herzindagi
amla juice uses big

இருபது மிலி நெல்லிக்காய் ஜூஸை தினமும் காலையில் குடித்து வர தொப்பை குறையும், இளமை பெருகும்!!!

உங்கள் உடல் பருமன் குறைந்து, இளமையுடன் இருக்க வேண்டுமா? எனில், தினமும் காலையில் நெல்லிக்காய் ஜூஸ் குடித்து வாருங்கள்.
Expert
Updated:- 2022-11-20, 08:00 IST

நெல்லிக்காய், நம் உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்க இயற்கை அன்னை அளித்த வரமாகும். நெல்லிக்காயில் வைட்டமின் - C உள்ளது. இது ஆரஞ்சு ஜூஸில் இருப்பதை விட இருபது மடங்கு அதிகமாகும். நெல்லிக்காயை நாம் எந்த வடிவத்திலும் எடுத்துக்கொள்ளலாம்.

இன்று நாம் நெல்லிக்காய் ஜூஸ் பற்றி தான் பார்க்கவிருக்கிறோம். தினமும் காலையில் நெல்லிக்காய் ஜூஸ் குடித்து வர, பலவித உடல் உபாதைகளை நம்மால் சரிசெய்ய முடியும். அதே சமயம், நம்மை அழகாக வைத்துக்கொள்ளவும் நெல்லிக்காய் உதவுகிறது. இது நம்முடைய முடி மற்றும் சருமத்துக்கு சிறந்தது.

ஆயுர்வேத மருத்துவ நிபுணர் திக்ஷா பவ்சர், ‘காலையிலேயே 20 மிலி நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதே, என் ஆரோக்கியத்துக்கு முக்கிய காரணம். இது என்னுடைய தைராய்டு அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. முடி உதிர்வதையும் இது குறைக்கிறது. முடி நரைப்பதையும் தடுக்கிறது. இது போன்ற பல பலன்களை பெறுவதால் தான் நெல்லிக்காயை நான் விரும்புகிறேன்.’ என்று சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

நெல்லிக்காய் ஜூஸினால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?

amla juice uses

  • இது அசிடிட்டி, வயிற்று உப்புச பிரச்சனை என இரைப்பை சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு உதவுகிறது
  • இது செரிமானத்துக்கு உதவுகிறது
  • இது சர்க்கரை மற்றும் கொலஸ்ட்ரால் அளவை குறைக்கிறது. அதனால், இதயத்துக்கு மிகவும் நல்லது
  • இதனில் உள்ள வைட்டமின் - C எதிர்ப்பு சக்திக்கு உதவும் (நம்மால் கொரோனா தாக்கத்தை மறந்துவிட முடியுமா என்ன?)
  • எடையை குறைக்கவும், சரியான விகிதத்தில் பராமரிக்கவும் உதவும்
  • இது நம்முடைய கண்களுக்கும் மிகவும் நல்லது
  • இது நமக்கு நிம்மதியான உணர்வையும் தருகிறது

அதோடு, சருமத்துக்கு மிகவும் நல்லது. ஏனெனில், இரத்தத்தை சுத்தப்படுத்தும். இதனால், பரு, சருமம் வறண்டு போகுதல், சொறி சிரங்கு, சருமம் சிவந்து போகுதல் போன்ற சரும வியாதிகள் வராமல் தடுக்கும்.

இப்போது ஆயுர்வேத பண்புகள் குறித்து பார்ப்போம்

amla juice uses

  • ரசா: இது மற்றவற்றை காட்டிலும் புளிப்பு தன்மை கொண்டது. அதாவது, லாவனா மட்டும் உவர்ப்பு தன்மை கொண்டது
  • சீமென்: குளிர்ச்சி தன்மை கொண்டது
  • விபாகம் (செரிமானம் கழித்த ஓர் உணர்வு): மதுரம்

ஆச்சார்யா கூறுகையில், நெல்லிக்காய் என்பது புத்துணர்வை அளிக்கும் ஒரு மூலிகை என்கிறார். மேலும், இது வயது முதிர்வு எதிர்ப்பு பண்பு, ஆக்சிஜனேற்ற பண்பு, நுண்ணுயிர் எதிர்ப்பு, குமட்டல் எதிர்ப்பு பண்பு, அழற்சி எதிர்ப்பு பண்பு, நீரிழிவு எதிர்ப்பு பண்பு, கல்லீரல் பாதுகாப்பு, ஹைப்போலிபிடெமிக் (கொலஸ்ட்ராலை குறைக்கும் பண்பு) ஆகியவற்றையும் கொண்டுள்ளது என்கிறார்.

உங்களுக்கு மேல் காணும் பிரச்சனைகள் இருந்தாலோ அல்லது சருமம், கண்கள், முடி மற்றும் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த நினைத்தாலோ, தினமும் நெல்லிக்காய் சாப்பிட்டு வரலாம்.

நெல்லிக்காயை எடுத்துக்கொள்ளும் வழிகள்

amla juice uses

  • 3 நெல்லிக்காயின் சாறினை குடித்து வரலாம்
  • நெல்லிக்காய் கிடைக்காவிட்டால், ஆயுர்வேத கடைகளில் கிடைக்கும் நெல்லிக்காய் பொடி அல்லது சாறை வாங்கி பயன்படுத்தலாம்

எச்சரிக்கை

எந்தவொரு மூலிகையை முயற்சித்து பார்ப்பதற்கு முன்பாக, மருத்துவர் ஆலோசனை கட்டாயம் வேண்டும். நம்முடைய உடல் இயல்பு மற்றும் வியாதி அடிப்படையில், இவற்றை எடுத்துக்கொள்ளலாமா? கூடாதா? என்பதனை மருத்துவர் தான் நமக்கு பரிந்துரைப்பார். எவ்வளவு எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற அளவையும் மருத்துவரே நமக்கு பரிந்துரை செய்கிறார்.

தினமும் காலையில் நெல்லிக்காய் சாப்பிடுவதால் என்னவெல்லாம் பயன்கள் நமக்கு கிடைக்கிறது என்பதை இந்த பதிவில் நாம் கண்டோம்.

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

Image Credit: freepik

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]