உலர் பழத்தின் ஆரோக்கிய நன்மைகள் பற்றி தெரியும்... ஆனால் சாப்பிடக்கூடிய சிறந்த நேரம் தெரியுமா?

உலர் பழங்களை சாப்பிடுவது பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. ஆனால் அவற்றை சாப்பிட சரியான நேரம் எது தெரியுமா?

Best time to eat dry fruits for weight gain new

பழுத்த பழம் ஒரு சுவை தரும் என்றால் உலர் பழங்கள் தனித்துவமான சுவையை தரக்கூடியது. அதுமட்டுமின்றி பல ஆரோக்கிய நன்மைகளுக்காக அறியப்படுகின்றன. நமது ஆரோக்கியத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குவதில் அவை முக்கிய பங்கு வகிக்கின்றன. உலர் பழங்களில் வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்தவையாக இருக்கின்றது. அவை பல்வேறு உடல் சார்ந்த செயல்பாடுகளை சரிவர செயல்பட ஆதரிக்கின்றன. உலர் பழங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை எதிகரிக்க செய்கின்றது. இவை செரிமானத்தை மேம்படுத்துகிறது, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. ஆனால் இவை அனைத்தும் சத்துக்களும் சரிவர கிடைக்க சரியான நேரத்தில் சாப்பிட வேண்டும். உலர் பழங்களை உண்பதற்கு சிறந்த நேரம் எது என்று மக்கள் அடிக்கடி கேள்வி எழுப்புவார்கள். இதை பற்றி தெரிந்து கொள்வோம்.

உலர் பழங்களை சாப்பிட சிறந்த நேரம்

dry fruit inside

இதற்கு நிலையான நேரம் இல்லை என்றாலும். நீங்கள் எந்த நேரத்திலும் அதை உட்கொள்ளலாம். காலை உலர் பழங்கள் மற்றும் பருப்புகளை சாப்பிட்டு நாளைத் தொடங்கினால் நீங்கள் நாள் முழுவதும் ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்க முடியும். காலையில் ஊறவைத்த ஒரு கையளவு பருப்புகளை முதலில் சாப்பிடுவது உடலுக்கு அதிக ஆற்றலைத் தருகிறது. இது வளர்சிதை மாற்றத்திற்கு ஒரு தொடக்கத்தை கொடுக்க எரிபொருளாக செயல்படுகிறது. இதில் இயற்கையான சர்க்கரை உள்ளதால் உடனடி ஆற்றலை வழங்குகிறது மற்றும் புத்துணர்ச்சியை உணர உதவுகிறது.

உலர் பழங்களை மாலை நேர சிற்றுண்டிக்கு உட்கொள்வது நல்லது. ஏனெனில் இது அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை வழங்குவதோடு ஆரோக்கியமற்ற பசியையும் தடுக்கும். உலர் பழங்களில் உள்ள நார்ச்சத்து உங்களை முழுதாக உணர உதவுகிறது. மாலையில் அதிகமாக சிற்றுண்டி சாப்பிடுவதற்கான வாய்ப்புகளை குறைக்கிறது. இது ஆரோக்கியமான எடையை பராமரிக்கவும் உதவுகிறது.

நட்ஸ் சாப்பிட சரியான வழி

dry fruit new inside

உலர் பழங்கள் இயற்கையில் வெப்பமானவை. எனவே அவற்றை உட்கொள்ளும் முன் அவற்றை ஊறவைக்கவும். அவை குறைந்தது 6 மணி நேரம் ஊறவைக்கப்பட வேண்டும். இது அவற்றில் உள்ள டானின் மற்றும் பைடிக் அமிலத்தை நீக்குகிறது. ஊட்டச்சத்துக்கள் சரியாக உறிஞ்சப்பட்டு அதிக நன்மைகளைப் பெறுவீர்கள்.

மேலும் படிக்க: இந்த வழிமுறைகளை கொண்டு டெங்குவிலிருந்து குடும்பத்தை பாதுகாக்கவும்

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

Image Credit: Freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP