள்ள இந்த சிவப்பு முள்ளங்கி உங்கள் உடலில் உள்ள செரிமான அமைப்புக்கு சிறந்தது என்று கூறப்படுகிறது. சிவப்பு முள்ளங்கியை நம் உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் குடல் பிரச்சினைகள், உடல் பருமன், வாயு தொல்லை, குமட்டல் போன்ற பிரச்சினைகளும் நாளடைவில் சரியாகும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

ரத்த அழுத்தம் குறையும்: 

சிவப்பு முள்ளங்கியில் பொட்டாசியம் அதிக அளவு நிறைந்து காணப்படுகிறது. இதை நம் உணவில் சேர்த்து உட்கொள்வதன் மூலம் உடலில் உள்ள ரத்த அழுத்தத்தை குறைத்து ரத்த ஓட்டத்தை கட்டுக்குள் வைக்க உதவும். அதேபோல உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இந்த சிவப்பு முள்ளங்கி சிறந்த மருந்தாக விளங்குகிறது.

red radish for heart

புற்றுநோய் வராமல் தடுக்கும்: 

ஆக்சிஜன் எதிர்ப்பொருட்கள் மற்றும் பைட்டோ ஊட்டச்சத்துக்கள் சிவப்பு முள்ளங்கியில் அதிகம்  நிறைந்துள்ளது. இது புற்றுநோய் வராமல் தவிர்க்கும் குணத்தை கொண்டுள்ளது. மார்பக புற்றுநோய், காலன் புற்றுநோய் மற்றும் ரெக்டல் டியூமர்கள் போன்ற நோய்கள் வராமல் தடுக்க உங்கள் உணவில் சிவப்பு முள்ளங்கியை சேர்த்துக் கொள்வது அவசியம்.

நீரிழிவு நோயாளிகளுக்கு உதவும் முள்ளங்கி: 

நீரிழிவு நோயாளிகளுக்கு சிவப்பு முள்ளங்கி நிறைய நன்மைகளை செய்கிறது. இந்த சிவப்பு முள்ளங்கியை உட்கொள்வதால் உடலில் இன்சுலின் உற்பத்தி அதிகரிக்கும். நீரிழிவு நோயை கட்டுப்படுத்த நீரிழிவு நோயாளிகள் சிவப்பு முள்ளங்கியுடன் அதன் இலைகளையும் உணவாக உட்கொள்ள மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். மேலும் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் முள்ளங்கி இலைகளை உட்கொள்ளக்கூடாது என்றும் கூறப்படுகிறது.

விஷத்தை முறிக்கும் முள்ளங்கி ஜூஸ்: 

சில சமயங்களில் விஷ பூச்சிகள் கடித்துவிட்டால் நமது தோளில் வீக்கம், அரிப்பு மற்றும் தோல் சிவந்து போதல் போன்ற அலர்ஜிகள் ஏற்படும். இந்த சமயங்களில் சிவப்பு முள்ளங்கியை ஜூஸ் போட்டு குடித்தால் உங்கள் உடலில் பூச்சிக்கடியினால் ஏற்பட்ட விஷம் முறியும். அதேபோல பூச்சி கடித்த இடத்தில் இந்த முள்ளங்கி ஜூஸை சில துளிகள் தேய்த்து வந்தால் எளிதில் குணமாகும்.

இதய ஆரோக்கியத்திற்கு முள்ளங்கி: 

நம் உடலில் எலக்ட்ரோலைட் சமநிலையை கட்டுக்குள் வைத்திருக்க பொட்டாசியம் மிக அவசியமான ஒன்று. இந்த வகையில் சிவப்பு முள்ளங்கியில் பொட்டாசியம் நிறைந்துள்ளது. இது உடலில் உள்ள ரத்த அழுத்தத்தை குறைப்பதன் மூலம் உங்கள் இதய ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவும்.

ஆரோக்கியமான எலும்புகளுக்கு முள்ளங்கி: 

சிவப்பு முள்ளங்கியில் நிறைந்துள்ள கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற முக்கிய தாதுக்கள் நம் எலும்புகளை வலுப்படுத்தி ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. ஆஸ்டியோபோரோஸிஸ் மற்றும் ரியூமடாய்டு ஆர்த்ரிடிஸ் போன்ற நோய்கள் வராமல் தவிர்க்க வேண்டும் என்றால் உங்கள் தினசரி உணவில் போதுமான அளவு சிவப்பு முள்ளங்கியை சேர்த்து கொள்ளுங்கள். 

 

Image source: google 

 

 

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]